Search
  • Follow NativePlanet
Share
» »உறைந்து போன மாநகரம்! எப்படி இருந்த சென்னை இப்படி ஆய்டிச்சி!

உறைந்து போன மாநகரம்! எப்படி இருந்த சென்னை இப்படி ஆய்டிச்சி!

By Staff

நம்பவே முடியலங்க! சென்னை உறைந்து போயிடிச்சா! கிட்டத்தட்ட உறஞ்சு போகுற அளவுக்கு குளிர் சென்னையில அடிக்குது. கொஞ்ச நாளைக்கு முன்ன வர சென்னை வேகாத வெயில்ல தத்தளிச்சிட்டு இருந்துச்சு. அப்றம் நவம்பர், டிசம்பர்னு வந்தா மழை பாடா படுத்தும். அப்ப குளிர் தன்னோட பங்குக்கு அடிச்சு துவைச்சிட்டு இருக்கு.

உறைந்து போன மாநகரம்! எப்படி இருந்த சென்னை இப்படி ஆய்டிச்சி!

சென்னை மாநகரை ஒருவர் ஒருமுறை சுற்றிப் பார்த்தால் போதும் வாழ்வின் ஏற்றத் தாழ்வுகளையும், காதலையும், அன்பையும், உழைப்பையும், கலாச்சாரத்தையும், நவீனத்தையும், பின் நவீனத்துவத்தையும், ஆன்மிகத்தையும் என எல்லாவற்றையும் உய்த்து உணர முடியும்.

அந்த அளவுக்கு சென்னை மாநகரம் நூற்றுக்கணக்கான முகங்களுடன் காட்சியளித்துக்கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட சென்னை மாநகரை அணுவணுவாக ரசித்து ருசித்து உங்களுக்கு சுற்றிக்காட்ட போகின்றன இந்தப் நிழற்படங்கள்!

குளிர்ந்து போயிருக்குற சென்னையின் ஹாட் புகைப்படங்களை காணுங்கள்.

படித்துப் பாருங்கள் : சட்டையை கழற்றி ராகுவுக்கு மாலையாக போட்ட ஐந்தரையடி பாம்பு..எங்கே தெரியுமா?

சுடச் சுட மீன் வறுவல்!!!

சுடச் சுட மீன் வறுவல்!!!

சென்னை மெரினா கடற்கரையில் எண்ணற்ற மீன் கடைகள் இருக்கின்றன. உங்களுக்கு தேவையான மீனை நீங்களே தேர்ந்தெடுத்து கொடுக்கலாம். அதை அவர்கள் அப்போதே உங்களுக்கு சுடச் சுட வறுத்துத்தர, நீங்கள் அதை ருசிக்க ருசிக்க சாப்பிடலாம்!!!

படம் : Aleksandr Zykov

தி.நகர்

தி.நகர்

சென்னை தியாகராய நகரில் பிதுங்கி வழியும் ஜனக்கூட்டம்!

படம் : McKay Savage

கத்திப்பாரா மேம்பாலம்

கத்திப்பாரா மேம்பாலம்

பட்டர்ஃபிளை மேம்பாலம் என்றும் அழைக்கப்படும் சென்னை கத்திப்பாரா மேம்பாலத்தின் ஏரியல் கோணத் தோற்றம்.

படம் : Pratik Gupte

பிரதீபா காவேரி!!!

பிரதீபா காவேரி!!!

சென்னை ஊரூர்குப்பம் அருகே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நிலம் புயலில் சிக்கி தரைதட்டி நின்ற 'பிரதீபா காவேரி' என்ற கப்பல் மற்றொரு கப்பல் மூலமாக கடலுக்குள் இழுத்துச் செல்லப்படுகிறது.

படம் : Vinoth Chandar

எழும்பூரில் நுழையும் ரயில்

எழும்பூரில் நுழையும் ரயில்

எழும்பூர் ரயில் நிலையத்துக்குள் நுழையும் உள்ளூர் மின்சார ரயில்.

படம் : Simply CVR

சோளப்பொரியும், நெருப்புப்பொறியும்!!!

சோளப்பொரியும், நெருப்புப்பொறியும்!!!

