மேகமலை மலைப்பகுதிகளில் பிறக்கும் சின்ன சுருளி நீர்வீழ்ச்சியானது மேகமலை நீர்வீழ்ச்சி என்று பொருள் தரும் 'க்ளெவுட்லேண்ட் பால்ஸ்' என்றும் அழைக்கப்படுகிறது. தேனியிலிருந்து 54 கிமீ தொலைவில் உள்ள இந்த நீர்வீழ்ச்சி கோம்பைத்தொழு என்ற கிராமத்திற்கு அருகில் உள்ளது.
ஆரவாரமான சத்தம் மற்றும் வெள்ளிக் கோடு போன்ற மேகங்களுக்கிடையில் விழுந்து கொண்டிருக்கும் அருவி தொலைதூரம் மற்றும் அருகில் இருக்கும் சுற்றுலாப் பயணிகளை அழைக்கும் வேலையை செவ்வனே செய்து வருகின்றது.
இந்த சின்ன சுருளி நீர்வீழ்ச்சி ஒரு அற்புதமான சுற்றுலாத் தலமாகவும், விடுமுறையைக் கொண்டாடும் இடமாகவும் உள்ளது.



Click it and Unblock the Notifications