Search
  • Follow NativePlanet
Share
» »சுதந்திர தினத்தில் சுதந்திரமாக பறக்க பத்து வழிகள்

சுதந்திர தினத்தில் சுதந்திரமாக பறக்க பத்து வழிகள்

இதோ வந்துவிட்டது இந்திய தேசமே எதிர்பார்த்துக் காத்திருந்த சுதந்திரத்தின் 72 வது ஆண்டு. விடுதலைப் பெற்று 71 ஆண்டுகள் கடந்துவிட்டோம். இன்னமும் எத்தனையோ பிரச்சனைகள், போராட்டங்கள் என வாழ்வு நகர்ந்துகொண்ட

By Udhaya

இதோ வந்துவிட்டது இந்திய தேசமே எதிர்பார்த்துக் காத்திருந்த சுதந்திரத்தின் 72 வது ஆண்டு. விடுதலைப் பெற்று 71 ஆண்டுகள் கடந்துவிட்டோம். இன்னமும் எத்தனையோ பிரச்சனைகள், போராட்டங்கள் என வாழ்வு நகர்ந்துகொண்டே இருக்கிறது. இருந்தபின்னும் நாம் அனைவரும் தேசப்பற்றோடு நம் தேசத்தின் விடுதலைக்காக போராடியவர்களைப் பற்றி நினைத்து அவர்களின் தியாகங்களை மதிப்பது ஒரு புறம். இந்த நன்னாளில் கவலை மறந்து சிறகடித்து பறக்க சில யோசனைகளை நேட்டிவ் பிளானட் தமிழ் உங்களுக்கு வழங்குகிறது. மறக்காம இதுபோன்ற கட்டுரைகளை பெற மே ல இரு க் குற பெல் பட்டன அழுத்தி சப்ஸ்கிரைப் பண்ணுங்க.

சுதந்திர தினத்தில் சுதந்திரமாக பறக்க | தனிமை பயணம் செல்லுங்க

சுதந்திர தினத்தில் சுதந்திரமாக பறக்க | தனிமை பயணம் செல்லுங்க

தனிமையில் பயணம் செல்வது மிகவும் சிறப்பான ஒரு விசயமாகும். சுற்றுலாக்கள் எத்தனை வகைப் பட்டாலும், தனிமையில் செல்லும் சுற்றுலா உங்கள் தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.

சுதந்திரத்தின் உண்மையான பொருளை உங்களுக்கு எடுத்துரைக்கும்.

விடுதலை தினத்தில் நீங்கள் செல்லும் தனிமை ப் பயணம் உங்களது வாழ்வில் நிச்சயம் மறக்க முடியாத ஒரு நிகழ்வாக இருக்கும். இந்த உலகத்தைத் தாண்டி, சமூக கட்டுப்பாடுகளைத் தாண்டி ஒரு அடி முன் எடுத்து வைப்பது என்பது மிகவும் சிறப்பான ஒரு விசயமாகும். அப்படி உங்கள் சொந்த ரிஸ்க்கில் பல பயணங்களை மேற்கொள்ளும் பழக்கத்தை இந்த சுதந்திர தினத்தில் துவங்குங்கள். இனி உங்கள் சிறகுகள் விரியட்டும். விரிக்கக் கற்றுக் கொள்ளும் தினமாக இந்த நாள் அமையட்டும்.

சுதந்திர தினத்தில் சுதந்திரமாக பறக்க | பெற்றோருக்கு பரிசு கொடுங்கள்

சுதந்திர தினத்தில் சுதந்திரமாக பறக்க | பெற்றோருக்கு பரிசு கொடுங்கள்

பரிசு எல்லா நாட்களிலும்தான் கொடுக்கிறோம் என நினைக்கவேண்டாம். இது சுற்றுலாவுக்கான பரிசு. அன்பளிப்பு என்பது வெறும் பொருளாக மட்டும் இல்லாமல், நினைவுகூறத்தக்க, அன்பை உணரத்தக்கதாக இருக்கவேண்டும்.