மெரினா கடற்கரையில் சோளப்பொரி விற்கும் கடையிலிருந்து கிளம்பித் தெறிக்கும் நெருப்புப்பொறி.

படம் : Vinoth Chandar

வாலிபால்

வாலிபால்

சென்னை மெரினா கடற்கரையில் வாலிபால் விளையாடும் இளைஞர்கள்.

படம் : Vinoth Chandar

வாழைப்பழக்கடை

வாழைப்பழக்கடை

சென்னை வால்மீகி நகரில் வாழைப்பழக்கடை வைத்திருக்கும் பெண்கள்.

படம் : McKay Savage

மஹாத்மா காந்தி சிலை

மஹாத்மா காந்தி சிலை

சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள மஹாத்மா காந்தி சிலை முன்பாக காலைவேளையில் யோகாசனம் போன்ற உடற்பயிற்சிகள் செய்யும் சென்னை நகரவாசிகள்.

படம் : Vinoth Chandar

வடபழனி மொட்டை!!!

வடபழனி மொட்டை!!!

சென்னை வடபழனி முருகன் கோயிலில் முடியை காணிக்கையாக செலுத்தி சிலர் வேண்டுதல் நிறைவேற்றுவார்கள். அந்த வகையில் முடி காணிக்கை செலுத்திய தலையுடன் தன் அப்பாவோடு விளையாடும் அழகுக் குழந்தை!

படம் : Simply CVR

வெள்ளை மயில்

வெள்ளை மயில்

கிண்டி தேசியப் பூங்காவில் எடுக்கப்பட்ட தோகை விரித்தாடும் வெள்ளை மயிலின் புகைப்படம்.

படம் : Vinoth Chandar

சென்னையில் ஒரு மழைக்காலம்!

சென்னையில் ஒரு மழைக்காலம்!

சென்னை மாநகரையே நனைத்த மழையில், நனைந்தும், நனையாததுமாக குடைபிடித்துச் செல்லும் கணவன், மனைவி!

படம் : Vinoth Chandar

சாலையோர தூக்கம்!

சாலையோர தூக்கம்!

குரோம்பேட்டை பேருந்து நிலையம் அருகே சாலையோரமாக படுத்துறங்கும் பிச்சைக்காரர்.

படம் : vishwaant avk

ஹிலாரி கிளிண்டன்

ஹிலாரி கிளிண்டன்

2011-ஆம் ஆண்டு அப்போதைய அமெரிக்க வெளித்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் இந்தியா வந்திருந்தார். அப்போது சென்னை கலாஷேத்ராவுக்கு வருகை தந்த அவர் நாட்டிய நிகழ்ச்சிகளை கண்டுகளித்த பின்னர் கலைஞர்களை பாராட்டுகிறார்.

படம் : US Consulate Chennai

ஸ்ரீபெரும்புதூர் செல்லும் வழி

ஸ்ரீபெரும்புதூர் செல்லும் வழி

சென்னயிலிருந்து ஸ்ரீபெரும்புதூர் செல்லும் வழி.

படம் : Simply CVR

சென்னை சங்கமம்

சென்னை சங்கமம்

2011-ஆம் ஆண்டு நடந்த சென்னை சங்கமம் விழாவிலிருந்து.

படம் : Simply CVR

வந்தியத்தேவன் சிலை

வந்தியத்தேவன் சிலை

சென்னை அண்ணா மேம்பாலம் அருகே அமைந்துள்ள இந்த குதிரை வீரன் சிலை, சென்னையில் குதிரை பந்தயம் நிறுத்தப்பட்டதன் நினைவாக வைக்கப்பட்டுள்ளது. இந்தச் சிலை பிரபலமான சரித்திர நாவலான கல்கியின் பொன்னியின் செல்வனின் வரும் வந்தியத்தேவன் கதாப்பாத்திரத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

படம் : Balu Velachery

சாந்தோம் தேவாலயம்

சாந்தோம் தேவாலயம்

சாந்தோம் தேவாலயத்தின் உட்புறத் தோற்றம்.

படம் : Vinoth Chandar

குதிரைச் சவாரி

குதிரைச் சவாரி

வால்மீகி நகர் கடற்கரையில் குதிரைச் சவாரி செல்லும் சிறுவர்கள்.

