Search
  • Follow NativePlanet
Share
» »சென்னையில் ஷாப்பிங் செய்ய 5 சிறந்த இடங்கள்

சென்னையில் ஷாப்பிங் செய்ய 5 சிறந்த இடங்கள்

By Naveen

சென்னை, ஒரு நகரம் என்பதை தாண்டி நம்மில் பலருக்கு இதன் மேல் ஒரு லேசான காதல் இருக்கிறது. படிப்பு, வேலை, தொழில், சினிமா என நம் எல்லோரின் வாழ்க்கையிலும் சென்னை ஒரு முறையாவது வந்திருக்கும். பலரின் கனவுகளை கருவாக சுமந்துகொண்டிருக்கும் இந்த நகரத்தின் தவிர்க்கமுடியாத அடையாளங்களில் ஒன்று அதன் கூட்டம் நிரம்பிய கடை வீதிகள். இங்கே வானத்துக்கு கீழே கிடைக்கும் ஏறத்தாழ எல்லா பொருட்களையும் நாம் வாங்கிவிட முடியும்.

பண்டிகை காலத்தில் ஊரில் இருந்து அம்மாவையும், அக்காவையும், தங்கையையும் இங்கு கூடிவந்து விளம்பரங்களில் மட்டுமே பார்த்து வாயைப்பிளந்த கடைகளில் ஷாப்பிங் செய்கையில் அவர்கள் முகத்தில் ஏற்ப்படும் பூரிப்புக்கு என்ன விலை வேண்டுமானாலும் கொடுக்கலாம். சரி, வாருங்கள் சென்னையில் ஷாப்பிங் செய்ய சிறந்த ஐந்து இடங்கள் எவை என்பதை தெரிந்துகொள்வோம்.

goibibo வில் உள்நாட்டு விமான டிக்கெட்டுகளை வாங்கி அதில் 200 ருபாய் தள்ளுபடி பெற இங்கே கிளிக்கவும்

பாண்டி பஜார்:

புகைப்படம்:Vinoth Chandar

தி.நகரில் அமைந்திருக்கும் இந்த பாண்டி பஜார் தான் சென்னையின் மிக முக்கியமான, மிக பரபரப்பான ஷாப்பிங் மையம். ஐந்து மாடி கடையில் இருந்து, சாலையோரக்கடைகள் வரை இங்கு மட்டும் குறைந்தது 500 கடைகளாவது இருக்கும். 3000 ரூபாய்க்கு ஒரு ஷர்ட் வாங்க நினைப்பவருக்கும் சரி, 300 ரூபாய்க்குள் தன்னுடைய தீபாவளி ஷாப்பிங்கை முடித்து கொள்ள நினைப்பவரும் சரி எல்லோருக்கும் ஏற்ற பொருட்கள் இங்கே கொட்டிக்கிடக்கின்றன.

சென்னையில் ஷாப்பிங் செய்ய 5 சிறந்த இடங்கள்

புகைப்படம்: McKay Savage

தியாகராய நகர்:

புகைப்படம்: McKay Savage

T.நகர் என்று அழைக்கப்படும் தியாகராய நகரில் சென்னையின் பல முக்கிய கடைகள் அமைந்திருக்கின்றன. பாண்டிபஜார் தவிர தி.நகரில் இருக்கும் உஸ்மான் ரோடு ஒரு முக்கிய ஷாப்பிங் மையம் ஆகும். எலக்ட்ரானிக் பொருட்கள், சமையல் பாத்திரங்கள், துணி வகைகள் இங்கே அதிகமாக கிடைக்கின்றன. அதுமட்டும் இல்லாமல் சென்னையில் நடக்கும் மொத்த தங்க நகை வியாபாரத்தில் 70% இந்த தி.நகரில் நடக்கிறதாம்.

மைலாப்பூர்:

புகைப்படம்: Muthahar Khan

மைலாபூர் என்றாலே பலருக்கு கபாலீஸ்வரர் கோயிலும், டிகிரி காபியுமே நினைவுக்கு வரும். சென்னையில் தன தனித்துவமான அடையாளத்தை இன்றும் இழக்காத ஒரு இடம் உள்ளதென்றால் அது மைலாப்பூர் தான். அந்தணர்கள் அதிகம் வாசிக்கும் இப்பகுதியில் பூக்கள், கோயில் சார்ந்த பொருட்கள் அதிகம் கிடைக்கின்றன. மேலும் புத்தகக்கடைகள், இசைக்கருவிக் கடைகளும் இங்கே அதிகம் உண்டு. பரதநாட்டியம் பயில்பவர்களுக்கு தேவையான பட்டுப்புடவைகள், சலங்கைகள் கிடைப்பது இந்த இடத்தின் சிறப்பாகும்.

ஜார்ஜ் டவுன்:

புகைப்படம்: Karthik Gangadharan

375ஆண்டு கால சென்னையின் வரலாற்றில் ஜார்ஜ் டவுனுக்கு ஒரு தனி இடம் உண்டு. ஆங்கிலேயர்கள் அதிகம் வசித்த பகுதியான இது நவீன சென்னையின் பிசியான ஷாப்பிங் மையங்களில் ஒன்றாக மாறியிருக்கிறது. ஜார்ஜ் டவுனின் முக்கிய வீதியான பர்மா பஜார் எலெக்ட்ரானிக் பொருட்களுக்கு பிரபலமானது. செல்போன்கள், டிவிக்கள், வீடு உபயோக பொருட்கள் இங்கே குறைந்த விலைக்கு கிடைக்கிறது. தவிர உலகின் எந்த நாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படத்தின் திருட்டு vcd யையும் நீங்கள் இங்கே வாங்கலாம். பர்மா பஜார் தவிர பிராட்வே, அங்கப்ப நாயக்கன் தெரு போன்ற இடங்களில் துணிக்கடைகள் மற்றும் ஸ்டேஷனரி பொருட்கள் அதிகம் கிடைக்கின்றன.


கோடம்பாக்கம்:

புகைப்படம்: solarisgirl

தமிழ்நாட்டின் ஹாலிவுட் என அழைக்கப்படும் கோடம்பாக்கத்தில் வீட்டு அலங்கார பொருட்கள் குறைந்த விலையில் தரமாக கிடைக்கின்றன. கைகளால் செய்யப்பட்ட நுட்பமான வேலைப்பாடுகள் நிறைந்த அலங்கார பொருட்கள் இங்கே கிடைக்கின்றன. நீங்கள் எதாவது ஒரு கடையில் பொருட்களை வாங்கிக்கொண்டிருக்கும் போது உங்கள் மனம் கவர்ந்த திரை நட்சத்திரத்தை சந்திக்கும் வாய்ப்பும் உங்களுக்கு கிடைக்கலாம்.

மேல சொன்னவை தவிர தற்போது சென்னையில் ஷாப்பிங் செய்ய பல ஷாப்பிங் மால்களும் வந்து விட்டன. அங்கே உங்கள் வார விடுமுறையை குடும்பத்துடன் ஆனத்தமாக கழிக்கலாம்.

இப்போதே சென்னையை சுற்றிப்பார்க்க வேண்டும் என தோன்றுகிறதா நண்பா? சென்னையின் அற்புதமான புகைப்படங்களை இங்கே காணுங்கள்.

More News

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+