கிபி 4ஆம் நூற்றாண்டில் நாககா அரசர் நரஷங்கரால் கட்டப்பட்டதாக நம்பப்படும் நாக் ஷங்கர் கோவில் தேஜ்பூர் நகரத்துக்கு அருகில் ஜமுகிரியில் அமைந்துள்ளது. 15ஆம் நூற்றாண்டில் அஹோம் அரசர் சு-சென்-பா என்பரால் இக்கோவில் பழுது பார்க்கப்பட்டது.
கோவிலை ஒட்டி அமைந்துள்ள பெரிய குளத்தில் சிறிய மிருது ஓடு ஆமைகளும், மீன்களும் இருப்பதைக் காணலாம். இக்கோவிலும், அருகில் உள்ள இடமும் பல மயில்கள், மான்கள், மலைப்பாம்புகள் போன்ற ஏராளமான விலங்குகளின் சரணாலயமாக திகழ்கிறது. நாக் ஷங்கர் கோவிலின் பிரதான ஈர்ப்பாக மயில்கள் விளங்குகின்றன.
தேஜ்பூர் நகரத்தில் இருந்து 47கிமீ தொலைவில் உள்ள ஜமுகிரிக்கு செல்ல சுற்றுலா வாகனங்கள் சோனித்பூர் மாவட்டத்தில் கிடைக்கின்றன. பயணிகள் தேசிய நெடுஞ்சாலை எண் 52ல் பயணித்து ஜமுகுரிகாட்டை அடையவேண்டும்.



Click it and Unblock the Notifications