குடக்கல்லு எனும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஸ்தலம் குடும்பத்தினருடன் சிற்றுலாச் சென்று மகிழ்வதற்கேற்ற சூழலைக்கொண்டுள்ளது. குடக்கல்லு எனும் பெயருக்கு குடைப்பாறை என்பது பொருளாகும். காளான் போன்ற அல்லது குடை போன்ற வடிவத்தில் செதுக்கப்பட்டிருக்கும் பாறை அமைப்புகள் குடக்கல்லு என்றழைக்கப்படுகின்றன.
4000 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக கருதப்படும் இந்த குடக்கல்லு பாறைகள் சமூகத்தில் முக்கிய அந்தஸ்து கொண்டவர்களின் சமாதி மீது எழுப்பப்பட்டிருக்கின்றன. இது முற்காலத்தில் நிலவிய வழக்கம் என்றாலும், இந்த ஸ்தலமானது இன்றும் ஒரு கல்லறை மைதானம் போன்றே காட்சியளிக்கிறது.
அப்படி சொல்வதால் இந்த இடத்தை குறைத்து மதிப்பிட்டு விடக்கூடாது. கடந்து போன ஒரு யுகத்தின் மிச்சங்களாக இந்த குடக்கல்லு அமைப்புகளை நாம் இந்த ஸ்தலத்தில் பார்க்கும் போது ஒரு சிலிர்ப்பு நம் ஓடுவதை இங்கு பார்த்தால் உணர முடியும்.



Click it and Unblock the Notifications