முகப்பு » சேரும் இடங்கள் » தேனி » வானிலை

தேனி வானிலை

வானிலை முன்னறிவிப்பு
Madras, India 25 ℃ Clear
காற்று: 9 from the NE ஈரப்பதம்: 79% அழுத்தம்: 1013 mb மேகமூட்டம்: 0%
5 அன்றைய தின வானிலை முன்னறிவிப்பு
நாள் அவுட்லுக் அதிகபட்சம் குறைந்தபட்சம்
Sunday 18 Feb 22 ℃ 71 ℉ 29 ℃84 ℉
Monday 19 Feb 21 ℃ 69 ℉ 29 ℃84 ℉
Tuesday 20 Feb 22 ℃ 71 ℉ 29 ℃84 ℉
Wednesday 21 Feb 21 ℃ 70 ℉ 29 ℃84 ℉
Thursday 22 Feb 22 ℃ 71 ℉ 29 ℃85 ℉

தேனிக்கு வர மிகவும் ஏற்ற பருவம் அதன் குளிர்காலமாகும். அக்டோபர் மாதம் தொடங்கி பிப்ரவரி மாதம் வரை நீடிக்கும் இந்த குளிர்காலத்தில் தேனியின் சராசரி வெப்பநிலை 25 டிகிரி மட்டுமே. மழைக்காலமும் தேனியைச் சுற்றிப் பார்க்க ஏற்ற பருவமாக இருந்தாலும், குளிர் காலம் அதைவிட சிறந்த அனுபவத்தை கொடுப்பதாக இருக்கும்.

கோடைகாலம்

தேனியில் மார்ச் மாதம் தொடங்கும் கோடைக்காலம் கடும் வெப்பத்துடன் மே மாதம் வரை நீடித்திருக்கும். இந்த நாட்களில் 29 டிகிரி முதல் 40 டிகிரி வரை வெப்பநிலை இருக்கும். எனவே இந்த நாட்கள் தேனிக்கு சுற்றுப் பயணம் வர ஏற்ற நாட்களில்லை. அப்படியிருந்தும் நீங்கள், இந்த நாட்களில் தேனி செல்ல விரும்பினால் மெல்லிய காட்டன் உடைகளையும், சூரிய வெப்பத்திலிருந்து காக்க உதவும் க்ரீம்களையும் கொண்டு செல்லவும்.

மழைக்காலம்

பெரும் ஆரவாரத்துடன் கூடிய மழைப்பொழிவினை கொண்டு வரும் மழைக்காலம் தேனியின் தகிக்கும் வெப்பத்தை குறைக்கும் வேலையை செவ்வனே செய்யும். தேனியின் மழைக்காலம் ஜுன் மாதம் முதல் ஆகஸ்டு மாதம் வரை நீடித்திருக்கும். இந்த நாட்களில் தேனி குளிர்ச்சியாகவும், மகிழ்ச்சிகரமானதாகவும் இருக்கும். இந்நாட்களில் நிரம்பி வழியும் அணைகளும், நீர்வீழ்ச்சிகளும் உங்களுடைய கண்களுக்கு குளிர்ச்சியூட்டும்.

குளிர்காலம்

நீண்ட குளிர்காலத்ததையுடைய தேனி மாவட்டத்தில் அக்டோபர் மாதம் தொடங்கும் குளிர்காலம் பிப்ரவரி மாதம் வரை நீடித்திருக்கும். இந்த நாட்களில் தேனியின் வெப்பநிலை 20 டிகிரி முதல் 29 டிகிரி வரை இருக்கும் மற்றும் 29 டிகிரியை கண்டிப்பாக தாண்டாது. சுற்றிப்பார்க்கவும், பிற சுற்றுலா விளையாட்டுகளை செய்யவும் மிகவும் ஏற்ற பருவமாக இந்த குளிர்காலம் உள்ளது. எனவே தேனிக்கு சுற்றுலா வர மிகவும் ஏற்ற பருவமாக குளிர்காலம் உள்ளது.