இந்தியாவில் எத்தனையோ மாநிலங்கள் இருந்தாலும் தன்னுடைய பெயரிலேயே 'நாடு' என்ற சொல்லை கொண்டிருக்கும் ஒரே மாநிலம் தமிழ்நாடு தான். பெயருக்கு ஏற்றார்போல் ஒரு நாட்டுக்குரிய அத்தனை சிறப்புக்களையும் தன்னிடத்தே கொண்டிருக்கிறது தமிழகம். உலகில் உயிர்ப்புடன் இருக்கும் மிகப்பழமையான மொழியான தமிழ், குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐவகை நிலங்கள், மற்றும் அவை ஒவ்வொன்றுக்குமான தனித்துவமான வாழ்க்கைமுறைகள், நவீன அறிவியலுக்கு சவால் விடும் கோயில்கள், பெரும்படை கொண்டு இமயமலை முதல் தென்னாசியா வரை ஆண்ட அரசர்கள் வாழ்ந்த மண் என இதன் சிறப்புகள் சொல்லிமாளாது.
அப்படிப்பட்ட தமிழ்நாட்டின் அழகை புகைப்படங்களின் வழியே தரிசிக்கலாம் வாருங்கள்.

அழகிய தமிழகம் !!
சோழன் கட்டிய தமிழர் அடையாளம் தஞ்சை பெரிய கோயில். இதன் வெளிப்புற சுவர்களில் ஆளுயர கடவுளர் சிற்பங்கள் இருக்கின்றன.
Vinoth Chandar

அழகிய தமிழகம் !!
பெல்ஜியம் கண்ணாடிகள்,இத்தாலிய பளிங்கு கற்கள் பதிக்கப்பட்ட ஒரு செட்டிநாட்டு வீடு.
Natesh Ramasamy

அழகிய தமிழகம் !!
கணக்கிடமுடியாத அளவு சிற்பங்கள் நிறைந்த மதுரை மீனாட்சியம்மன் கோயில் கோபுரம்.
Vinoth Chandar

அழகிய தமிழகம் !!
தமிழகத்தில் இருக்கும் மிகப்பழமையான தேவாலயமான சாந்தோம் சர்ச்.
Prabhu B Doss

அழகிய தமிழகம் !!
ஆசியாவில் இருக்கும் மிகப்பெரிய கோயில் கோபுரமான ஸ்ரீ ரங்கம் ரங்கநாத சுவாமி கோயில் கோபுரம்.
ram reddy

அழகிய தமிழகம் !!
குழந்தையின் உள்ளங்கை நிறத்தில் ஒளி பரப்பி உதயமாகும் கதிரவன்.
இடம்: கொடைக்கானல்
ram reddy

அழகிய தமிழகம் !!
மதுரை மீனாட்சியம்மன் கோயில் யானையிடம் ஆசிர்வாதம் பெரும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணி.
Vinoth Chandar

அழகிய தமிழகம் !!
சென்னை எல்லியட்ஸ் கடற்கரையில் சுடச்சுட தயாராகும் சோளக்கருது.
Vinoth Chandar

அழகிய தமிழகம் !!
தென்னாடுடைய சிவனே போற்றி"
திருவண்ணாமலையில் ஒரு காட்சி.
Vinoth Chandar

அழகிய தமிழகம் !!
உலகுக்கே முன்னோடியாய் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கரிகால் சோழனால் கட்டப்பட்ட கல்லணை.
Thangaraj Kumaravel

அழகிய தமிழகம் !!
மெரீனா கடற்கரையில் ஒரு அற்புதமான காலைப்பொழுது.
Thangaraj Kumaravel

அழகிய தமிழகம் !!
பசுமை போர்த்திய வால்ப்பாறை.
Nagesh Jayaraman

அழகிய தமிழகம் !!
குமரி முனையில் இருக்கும் விவேகானந்தர் மண்டபம்.
Ankur Dave

அழகிய தமிழகம் !!
மீன் பிடிப்பதற்காக கடலுக்குள் செல்லும் படகுகள்.
Vanila Balaji

அழகிய தமிழகம் !!
சீறிப்பாயும் காளையை அதன் திமிலை பிடித்து அடக்கத் துணியும் இளைஞர்கள்.
Vinoth Chandar

