Search
  • Follow NativePlanet
Share
» »பாலி நாட்டிற்கு பேச்சுலர் டிரிப் பிளான் பண்ணுறீங்களா? இந்த இடங்களை மறக்காம பார்த்து விட்டு வாங்க

பாலி நாட்டிற்கு பேச்சுலர் டிரிப் பிளான் பண்ணுறீங்களா? இந்த இடங்களை மறக்காம பார்த்து விட்டு வாங்க

இந்தோனேசியாவில் உள்ள பாலித்தீவு பல தீவுகளைக் உள்ளடக்கியதாகும். உலகில் உள்ள மிக பிரபலமான சுற்றுலா தலங்களில் இதுவும் ஒன்று. இங்கு அழகான கடற்கரைகள், ஸ்கூபா டைவிங், அழகான கலாச்சாரம், பாலினீஸ் உணவுகள் போன்ற பல பிரபலமான அம்சங்கள் உள்ளன. பேச்சுலர்கள் நண்பர்களாக சுற்றுலா செல்ல ஏற்ற இடம் பாலித்தீவு. பேச்சுலர்கள் பயணம் சென்று தங்களின் பொழுதை கழிக்க பாலிதீவில் உள்ள முக்கியமான 10 இடங்கள் பற்றி தெரிந்து தெரிந்து கொள்ளலாம்.

Indonesia

உலுவட்டு கோயில்

கடலைப் பார்த்து ரசிக்கும் வகையில் ஒரு குன்றின் மீது அமைந்துள்ளது உலு வெட்டு கோயில். அற்புதமான சூரிய அஸ்தமன காட்சிகளையும், மயக்கும் கெச்சக் நடன நிகழ்ச்சிகளையும் இங்கு சென்று பார்வையிடலாம். மேலும் கீழே மோதும் அலைகளும், தங்க நிற வானமும் இங்கு ஒரு மறக்க முடியாத அனுபவத்தை ஏற்படுத்துகின்றன.

தெகல்லாலாங் மொட்டை மாடி வயல்கள்

உபுட்டில் உள்ள இந்த மொட்டை மாடி வயல்கள் பார்ப்பதற்கு ஒரு புது அனுபவத்தை தருகின்றன. மாடிகளில் விளையும் நெற்பயிர்கள் இயற்கை மற்றும் கலாச்சாரத்தின் அழகை விளக்குகிறது. மொட்டை மாடிகளில் நடந்து சென்று புகைப்படங்கள் எடுப்பதற்கும் ஏற்ற இடமாக இது உள்ளது.

ஜிம்பரன் விரிகுடா

இங்குள்ள கடற்கரையில் அதன் அழகை ரசித்துக் கொண்டே அங்கு விற்கும் கிரில் செய்யப்பட்ட மீன்களை ருசித்து சாப்பிடுவது மிக இனிமையான ஒன்றாகும். பாலியில் உங்கள் பொழுதை நண்பர்களுடன் செலவிடுவதற்கு இது ஒரு சிறந்த இடமாகும்.

மவுண்ட் பதுர் சூரிய உதய மலையேற்றம்

பதூர் மலையில் ஏறி விடியற்காலையில் வேறு எங்கும் காண முடியாத சூரிய உதயத்தை காணலாம். மேகங்கள் கீழே மிதப்பது போன்ற உணர்வுடன் சூரியன் அடிவானத்தில் உதிப்பதை பார்க்கும் அனைவரையும் பரவசத்தில் ஆழ்த்தும் காட்சியாகும்.

நுசா பெனிடா

பாலித்தீவில் இருந்து ஒரு சிறிய அழகிய படகு பயணம் மூலம் சென்று பார்க்க வேண்டிய இடம் நுசா பெனிடா. இங்குள்ள கரடு முரடான பாறைகள், தெள்ளத் தெளிவான நீர் மற்றும் பலரும் அறியாத கடற்கரைகளின் சொர்க்கமாக இருக்கும். மேலும் இங்கு பிரபலமான கெலிங்கிங் கடற்கரை மற்றும் ஏஞ்சல்ஸ் பில்லாபோங்கை நண்பர்களுடன் சேர்ந்து சுற்றுலா செல்ல நல்ல இடமாகும்.

செமினியாக் கடற்கரை

நீங்கள் ஒரு பரபரப்பான கடற்கரை வாழ்க்கை விரும்பினால் செமிலியாக் கடற்கரை ஒரு சிறந்த இடமாகும். நவநாகரிக கடற்கரை கிளப்கள், தங்க மணல்கள் மற்றும் பிரமிக்க வைக்கும் சூரிய அஸ்தமனங்கள் இங்கு கண்டிப்பாக சென்று பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்றாகும். கடலில் ஒரு காக்டெய்லை அனுபவிக்கவும், மென்மையான அலைகளின் உலாவும் ரசிக்க இது ஒரு சிறந்த இடமாகும்.

தீர்த்த எம்புல் கோயில்

உபுத்தில் உள்ள இந்த புனித நீர் கோயில், அதன் புனித நீரூற்று நீருக்கு பெயர் பெற்றது. இங்கு சுற்றுலா செல்வோர் அதன் ஆன்மீக சடங்கில் பங்கேற்கலாம். இது ஒரு அமைதியான மற்றும் கலாச்சார ரீதியான அனுபவமாக இருக்கும்.

உபுட் குரங்கு காடு

உபுட் குரங்கு காடு பழங்கால கோயில்களும், விளையாட்டுத்தனமான குரங்குகளும் நிறைந்த ஒரு பசுமையான காடு.இங்கு குரங்குகள் உங்கள் மீது ஊசலாடும் போது புனித சிதிலமடைந்த கட்டிடங்களுக்கிடையே நடந்து செல்வது மன மகிழ்ச்சியை தரும்.நண்பர்களுடன் ஜாலியாக பொழுதை கழிக்க ஏற்ற இடம்.ஆனால் குரங்குகளிடம் இருந்து உங்கள் உடமைகளை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.

பாலி ஸ்விங்

இந்த பிரபலமான பாலி ஸ்விங் சென்று ஸ்விங் செய்து உங்கள் நண்பர்களுடன் எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்வதற்கு சரியான இடமாகும். பசுமையான காடுகள் மற்றும் வயல்களுக்கு மேல் அமைந்திருக்கும் இந்த ஸ்விங் விளையாட்டு உங்களுக்கு உச்சகட்ட வெப்பமண்டல அதிர்வுகளை தரும் ஒரு உற்சாக அனுபவமாக இருக்கும்.

பெசாகி கோயில்

பாலியின் தாய் கோயில் என்று அழைக்கப்படும் பெசாகி கோயில், பெசாகித் தீவின் மிகப்பெரிய மற்றும் மிக முக்கியமான கோயிலாகும். அதுவும் மலையின் சரிவுகளில் அமைந்துள்ள இந்த கோயில் பாலியின் அழகிய காட்சிகளையும் ஆன்மீகத்தின் அமைதியும் நண்பர்களுடன் நிதானமாக ரசிக்க ஓர் சிறந்த இடமாகும்.

More News

    Read more about: bali
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+