Search
  • Follow NativePlanet
Share
» » அடிக்கிற வெயிலுக்கு மதுரையிலிருந்து ஜில்லுன்னு ஒரு ட்ரிப் – புல்லாவெளி நீர்வீழ்ச்சி!

அடிக்கிற வெயிலுக்கு மதுரையிலிருந்து ஜில்லுன்னு ஒரு ட்ரிப் – புல்லாவெளி நீர்வீழ்ச்சி!

எல்லா இடங்களையும் விட மதுரையில் வெயில் கொஞ்சம் ஓவராவே இருக்கும் என்று சொல்லுவார்கள். அடிக்கிற வெயிலுக்கு இதமா அருவியில ஒரு குளியல் போட்டா நல்லா இருக்கும் இல்லையா! மதுரையிலிருந்து 70 கிமீ தொலைவில் அமைந்துள்ள புல்லாவெளி நீர்வீழ்ச்சிக்கு உங்கள் நண்பர்களுடன் ஒரு ட்ரிப் பிளான் பண்ணி சென்று விட்டு வரலாமே. இந்த அருவிக்கு செல்லும் வழியிலேயே உள்ள அழகிய சிறுசிறு கிராமங்கள், வியூபாயின்ட்கள் எல்லாமும் சேர்த்து ஒரே நாளில் எப்படி ட்ரிப் பிளான் பண்ணுவது என்று பார்ப்போம்! இங்கு எப்படி செல்வது? என்ன எடுத்து செல்ல வேண்டும்? எவையெல்லாம் செய்யக் கூடாது என்பதை இங்கே பார்க்கலாம்!

pullavelifallscover

மதுரையிலிருந்து ஒரு நாள் ட்ரிப்

மதுரையிலிருந்து 70 கிமீ தூரத்தில் அழகிய கிராமமான தாண்டிக்குடியில் இந்த அழகிய அருவி திண்டுக்கல்லில் இருந்து 40 கிமீ தொலைவிலும், தேனியிலிருந்து 80 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது. நீங்கள் மதுரையிலிருந்து காலை உணவுக்குப் பின் பயணத்தை தொடங்கினால் போதும் அடுத்த ஒன்றரை மணி நேரத்தில் அருவியை அடைந்து விடலாம்.

வியூபாயின்ட்கள் நிறைந்த பயணம்

மதுரையிலிருந்து மணலூர் வழியாக சென்று தேசிய நெடுஞ்சாலை 44 மற்றும் செம்பட்டி ரோடு வழியாக சென்றால் புல்லாவெளி அருவி வந்துவிடும். செல்லும் வழியில் நிறைய அழகான சின்ன சின்ன கிராமங்களும் வியூபாயின்ட்களும் இருக்கின்றன. அவற்றையெல்லாம் மிஸ் பண்ணாமல் பார்த்துவிட்டே செல்லுங்கள். மலைகளுக்கு உள் சரியாக 15லிருந்து 20 நிமிடங்கள் பயணம் செய்ய வேண்டியிருக்கும். நீங்கள் பைக்கில் செல்லுகிறீர்கள் என்றால் அருவியிக்கு அருகிலேயே பைக்கை பார்க் செய்து கொள்ளலாம்.

pullavelifalls

மிகவும் ரம்மியமான சூழல்

பைக் பார்க்கிங்கில் இருந்து சற்று தூரம் நடக்க வேண்டும். 20 நிமிட நடைபயணத்திற்கு பிறகு ஒரு பழைய மரப்பாலம் ஒன்றை கடப்பீர்கள். அங்கு வந்துவிட்டால் புல்லாவெளி மெயின் நீர்வீழ்ச்சியை அடைந்து விட்டீர்கள் என்று அர்த்தம். எங்கு பார்த்தாலும் பசுமை, சுற்றிலும் இதமான வானிலை, குளிர்ச்சியான நீர் என இந்த இடம் மிகவும் ரம்மியமாக இருக்கிறது. மெயின் நீர்வீழ்ச்சிக்கு நீங்கள் செய்ய வேண்டிய நடைபயணம் சற்று கரடு முரடாகவே இருக்கிறது. ஆதலால் மிகவும் கவனத்துடன் செல்வது அவசியம்.

நீர்வீழ்ச்சியில் சில்லென்ற குளியல்

மெயின் நீர்வீழ்ச்சி மிகவும் ஆழமாக இருக்கிறது அதே நேரத்தில் நீர்வரத்தும் அதிகமாக இருக்கிறது. அதனால் அங்கு குளிக்க முடியாது. ஆனால் ஆர்ப்பரித்து கொட்டும் நீரை பார்க்கும் போது மிகவும் உற்சாகமாக இருக்கிறது. நீங்கள் மெயின் நீர்வீழ்ச்சிக்கு அருகில் உள்ள சின்ன நீர்வீழ்ச்சிகளில் ஆனந்தமாக எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் ஆட்டம் போடலாம். அருகிலேயே நிறைய பாறைகள் இருப்பதால் குழந்தைகளை அழைத்துச் சென்றால் மிகவும் கவனத்துடன் இருக்கவும்.

குடும்பங்களுடன் செல்ல ஏற்ற இடம்

இங்கே ஆண்கள் மட்டும் தான் வருவார்கள் என்று நினைத்தால் அது தவறு. பெண்களும் குழந்தைகளும் என நீங்கள் குடும்பமாக கூட இங்கு வரலாம். ஆனால் நடக்க சற்று சிரமமாக இருக்கிறது. அதை தவிர இது மதுரையிலிருந்து ஒரு நாள் ட்ரிப் போடுவதற்கு ஏற்ற இடம் தான்.

pullavelifalls

கூடுதல் கவனம் அவசியம்

புல்லாவெளி நீர்வீழ்ச்சி எந்த அளவிற்கு அழகாக இருக்கிறதோ அதே அளவிற்கு அபாயகரமானதும் கூட. கடந்த வருடம் கூட ஒரு வருத்தத்திற்குரிய சம்பவம் அரங்கேறியுள்ளது. நீர்வரத்து அதிகம் உள்ள இடம், வழுக்கும் பாறைகள் இங்கு எல்லாம் செல்ல வேண்டாம். மேலும் வழுக்காத செருப்புகள், மாற்றுத்துணி, டவல், குடிநீர், தின்பண்டம் ஆகியவற்றை எடுத்து செல்லுங்கள்.

More News

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+