படம் : McKay Savage

விநாயகர் சதுர்த்தி

விநாயகர் சதுர்த்தி

சென்னையில் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி கடலில் கரைப்பதற்காக கொண்டுசெல்லப்படும் விநாயகர் சிலைகள்.

தாத்தா கடை

தாத்தா கடை

சென்னை தரமணி சாலையில் பனிமூட்டத்தின் நடுவே நடந்து செல்லும் மக்கள். அதே சாலையின் பிளாட்பார ஓரத்தில் சுடச்சுட காப்பி தயாரித்து கொடுக்கும் 'தாத்தா கடை' என்ற சிறு தள்ளுவண்டிக் கடை.

படம் : Kiran Ravindranathan

கோலப் போட்டி

கோலப் போட்டி

மைலாப்பூர் திருவிழாவின் போது நடத்தப்பட்ட கோலப் போட்டியில் சாலை முழுவதையும் மறைத்து போடப்பட்டிருக்கும் அழகிய கோலங்கள்.

படம் : Simply CVR

காதலர்கள்

காதலர்கள்

சென்னையின் பெசன்ட் நகர் கடற்கரையில் எப்போதும் காதலர்கள் கூட்டம் ஜேஜேவென்றுதான் இருக்கும்.

படம் : Simply CVR

சூறைக்காற்று!

சூறைக்காற்று!

மெரினா கடற்கரையில் சூறைக்காற்றுக்கு பயந்து ஓடும் சிறுவர்கள்.

படம் : Vinoth Chandar

கபாலீஸ்வரர் கோயில்

கபாலீஸ்வரர் கோயில்

மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலைச் சுற்றிப் பார்க்கும் வெளியூர் பயணிகளும், தரிசனம் செய்யும் பக்தர்களும்.

படம் : Panoramas

பூஜைப் பொருட்கள்!

பூஜைப் பொருட்கள்!

மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் அருகே பூஜைப் பொருட்கள் விற்கும் கடை ஒன்றை அதிகாலை 5.30 மணிக்கு திறந்து வியாபாரத்தை தொடங்குகிறார் கடைக்காரர்.

படம் : Vinoth Chandar

கடலுக்கு செல்லாத மீனவர்கள்!

கடலுக்கு செல்லாத மீனவர்கள்!

2013-ஆம் ஆண்டு தமிழகத்தை தாக்கிய நிலம் புயல் காரணமாக கடலுக்கு செல்லாத மீனவர்கள், மெரினா பீச்சில் படகு ஒன்றில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

படம் : Vinoth Chandar

போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து நெரிசல்

மாலை 6 மணிக்கு மேல் சென்னை மாநகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும்.

படம் : Jerry Michalski

அன்பே சிவம்!

அன்பே சிவம்!

மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலின் இரவு நேரத் தோற்றம்.

படம் : Vinoth Chandar

நடன நிகழ்ச்சி

நடன நிகழ்ச்சி

சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகத்தில், பால் டெய்லர் டான்ஸ் கம்பெனி என்ற குழுவினரால் நடத்தப்பட்ட நடன நிகழ்ச்சி.

படம் : US Consulate Chennai

கடற்கரையில் சலவை!

கடற்கரையில் சலவை!

மெரினா கடற்கரைக்கு அருகே உள்ள கான்க்ரீட் தளத்தில் துணி துவைக்கும் பெண்.

படம் : Faiz Binjai | need to gear up

முட்டுக்காடு போட் ஹவுஸ்

முட்டுக்காடு போட் ஹவுஸ்

சென்னையிலிருந்து 29 கி.மீ தொலைவில் உள்ள முட்டுக்காடு போட் ஹவுஸ்.

படம் : Sudarshan V

அழகுச் சிறுமிகள்!!!

அழகுச் சிறுமிகள்!!!

சென்னை பார்த்தசாரதி கோயில் அருகே நின்றுகொண்டிருக்கும் அழகுச் சிறுமிகள்!

படம் : Sudhamshu Hebbar

கோயம்பேடு பேருந்து நிலையம்

கோயம்பேடு பேருந்து நிலையம்

ஆசியாவின் மிகப்பெரிய பேருந்து நிலையமாக அறியப்படும் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம்.

