Search
  • Follow NativePlanet
Share
» »இந்தியர்களின் விசா செலவுகளை மிச்சப்படும் உலகின் 9 சூப்பர் நாடுகள்

இந்தியர்களின் விசா செலவுகளை மிச்சப்படும் உலகின் 9 சூப்பர் நாடுகள்

உலகை சுற்றிப் பார்ப்பதென்பது அனைவருக்குமான கனவு ஆகும். ஆனால், விசா செலவுகள் மற்றும் பயணச் செலவுகள் ஆகியன அந்த கனவை தடுக்கக்கூடும். ஆனால் இந்தியர்கள் இதை பற்றி கவலைப்படாமல், விசா எடுப்பதற்கு அதிக பணம் செலவு செய்து காத்திருக்க அவசியமே இல்லாத 9 நாடுகள் உள்ளன. இந்த நாடுகள் இந்தியர்களை விசா இல்லாமல் தங்கள் நாட்டிற்கு வர அனுமதி வழங்கி உள்ளன.

Airport

1. நேபாளம்

இந்தியர்களுக்கு முழுமையான விசா-இலவச நாடாக நேபாளம் திகழ்கிறது. இந்திய பாஸ்போர்ட் அல்லது வோட்டர் ஐடி இருந்தாலே எந்த விதமான விசா தேவையில்லாமல் நேபாளத்திற்கு எளிதாக பயணம் செய்யலாம். மேலும், பொது போக்குவரத்தான பஸ், ஷேர் ஜீப்புகள், மோட்டார் ரிக்சா ஆகியவை மூலம் மிகச் சுலபமான மற்றும் குறைந்த செலவில் பயணம் மேற்கொள்ளலாம். சைக்கிள் மற்றும் வாடகை ஸ்கூட்டர் மூலம் குறைந்த செலவில் நகரை சுற்றி பார்க்கலாம். நேபாளம் குறைந்த செலவில் பயணிக்க மிகவும் பொருத்தமான நாடாகும்.

2. பூடான்

பூட்டான், இந்தியர்களுக்கு விசா தேவையில்லாத ஒரு அழகிய மற்றும் அமைதியான நாடாகும். இந்தியர்கள் வோட்டர் ஐடி அல்லது பாஸ்போர்ட் வைத்திருந்தால், எந்தவொரு விசா கட்டணமும் செலுத்தாமல் இந்த நாட்டிற்கு பயணம் செய்யலாம். மேலும், இந்திய எல்லையில் உள்ள ஜாய்கான் நகரத்திலிருந்து பரோ, திம்பு ஆகிய இடங்களுக்கு அரசு பேருந்துகள் உள்ளன. பூட்டானில் சுற்றுலா கட்டணங்கள் (Sustainable Development Fee - SDF) இல்லை என்பதால் குறைந்த செலவில் இந்நாட்டின் புகழ்பெற்ற பாரோ மலைக்கோயில்கள், ஃபுனாகா ட்சோங் போன்ற இடங்களை பார்வையிடலாம்.

3. மாலத்தீவுகள்

மாலத்தீவு, இந்தியர்களுக்கு 90 நாட்கள் வரை விசா இல்லாமல் அனுமதிக்கப்படும் ஒரு அழகிய தீவு நாடு ஆகும். இது நீல நிற கடல்களும் வெண்மையான மணல் கடற்கரைகள் கொண்ட, உலகின் சிறந்த தூய்மைமிக்க சுற்றுலா தலங்களில் ஒன்றாகும்.

4. இந்தோனேசியா

இந்தோனேசியா, இந்தியர்களுக்கு 30 நாட்கள் வரை விசா இல்லாமல் அனுமதிக்கப்படும் ஒரு அழகான சுற்றுலா நாடாகும். உலகின் மிகப்பெரிய தீவு நாடான இது, கலாச்சாரம், உலகப் புகழ்பெற்ற அழகிய கடற்கரைகள், எரிமலைகள், ஸ்னோர்கெலிங் மற்றும் ஸ்கூபா டைவிங் நிறைந்த இந்த நாடு பட்ஜெட் பயணிகளுக்கு சிறந்த தேர்வாக இருக்கும்.

5. சீஷெல்ஸ்

சீஷெல்ஸ், இந்தியர்களுக்கு 90 நாட்கள் வரை விசா இல்லாமல் அனுமதிக்கப்படும் ஒரு அற்புதமான சுற்றுலா நாடாகும். இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள 115 தீவுகளைக் கொண்ட இந்த நாடு, பசுமை நிறைந்த மலைகள், தூய்மையான நீரினை கொண்ட அழகான கடற்கரைகள், நீர் விளையாட்டுகள் மற்றும் இயற்கையை விரும்புபவர்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும்.

6. இலங்கை

இலங்கை, இந்தியர்களுக்கு மிக நெருக்கமான, குறைந்த செலவில் சுற்றி பார்க்கூடிய ஒரு அழகிய நாடாகும். தற்போது இலங்கை இந்தியர்களுக்கு இலவச விசா வழங்கி வருகிறது. வியக்க வைக்கும் ரயில் பயணங்கள், இயற்கை அழகு நிறைந்த மலைகள், கடற்கரைகள், வரலாறு மற்றும் கலாச்சாரமும் நிறைந்த இந்த நாடு குறைந்த செலவில் பயணிக்க மிகவும் பொருத்தமான நாடாகும்.

7. மொரீஷியஸ்

இந்த அழகான தீவு நாட்டில் இந்தியர்கள் 90 நாட்கள் வரை விசா இல்லாமல் பயணிக்க அனுமதிக்கப்படுகின்றனர். இங்கு உள்ள சுற்றுலா பஸ்கள் மற்றும் பொதுவான பஸ் சேவைகள் மிகக் குறைந்த விலையில் கிடைக்கும். அழகான கடற்கரைகள், பசுமை நிறைந்த மலைகள், நீர் சாகச விளையாட்டுகள் மற்றும் இந்திய கலாச்சாரத்துடன் இணைந்துள்ள இந்த நாட்டை குறைந்த செலவில் சுற்றி பார்க்கலாம்.

8. பிஜி

பசுமை நிறைந்த தீவுகள், ஒளிரும் நீலக் கடல்கள், கொண்ட இந்த அழகான தீவு நாட்டில் இந்தியர்களுக்கு 120 நாட்கள் வரை விசா இல்லாமல் பயணிக்க அனுமதிக்கப்படுகின்றனர்.இந்த பிஜி தீவில் சுற்றி பார்க்க பஸ் மற்றும் மீனி பஸ் சேவைகள் செலவுகள் குறைவாக இருப்பதற்கு நல்ல தேர்வாகும். மேலும் தீவுகளுக்கிடையே பயணிக்க உள்ளூர் படகுகள் மிகவும் மலிவாக கிடைக்கும். உள்ளூர் ஹோம்ஸ்டே மற்றும் உணவகங்களை தேர்வு செய்தால் அதிக செலவாகாது.

9.கத்தார்

கத்தார், இந்தியர்களுக்கு விசா ஆன் அரைவல் (Visa on Arrival) என்ற முறையில் 30 நாட்கள் வரை இலவசமாக விசா வழங்கப்படுகிறது. அதன் மூலம் கத்தார் நாட்டின் வளமான கலாச்சாரம், புராதன அரேபிய மரபுகள், மேம்பட்ட நகரங்கள் மற்றும் உலகத் தரமான சுற்றுலா வசதிகள் கொண்ட இந்த நாட்டிற்கு குறைந்த செலவில் பயணம் மேற்கொள்லாம்.

More News

    Read more about: visa
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+