Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » தேஜ்பூர் » வானிலை

தேஜ்பூர் வானிலை

தேஜ்பூரில் வருடம் முழுவதும் மிதமான வானிலை நிலவுவதால் எந்த பருவத்தில் பயணம் மேற்கொள்ளலாம். எனினும் தேஜ்பூர் செல்ல சிறந்த பருவமாக மழைக்காலத்துக்கு அடுத்த மாதங்களான அக்டோபர் நவம்பர் கருதப்படுகிறது. குறைந்த அளவில் பெய்யும் மழையால் ஈரப்பதம் குறைந்து பயணிக்க சிறந்த பருவமாக கருதப்படுகிறது.

கோடைகாலம்

மார்ச் மாதத்தில் துவங்கும் கோடைகாலம் ஜூன் இறுதி வரை நீள்கிறது. சராசரியாக 36டிகிரி வரை வெப்பம் நிலவுகிறது. ஈரப்பதத்துடன் கூடிய கடுமையான வெயில் மே மாதத்தில் உச்சக்கட்டமாக இருக்கிறது. இப்பருவத்தில் பயணிக்கும் மக்கள் பருத்தி ஆடைகள் எடுத்துச் செல்வது அவசியம்.

மழைக்காலம்

ஜூனில் துவங்கி செப்டம்பர் வரை நீளும் மழைக்காலத்தில் தென்மேற்கு பருவ மழை காரணமாக அதிக அளவிலான மழை பெய்கிறது. அவ்வப்போது பெய்தாலும் கடுமையான பெய்யும் மழை சிலநேரங்களில் கடுமையாக பத்து நிமிடங்கள் மட்டுமே பெய்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

குளிர்காலம்

டிசம்பரில் துவங்கும் குளிர்காலம் ஃபிப்ரவரி வரை நீள்கிறது. இமயமலை அடிவாரத்தில் இருப்பதால் இந்நகரத்தின் குளிர்காலங்கள் மிகவும் குளிராக இருக்கின்றன. அதிகபட்சமாக 22டிகிரிகளும் குறைந்தபட்சமாக 7டிகிரியும் பதிவு செய்யப்படுகிறது.