Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » குஹாகர் » வானிலை

குஹாகர் வானிலை

குஹாகர் பகுதி வருடம் முழுவதும் மிதமான பருவநிலையை கொண்டுள்ளது. மழைக்காலத்திற்கு பின்னர் வரும் காலமும், குளிர்காலமும் இங்கு விஜயம் செய்ய ஏற்ற காலமாக கருதப்படுகிறது.

கோடைகாலம்

குஹாகர் பகுதியில் கோடைக்காலம் மார்ச் மாதத்திலிருந்து மே மாதம் வரை நிலவுகிறது. இக்காலத்தில் இப்பகுதியின் வெப்பநிலை அதிகபட்சமாக 38°C வரை செல்கிறது. மேலும் அரபிக்கடலின் அருகில் இருப்பதால் ஈரப்பதமும் இக்காலத்தில் மிக அதிகமாக உள்ளது. வெயில் காய விரும்புவர்களுக்கு (வெளி நாட்டவர்க்கு) இது உகந்த காலமாகும்.

மழைக்காலம்

ஜூன் மாதத்திலிருந்து செப்டம்பர் மாத  இறுதி வரை குஹாகர் பகுதியில் மழைக்காலமாகும். அச்சமயம் இங்கு கடுமையான மழைப்பொழிவு காணப்படுகிறது. மழை எல்லாவிதத்திலும் சுற்றுலாவை பாதிக்கும் என்பதால் இக்காலத்தில் குஹாகர் பகுதிக்கு விஜயம் செய்வது உகந்ததல்ல.

குளிர்காலம்

டிசம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை உள்ள இடைப்பட்ட காலம் குளிர்காலமாக உள்ளது. இக்காலத்தில் வெப்பநிலை வெகுவாக குறைந்து குறைந்த பட்ச வெப்பநிலையாக 18°C என்ற அளவில் காணப்படுகிறது. குளிர்காலம் மிக இனிமையான சூழலுடன் வரவேற்கும் தன்மையுடன் விளங்குகிறது.