உங்கள் பெற்றோருக்கு நீண்ட தூரப்பயணம் மேற்கொள்ளும் வகையில் சிறப்பான ஒரு சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்து கொடுங்கள். உங்கள் பெற்றோருக்கான நேரத்தை அவர்களுக்கே கொடுங்கள். உங்களுக்காக உங்கள் குடும்பத்துக்காக உழைத்த அவர்களுக்கு சுதந்திரம் கொடுங்கள். அவர்கள் இத்தனை வருடங்களாக உங்களை பராமரிப்பதிலேயே காலத்தை செலவிட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு கொஞ்சம் தனிமையையும், மீண்டும் பழமையை நினைத்து பார்க்கும் வாய்ப்பை வழங்குங்கள்.

 சுதந்திர தினத்தில் சுதந்திரமாக பறக்க | பெற்றோருடன் சுதந்திரமாய் பயணியுங்கள்

சுதந்திர தினத்தில் சுதந்திரமாக பறக்க | பெற்றோருடன் சுதந்திரமாய் பயணியுங்கள்


மற்ற எல்லா நாட்களிலும் குடும்பம் வேலை என்று ஓடோடிய நீங்கள் இன்று உங்கள் குடும்பத்தை வேலையை விட்டுவிட்டு, உங்களை வளர்த்து ஆளாக்கி திருமணம் செய்து வைத்து சமூகத்தில் குறிப்பிட்ட அளவுக்கு பெயர் பெற்றுத் தந்த பெற்றோர்களுடன் பயணியுங்கள். அவர்களுக்கு தங்கள் குழந்தையுடன் கழித்த பழைய நினைவுகளை திரும்ப மீட்டுக் கொடுங்கள். சுதந்திரத்தை அன்பை காதலை திருப்பி கொடுங்கள். பெற்றோர்கள் இனி பேரக் குழந்தைகளை மட்டும் கவனித்துக் கொள்வதில் திருப்தியடைவதில்லை. அவர்களுக்கு உங்கள் மேலும் அக்கறை இருக்கிறது. அலுவலகத்தில், வெளியுலகில் இருக்கும் கோபத்தை எல்லாம் பெற்றோரிடம் கொட்டி அவர்கள் மனதை காயப்படுத்தியிருப்போம். அதை அவர்கள் பெரும்பாலும் மறந்திருப்பார்கள்தான். இருந்தாலும் மன்னிப்பு கேட்பதில் தவறே இல்லை. சுதந்திர தினத்தில் அவர்களுடன் சுதந்திர காற்றை சுவாசியுங்கள்.

 சுதந்திர தினத்தில் சுதந்திரமாக பறக்க | குழந்தைகளுக்கு தேசப் பற்றை ஊட்டும் இடங்கள்

சுதந்திர தினத்தில் சுதந்திரமாக பறக்க | குழந்தைகளுக்கு தேசப் பற்றை ஊட்டும் இடங்கள்


நம் குழந்தைகள் நம்மைப் போலல்ல. அவர்கள் புத்திசாலிகள் என்று நாமே புகழ்ந்து கொள்வோம். அதில் குறை ஏதும் சொல்லவில்லை. ஆனால் நம் தேசத்தின் வரலாறு பல குழந்தைகளுக்கு தெரிவதே இல்லை. நம் நாடு சுதந்திரம் அடைந்து 72 வருடங்களை எட்டுவதற்குள் சுதந்திரம் பற்றி பெரிய அளவிலான உண்மைகள் தெரியாமலேயே ஒரு தலைமுறை வளர்ந்து வருகிறது என்பதை பார்க்கும்போது அச்சப்படவேண்டும். ஏனெனில் குழந்தைகள் ஏட்டுக் கல்வியை தவிர வெளியில் ஏதும் படிப்பதில்லை. புத்தகங்கள் வாசிப்பதில்லை. உலக அறிவு பெரும்பாலும் மந்தமாகவே உள்ளது. இது இப்படி இருக்க ஓரளவுக்கு இது பற்றி தெரிந்தவர்களுக்கும் வட இந்திய தேசிய விடுதலைப் போராட்ட வீரர்கள் பற்றியும் அவர்கள் ஆற்றிய அறப்பணிகள் பற்றியும் தெரிந்த அளவுக்கு கூட தமிழகத்தில் இருந்து போராடிய வீரர்களைப் பற்றி தெரிவதில்லை.

