Search
  • Follow NativePlanet
Share
» »'அந்த' விஷயத்தை சொல்ல சிறந்த இடங்கள்

'அந்த' விஷயத்தை சொல்ல சிறந்த இடங்கள்

உங்கள் காதலனிடமோ காதலியிடமோ அவர்களை காதலிக்கிறோம் என்று சொல்லும் அந்த தருணம் எவ்வளவு அழகானது. கொஞ்சல், வெட்கம், தயக்கம்,கொஞ்சம் பயம் என அந்த நேரத்தில் நமக்குள் எழும் உணர்வுகள் வர்ணிக்க முடியாதவை. நம் வாழ்க்கையையே இனிமையானதாய் மாற்றக்கூடிய அந்தத்தருணத்தை அழகானதொரு இடத்தில் இது கனவா? என நினைக்கும் வகையில் ஒரு இடத்தில் வைத்து சொல்லும்போது வாழ்க்கை முழுவதும் நாம் நினைத்து மகிழக்கூடியதாய் அந்ததருணம் மாறும். வாருங்கள் உங்கள் காதலை சொல்ல சிறந்த இடங்கள் எவை என்பதை தெரிந்து கொள்வோம்.

கோவாவில் சூரிய அஸ்தமனத்தின் போது:

கோவாவில் சூரிய அஸ்தமனத்தின் போது:

கோவா, தன்னுள் ஒரு மாயாஜாலத்தை கொண்டிருக்கும் இந்த இடத்தில் நம் மனதுக்கு பிடித்தவருடன் மாலை நேரத்தில் தங்க நிறமாய் ஒளிரும் கடலின் நடுவே ஒரு படகில் வைத்து உங்கள் காதலை சொல்கையில் உங்கள் அன்பானவர் தன்னை மறந்து உங்கள் காதலை ஏற்றுக்கொள்வார். புகைப்படம்: Karunakar Rayker

காதல் ஏரி, வயநாடு:

காதல் ஏரி, வயநாடு:

கேரளாவின் அற்புதமான இடங்களில் ஒன்றான வயநாட்டில் செம்ப்ரா மலையின் மேல் அமைந்திருக்கிறது இந்த காதல் ஏரி. இயற்கையாகவே காதலின் சின்னமான இதயவடிவில் அமைந்திருக்கும் இந்த இடம் உங்கள் காதலருடன் இதயத்தை பகிர்ந்துகொள்ளுங்கள்.
புகைப்படம்: Chandru

டோனா பௌலா கடற்க்கரை:

டோனா பௌலா கடற்க்கரை:

சில நூற்றாண்டுகளுக்கு முன்பு இந்த இடத்தை ஆட்சி செய்த போர்த்துகிசிய வைஸ்ராயின் மகள் இங்கு வாழ்ந்துவந்த இந்திய மீனவர் ஒருவரை காதலித்து வந்திருக்கிறார். அவரது காதலை தந்தை ஏற்றுக்கொள்ள மறுக்கவே இந்த கடற்க்கரையில் காதலுக்காக தன உயிரை தியாகம் செய்திருக்கிறார் டோனா பௌலா. அவரின் பெயராலேயே அழைக்கப்படும் இந்த காதல் கடற்கரையில் உங்கள் காதலை சொல்லுங்கள்.
புகைப்படம்: Ali Al-Sheiba

தாஜ் மஹால்:

தாஜ் மஹால்:

ஒரு காதல் கதையை காலத்தை தாண்டி உயிர்ப்புடன் வைத்திருக்கும் ஓரிடம் இது. காதலின் சக்தியை உலகுக்கு உணர்த்தும் இந்த காதலின் சின்னத்தில் வைத்து உங்கள் காதலை பகிர்ந்திடுங்கள்.
புகைப்படம்: Trey Ratcliff

வியாஸ் சத்ரி,ஜெய்சால்மர்:

வியாஸ் சத்ரி,ஜெய்சால்மர்:

நீங்கள் நேசிப்பவருக்கு வரலாற்றின் மீதோ, அமானுஷ்யமான விஷயங்களின் மீது விருப்பம் இருந்தாலோ அவரை வியாஸ் சித்ரிக்கு அழைத்துவாருங்கள். 'ரிதம்' படத்தில் 'காற்றே என் வாசல் வந்தாய்' பாடல் படம்பிடிக்கப்பட்ட அதே இடம்தான் இது. பாலைவனத்தில் சூரியன் மறையும் போது இருக்கும் அற்புதமான நேரத்தில் உங்கள் அற்புதமான உணர்வை சொல்லிவிடுங்கள். புகைப்படம்: Sergio Morchon

லேக் பேலஸ்,உதய்பூர்:

லேக் பேலஸ்,உதய்பூர்:

இந்தியாவின் வெனிஸ் என்று அழைக்கப்படும் அழகிய இடம்தான் ராஜஸ்தானில் இருக்கும் உதய்பூர். இங்கு புகழ்பெற்ற உதய்பூர் ஏரிக்கு நடுவே அமைந்திருக்கிறது லேக் பேலஸ். இதன் நடுவே இருக்கும் இடத்தில் நிலவொளியில் உங்கள் காதலை சொல்லுங்கள் உங்கள் அன்பானவர் நிச்சயம் அதை ஏற்றுக்கொள்வார்.
புகைப்படம்: Celeste Goulding

ஸ்குபா டைவிங், அந்தமான் நிகோபார்:

ஸ்குபா டைவிங், அந்தமான் நிகோபார்:

முற்றிலும் வித்தியாசமாக உங்கள் காதலை சொல்ல வேண்டும் என விருப்பம் கொண்டிருக்கிறீர்கள் என்றால் நீங்கள் உங்கள் காதலருடன் அந்தமான் தீவுக்கு செல்லுங்கள். அங்கே கடலுக்கு அடியில் உங்கள் அன்பானவருடன் ஸ்குபா டைவிங் செய்கையில் உங்கள் காதலை சைகைகள் மூலம் சொல்லுங்கள். நிச்சயம் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு தருணமாக அது மாறும்.
புகைப்படம்: Min Sheng Khoo

More News

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+