மும்பையின் மரீன் டிரைவ் பகுதிக்கு நீங்கள் சென்றால் உலகின் பிரபலமான கடற்கரைகளில் ஒன்றான சௌபாத்தி பீச்சின் அழகில் உங்களையே மறந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இங்கு பேல் பூரி, பானி பூரி, சாண்ட்விச்கள், ஃபல்லூடா போன்ற முபையின் சுவைமிகு தெருவோர உணவுகளை ருசிக்கலாம். மேலும், மரீன் டிரைவ் பகுதி கைத்தறி ஆடைகளுக்கு மிகப்பிரபலம். அதுமட்டுமில்லாமல் இரவு வேலைகளில் மரீன் டிரைவ் பகுதியிலிருந்து பார்த்தால் மும்பையின் வானவிளிம்பு மின்விளக்குகளால் ஜொலிக்கும் அற்புதக் காட்சி நம்மை மயக்கம் கொள்ள செய்துவிடும்.

இந்தியாவின் மிகச் சிறந்த மால்களை நீங்கள் பார்க்க விரும்பினால் மும்பை மாநகரத்துக்குத்தான் வர வேண்டும். இந்த நகரத்தில் நீங்கள் விரும்பும் பொருட்களை சிறந்த தரத்துடன் மலிவான விலைகளில் வாங்க முடியும். குறிப்பாக ஃபீனிக்ஸ் பகுதியிலுள்ள பல்லேடியம் மால், இன் ஆர்பிட் மற்றும் வாஷி மால்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய மால்கள். இங்கு எலக்டிரானிக் பொருட்கள், ஆடைகள், விளையாட்டு பொருட்கள் என்று எதுவானாலும் உலகத் தரத்தில் கிடைக்கும். அதிலும் மற்ற நகரங்களை போல் அல்லாமல் மும்பை நகர மால்களில் பெரும்பாலும் தள்ளுபடி விலைகளில் அனைத்து பொருட்களையும் வாங்கலாம். அதோடு பல்லேடியம் மாலில் தினமும் மாலையில் நகைச்சுவை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

மவுண்ட் மேரி தேவாலயம் என்று பிரபலமாக அறியப்படும் 'பெஸிலிக்கா ஆஃப் அவர் லேடி ஆஃப் தி மவுண்ட்' கடல் மட்டத்திலிருந்து 80 மீட்டர் உயரத்தில், அரபிக் கடலின் அற்புதத் தோற்றத்தை நமக்களித்துக் கொண்டு நிற்கிறது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம், மேரி மாதா திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த தேவாலயம் மும்பையின் நவநாகரிக இடங்களுக்கு மத்தியில் அமைந்திருப்பதோடு, பேண்ட்ஸ்டாண்ட் மற்றும் கார்டர் ரோடு போன்ற சுற்றுலாத் தலங்களுக்கும் அருகாமையில் உள்ளது. இதன் தனிச் சிறப்பு வாய்ந்த கட்டிடக் கலைக்கு எந்த களங்கமும் வராமல் சீரிய முறையில் இது பாதுகாக்கப்பட்டும், நிர்வகிக்கப்பட்டும் வருகிறது



Click it and Unblock the Notifications




