திரிசூர் நகரத்திலிருந்து 15 கி.மீ தூரத்திலுள்ள இந்த பீச்சி அணை திரிசூர் பகுதியை ஒட்டியுள்ள கிராமப்புறங்களுக்கான நீர்ப்பாசன தேவைக்காக நிர்மாணிக்கப்பட்டுள்ளது. பின்னாளில் இந்த அணையை ஒட்டியுள்ள பிரதேசமும் அழகுபடுத்தப்பட்டு நீருற்றுகள் மற்றும் பசுமையான மலர்ச்செடிகளால் அழகுப்படுத்தப்பட்டுள்ளது.
பார்வையாளர்களை வெகுவாக கவரும் வகையில் கலையம்சத்துடன் பராமரிக்கப்பட்டுள்ள பலவகைத் தாவரங்களை இங்கு பார்க்கலாம். மணலி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இந்த பீச்சி அணை மற்றும் அதைச் சுற்றியுள்ள தோட்டப்பூங்கா போன்றவை ஒரு எழில் நிரம்பிய சிற்றுலா ஸ்தலமாக பிரசித்தி பெற்றுள்ளது.



Click it and Unblock the Notifications