முதலில் ஒன்று செய்யுங்கள். பாஞ்சாலங்குறிச்சி, பாளையம்கோட்டை, மருதுசகோதரர்கள், வஉ சிதம்பரனார், வாஞ்சிநாதன் என தமிழகத்தில் இருக்கும் விடுதலை போராட்ட வீரர்கள், அவர்களின் பகுதிகள், வரலாறு போன்றவற்றை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுங்கள். முடிந்தால் இதுபோன்ற இடங்களுக்கு நேரடியாக அழைத்து ச் செல்லுங்கள்.

 சுதந்திர தினத்தில் சுதந்திரமாக பறக்க | திட்டமிடாமல் பயணியுங்கள்.

சுதந்திர தினத்தில் சுதந்திரமாக பறக்க | திட்டமிடாமல் பயணியுங்கள்.

இந்த தினத்தில் இங்கு பயணிக்கபோகிறோம். இங்கெல்லாம் செல்லவிருக்கிறோம். இத்தனை மணிக்கு திரும்பி வருகிறோம் அடுத்த நாள் அலுவலகம் செல்கிறோம் என்று இல்லாமல், எந்த வித முன் திட்டமும் இல்லாமல் ஒரு இடத்துக்கு பயணியுங்கள். அதில் வரும் நிறை குறைகளை நீங்களாகவே சமாளித்து வெளியே வாருங்கள். அப்போது உங்கள் மீது ஒரு நம்பிக்கை உங்களுக்கே பிறக்கும். இதன்படி உங்களை நீங்கள் குறைத்து மதிப்பிடுவதை நிறுத்துவீர்கள்.

மொபைல், லேப்டாப் போன்ற தொலைத்தொடர்பு சாதனங்கள் இன்றியமையாதவைதான் என்றாலும் அதை அணைத்து வைத்து பயன்படுத்துங்கள். யார் துணையுமின்றி உங்களால் எவ்வளவு நேரம் இருக்க முடிகிறது என்று சுய பரிசோதனை செய்து கொள்வோம்.

 சுதந்திர தினத்தில் சுதந்திரமாக பறக்க | மொழி தெரியாத இடத்துக்கு

சுதந்திர தினத்தில் சுதந்திரமாக பறக்க | மொழி தெரியாத இடத்துக்கு

சுற்றுலா, சுதந்திரம் என்றவுடன் உள்ளூருக்குள்ளேயே பயணித்து திரும்பி வருவதென்பது அல்ல. மொழி தெரியாத வேற்று ஒரு மாநிலத்துக்கு சென்று அங்குள்ள மொழிகளை முடிந்த அளவு புரிந்து அல்லது தெரிந்து கொண்டு அவற்றின் மூலம் குறைந்த பட்சம் ஒரு நாளாவது தாக்குப்பிடிக்க முடிகிறதா என்பதை பரிசோதித்திருக்கிறீர்களா. இல்லை என்றால், வட மாநிலத்துக்கு செல்லுங்கள்.

மும்பை, பெங்களூர், டெல்லி, கேரளம் தவிர்த்து பிற இடங்களில் உங்களுக்கு மொழி பிரச்னை வரலாம். ஆங்கிலம் அந்த அளவுக்கு மற்ற பகுதியினருக்கு தெரிந்திருக்காது, ஆங்கிலத்தின் உதவியை நாடாமல் முடிந்தவரை செயல்படுங்கள். உங்களுக்குள் புதிய உற்சாகம் பிறக்கும். உங்கள் தன்னம்பிக்கை உயரும். இது புதிய ஒரு மொழியைக் கற்றுக் கொள்ள உங்களை தூண்டிவிடும்.

சுதந்திர தினத்தில் சுதந்திரமாக பறக்க | விடுதலையில் முக்கிய பங்காற்றும் இடங்களுக்குச் செல்லுங்கள்

சுதந்திர தினத்தில் சுதந்திரமாக பறக்க | விடுதலையில் முக்கிய பங்காற்றும் இடங்களுக்குச் செல்லுங்கள்

உங்களுக்கு சுற்றுலா செல்ல மிகவும் பிடித்திருக்கும். மலைகளும் ஆறுகளும் ஏரி மேடுகளும் பல இடங்களில் நீங்கள் அலைந்து திரிந்திருப்பீர்கள்தான். ஆனால் சுதந்திரத்தின் தாகம் என்பதை உங்களுக்கு உணரச் செய்யாமல் பள்ளி கல்லூரிகள் கொண்டு சென்றுவிட்டன. அவற்றைப் பற்றி தெரிந்து கொள்ள அருங்காட்சியகங்களுக்கும் விடுதலை வீரர்கள் நினைவிடங்களுக்கும் பயணிக்கவேண்டும்.

