Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » தேன்மலா » ஈர்க்கும் இடங்கள் » சூழலியல் சுற்றுலா திட்ட வளாகம்

சூழலியல் சுற்றுலா திட்ட வளாகம், தேன்மலா

17

சூழலியல் சுற்றுலா திட்டம் என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள இந்த இயற்கை சுற்றுலா வளாகமானது இந்தியாவிலேயே முதன் முதலாக அமைக்கப்பட்ட ஒன்றாகும். இந்த வனப்பகுதியின் தனித்தன்மையான இயற்கையமைப்பு, தாவர செழிப்பு மற்றும் காட்டுயிர் அம்சங்களுக்காக இப்படி ஒரு அந்தஸ்து இந்த பகுதிக்கு கிடைத்துள்ளது.

இந்த இயற்கை சுற்றுலா வளாகமானது 5 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொன்றும் ஒவ்வொரு குறிப்பிட்ட சுற்றுலா அம்சங்களை உள்ளடக்கியுள்ளது. இவற்றில் இயற்கை ரசிகர்கள் மற்றும் அதிதீவிர சாகச விரும்பிகள் போன்ற அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்துள்ளன.

இந்த இயற்கை சுற்றுலா வளாகத்தின் கலாச்சார மண்டலத்தில் ஒரு திறந்தவெளி அரங்கு, உள்ளூர் பெண்களால் நடத்தப்படும் அங்காடிகள் மற்றும் ஒரு இசை நீரூற்று போன்றவை அமைந்துள்ளன. சாகசச்சுற்றுலா மண்டலமானது காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்கப்படுகிறது.

இந்த பிரிவில் இயற்கை நடைப்பயணப்பாதைகள், புதர்ப்பாதைகள், தாமரைக்குளம், சைக்கிள் மலைப்பயணம், பாறையேற்றம் மற்றும் ஆறு கடத்தல் போன்ற அம்சங்கள் அடங்கியுள்ளன.

பொழுதுபோக்கு மண்டலத்தில் நடைபாதைகள், பலகைப்பாலம், தொங்குபாலம், சிற்பப்பூங்கா, ஓய்வுத்தளங்கள் மற்றும் வனப்பூங்கா போன்றவை காணப்படுகின்றன. மான்கள் பாதுகாப்பு மண்டலத்தில் காட்டு மான்கள் வசிக்கின்றன. இங்கு ஒரு சூழலியல் பூங்கா ஒன்றும் குழந்தைகளுக்காக அமைக்கப்பட்டுள்ளது.

இந்த இயற்கை சுற்றுலா வளாகத்திற்கு விஜயம் செய்யும் சுற்றுலாப்பயணிகளுக்கு வழிகாட்டவும், உதவவும் பயிற்சி பெற்ற ஊழியர்கள் இங்கு நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே கவலை இல்லாமல் பயணிகள் இந்த வளாகத்தில் இயற்கை சுற்றுலாவை மேற்கொள்ளலாம். திட்டமிடப்பட்ட வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ள இயற்கைப்பூங்கா என்பதால் இது சுற்றுலாப்பயணிகளால் விரும்பி விஜயம் செய்யப்படுகிறது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
31 Mar,Tue
Return On
01 Apr,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
31 Mar,Tue
Check Out
01 Apr,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
31 Mar,Tue
Return On
01 Apr,Wed