அழகிய தமிழகம் !!
கார்த்திகை தீப திருநாளில் திருவண்ணாமலையில் உள்ள மலையில் தீபம் எரியும் அற்புத காட்சி.
Vinoth Chandar

அழகிய தமிழகம் !!
கத்திப்பாரா பாலம் !!
Pratik Gupte

அழகிய தமிழகம் !!
புயலால் சிதைந்துபோன தனுஸ்கோடி நகரில் எஞ்சியிருக்கும் தேவாலய கட்டிடம்.
Prabhu B Doss

அழகிய தமிழகம் !!
விழுப்புராத்தில் இருக்கும் சர்வதேச நகரமான ஆரோவில்லேவின் நடுவில் அமைந்திருக்கும் தியான மண்டபமான மாத்ரிமந்திர்.
Premasagar Rose

அழகிய தமிழகம் !!
எப்போதும் மக்கள் வெள்ளத்தில் திளைக்கும் தியாகராய நகர் தெரு.
McKay Savage

அழகிய தமிழகம் !!
அதிகாலையில் சென்னை மெரீனா கடற்கரை காந்தி சிலை அருகே யோகா பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் மக்கள்.
Vinoth Chandar

அழகிய தமிழகம் !!
சுவிட்சர்லாந்தை போல காட்சியளிக்கும் ஊட்டியில் உள்ள பெர்ன்ஹில் பகுதி.
Prabhu B Doss

அழகிய தமிழகம் !!
குமரி முனையில் வானில் வர்ணஜாலம் நிகழ்த்தி உதயமாகும் சூரியன்.
Thejas Panarkandy

அழகிய தமிழகம் !!
சென்னையை அடுத்த திருமழிசையில் இருக்கும் பசுமையான வயல்.
நமக்கு சோறுபோடும் இதுபோன்ற இடங்கள் இப்போது வீட்டு மனைகளாக மாறிவருகின்றன.
Sunish Sebastian

அழகிய தமிழகம் !!
ஹொகேனக்கல்லில் பரிசல் சவாரி.
Lijo Jose

அழகிய தமிழகம் !!
தெருக்கூத்துக்கு ஒப்பனையிட்டு தயாராகும் கலைஞர் ஒருவர்.
Kannan Muthuraman

அழகிய தமிழகம் !!
சென்னை மயிலாப்பூரில் இருக்கும் கபாலீஸ்வரர் கோயில் !!
Vinoth Chandar

அழகிய தமிழகம் !!
மதராசப்பட்டினம்!!
Ashok Saravanan .Ay

அழகிய தமிழகம் !!
கீழ் பவானியில் இருக்கும் நந்தி கோயில் !!
Prabhu B Doss

அழகிய தமிழகம் !!
திருநெல்வேலி அல்வா பிறந்த இடமான இருட்டுக்கடை முன்பாக அல்வா வாங்குவதற்காக முண்டியடிக்கும் மக்கள் கூட்டம்.

அழகிய தமிழகம் !!
நூற்றாண்டுகள் பழமையான ஊட்டி மலை ரயில் !!

அழகிய தமிழகம் !!
கோவையில் இருக்கும் முருகனின் ஏழாம் படைவீடான மருதமலை முருகன் கோயில் !

அழகிய தமிழகம் !!
தமிழ்நாட்டில் இருக்கும் இயற்கை அதிசயமான பிச்சாவரம் அலையாத்தி காடுகள் !!

அழகிய தமிழகம் !!
மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களால் கட்டப்பட்ட நாயக்கர் மஹால் அரண்மனை.

அழகிய தமிழகம் !!
இதுபோல இன்னும் தமிழகத்தில் நாம் செல்லவேண்டிய இடங்கள் ஏராளமாக இருக்கின்றன.
அவ்விடங்கள் பற்றிய விவரங்களை தமிழில் பயண செய்திகளை வழங்கும் ஒரே இணையதளமான தமிழ் நேடிவ் பிளானட்டில் அறிந்துகொள்ளுங்கள்.
Vinoth Chandar



Click it and Unblock the Notifications