படம் : SriniG

ஜார்ஜ் டவுன்

ஜார்ஜ் டவுன்

சென்னையின் நெரிசல் மிகுந்த பகுதிகளில் ஒன்றான ஜார்ஜ் டவுன்.

படம் : McKay Savage

ஊருக்குள் நுழைந்த மான்!

ஊருக்குள் நுழைந்த மான்!

சென்னை வேளச்சேரி பகுதியில் தெரு ஒன்றில் திரிந்துகொண்டிருக்கும் புள்ளி மான்.

படம் : McKay Savage

எழும்பூர் மியூசியம்

எழும்பூர் மியூசியம்

எழும்பூர் மியூசத்தின் உட்புறத் தோற்றம்.

படம் : raja sekaran

கடற்குளியல்!

கடற்குளியல்!

சென்னை மெரினா கடற்கரையில் கடலில் நீராடித் திளைக்கும் சுற்றுலாப் பயணிகள்.

படம் : Chris Moss

ஆபத்தான பயணம்!

ஆபத்தான பயணம்!

சென்னையில் தினந்தோறும் எலெக்ட்ரிக் ரயிலிலும் சரி, மாநகராட்சி பேருந்துகளிலும் சரி இந்த மாதிரி ஆபத்தான பயணம் மேற்கொண்டுதான் நிறைய பேர் கல்லூரிக்கும், அலுவலகத்துக்கும், பள்ளிக்கூடத்துக்கும் செல்கிறார்கள்.

படம் : cotaro70s

கலைக்கூத்தாடி

கலைக்கூத்தாடி

மெரினா கடற்கரையில் கயிற்றின் மேல் நடந்து வேடிக்கை காட்டும் கலைக்கூத்தாடி சிறுமி.

படம் : Aleksandr Zykov

சென்னை-பெங்களூர் ஹைவே

சென்னை-பெங்களூர் ஹைவே

சென்னை-பெங்களூர் நெடுஞ்சாலையான NH 44/7.

படம் : Ashwin Kumar

மழை வெள்ளம்!

மழை வெள்ளம்!

அடாது பெய்த மழையால் சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தில் மிதந்து செல்லும் வாகனங்கள்.

படம் : Sonja Pieper

சிறிய உணவகம்

சிறிய உணவகம்

சென்னையில் இதுபோன்ற சிறிய உணவகங்களில் ருசி பிரமாதமாக இருக்கும்.

படம் : ravas51

நேப்பியர் பாலம்

நேப்பியர் பாலம்

மெரினா கடற்கரை மற்றும் மெட்ராஸ் பல்கலைகழகத்துக்கு அருகே உள்ள நேப்பியர் பாலம்.

படம் : vishwaant avk

பல்லாவரம் மேம்பாலம்

பல்லாவரம் மேம்பாலம்

சென்னையில் 2010-ஆம் ஆண்டு கட்டப்பட்ட பல்லாவரம் மேம்பாலம்.

படம் : Simply CVR

தீபாவளி கொண்டாட்டம்!

தீபாவளி கொண்டாட்டம்!

சென்னை மாநகரில் எப்போதுமே தீபாவளி கொண்டாட்டம் களைகட்டும்.

படம் : soumyajit pramanick

ஓணம் பண்டிகை

ஓணம் பண்டிகை

சென்னையில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்.

படம் : US Consulate Chennai

புனித ஸ்நானம்

புனித ஸ்நானம்

திருபோரூர் கோயில் குளத்தில் புனித ஸ்நானம் செய்யும் முதியவர்.

படம் : Simply CVR

கோயம்பேடு மார்க்கெட்

கோயம்பேடு மார்க்கெட்

கோயம்பேடு மார்க்கெட்டில் ஏற்றுமதி, இறக்குமதி வேலைகள் பரபரப்பாக நடந்துகொண்டிருக்கின்றன.

படம் : McKay Savage

ரயிலுக்காக காத்திருக்கும் பயணிகள்!

ரயிலுக்காக காத்திருக்கும் பயணிகள்!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்திருக்கும் பயணிகள்.

படம் : Michael Coghlan

Read more about: சென்னை
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X