டெல்லி, மும்பை, சென்னை என முக்கியமான இடங்களில் அருங்காட்சியகங்கள் சுதந்திர போராட்டத்தைப் பற்றி பல அரிய தகவல்களுடன் அமைக்கப்பட்டிருக்கும். அவற்றை கண்டு நாட்டுப் பற்றுடன் போராடி சுதந்திரம் பெற்றுத் தந்த அருபெரும் தலை வர்களைப் பற்றியும் அவர்களது வாழ்வு பற்றியும் தெரிந்துகொள்ளலாம்.

 சுதந்திர தினத்தில் சுதந்திரமாக பறக்க | முன் பின் தெரியாதவர்களுடன் மலையேற்றம்

சுதந்திர தினத்தில் சுதந்திரமாக பறக்க | முன் பின் தெரியாதவர்களுடன் மலையேற்றம்

மலையேற்றம் உடலுக்கும் உள்ளத்துக்கும் நல்லது. புத்துணர்ச்சியை உருவாக்கும் சிறந்த மருந்தாகும். சுற்றுலாவுடன் மனதையும் ஒருங்கே சுறுசுறுப்பாக்கும் மலையேற்றம் அல்லது டிரெக்கிங் பொதுவாக குழுவாக செல்வது வழக்கம். இந்த முறை சுதந்திர தினத்தை போற்றும் வகையில் தன்னந்தனியே யாரோ முன்பின் தெரியாதவர்களுடன் மலையேற்றம் செய்து பாருங்களேன்.

கடைசி இரண்டும் பெண்களுக்கு மட்டும்

சுதந்திர தினத்தில் சுதந்திரமாக பறக்க | மனிதி எழுந்து வா

சுதந்திர தினத்தில் சுதந்திரமாக பறக்க | மனிதி எழுந்து வா


வீட்டில் சமயற்கட்டில் கரித்துணியோடு புடவை முந்தானையில் வியர்வை துடைத்து வாழும் அடுப்படி வாழ்விலிருந்து வெளியே எழுந்து வா மனிதி. சுதந்திரக் காற்றை சுவாசி. பள்ளிப்படிப்பு வரை விட்டதே பெரிய விசயம் என நினைத்து சுருங்கி இருந்துவிடாதீர்கள். பெண்களே உங்கள் கையில் உலகம் வந்துவிட்டது. இனி நீங்களே விஞ்ஞானிகள், நீங்களே மருத்துவர்கள், நீங்களே மக்கள் பிரதிநிதிகள். ஆண் பெண் சமம் என்றால், உலகில் அலைந்து திரிந்து ரசிக்க உங்களுக்கும் உரிமை இருக்கிறது. வாருங்கள் இந்த சுதந்திரம் நாட்டுக்கு மட்டுமல்ல உங்களுக்கும்.

 சுதந்திர தினத்தில் சுதந்திரமாக பறக்க | பெண்களுடன் இணையுங்கள்

சுதந்திர தினத்தில் சுதந்திரமாக பறக்க | பெண்களுடன் இணையுங்கள்

பெண்கள் அமைப்புடன் சேர்ந்து திட்டமிடுங்கள். சுற்றுலா செல்லுங்கள். பெண்கள் நல முன்னேற்றத்துக்கு உறுதி கொள்ளுங்கள். திட்டமிட்டு செயல்படுங்கள். உங்களுடன் அருகாமை பெண்களையும் தெளிய வையுங்கள். அறியாமை நீங்கி நல் வழிப்படுத்துங்கள். சுதந்திர தினத்தில் உங்களுடன் அவர்களும் சிறகடித்து பறந்து வரட்டும். இனிய விடுதலை நாள் வாழ்த்துக்கள்.

More News

Read more about: travel india chennai
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+