ஈஸ்ட் காசி ஹில்ஸ் மேகாலயா மாநிலத்தின் ஏழு மாவட்டங்களில் ஒன்றாகும். மாநிலத்தலைநகரான ஷில்லாங் நகரமே இந்த மாவட்டத்தின் தலைநகரமாகவும் உள்ளது. பல சுவராசியமான சுற்றுலா ஸ்தலங்களும் விசேஷ அம்சங்களும் இந்த மாவட்டத்தில் நிரம்பியுள்ளதால் இது மேகாலயா மாநிலத்தில் அதிகம் விஜயம் செய்யப்படும் சுற்றுலாப்பிரதேசமாக விளங்குகிறது. ஈஸ்ட் காசி ஹில்ஸ் மாவட்டம் எல்லாவிதமான சுற்றுலா பொழுதுபோக்குகளையும் சுற்றுலாபயணிகளுக்கு வழங்குகிறது.

நடனத்திருவிழா
அற்புதமான இயற்கைக்காட்சிகளை கொண்டிருக்கும் ஷில்லாங் நகரம் மட்டுமல்லாமல் இம்மாவட்டத்தின் இதர தாலுக்கா பகுதிகளும் தம்முள் வித்தியாசமான இயற்கை எழில் அம்சங்கள் வாய்க்கப் பெற்றிருக்கின்றன. இவற்றில் ஒன்றான ஸ்மிட் எனும் கிராமம் ஹிமா கைரம் எனும் மலையடிவாரத்தில் வீற்றிருக்கிறது. இக்கிராமத்தில் வருடா வருடம் நடத்தப்படும் பாரம்பரிய நடனத்திருவிழா ஒரு முக்கியமான சுற்றுலா நிகழ்ச்சியாகும்.

மாவ்லின்னாங்
மாவ்லின்னாங் எனும் மற்றொரு கிராமம் ஸ்மிட் கிராமத்திலிருந்து ஒரு சில கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்திருக்கிறது. இந்த கிராமம் பற்றி சொல்வதற்கு நிறையவே இருக்கிறது. இந்த மாவ்லின்னாங் கிராமம் ஆசியாவிலேயே மிக தூய்மையான கிராமமாக கருதப்படுகிறது. இந்த தூய்மையின் இயல்பை விருந்தினர்கள் நேரில் பார்த்து அனுபவித்து புரிந்து ரசிக்க முடியும். இது தவிர ஈஸ்ட் காசி ஹில்ஸ் மாவட்டத்தில் உள்ள லெயிட்கின்சியூ எனும் இடத்தில் 100 வருடங்களாக இருந்து வரும் ஒரு வேர் பாலத்தை பார்க்கலாம்.

தொங்கு பாலம்
உயிருள்ள மரங்களின் வேர்களை பின்னி உருவாக்கப்பட்டிருக்கும் இந்த தொங்கு பாலம் இப்பகுதி மக்களின் அறிவு நுட்பத்துக்கு ஒரு சான்றாக வீற்றிருக்கிறது. இது இன்றும் மக்கள் ஆற்றை கடந்து செல்ல பயன்படுகிறது. புனிதமான காட்டுத்தோப்புகள் நிறைந்திருக்கும் மாவ்ப்ளாங் எனும் இடமும் ஈஸ்ட் காசி ஹில்ஸ் சுற்றுலாவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பிரசித்தி பெற்றுள்ளது.

முக்கிய சுற்றுலாத்தலங்கள்
ஈஸ்ட் காசி ஹில்ஸ் மாவட்டத்தில் இயற்கை ரசிகர்கள் பார்க்க வேண்டிய எண்ணற்ற அம்சங்கள் நிரம்பியிருக்கின்றன. இவற்றில் மாவ்ப்ளாங், ஸ்மிட், லெயிட்கின்சியூ, மாவ்சின்ராம், மாவ்லின்னாங் கிராமம் போன்றவை வெகு பிரசித்தமான சுற்றுலா கவர்ச்சி அம்சங்களாக அறியப்படுகின்றன.

எப்படி செல்வது?
ஷில்லாங் நகரத்தில் தங்கிக்கொண்டு பயணிகள் இந்த ஈஸ்ட் காசி ஹில்ஸ் மாவட்டத்தின் சுற்றுலாத்தலங்களுக்கு இஷ்டம் போல் விஜயம் செய்து ரசிக்கலாம். கவுஹாட்டி நகரத்துடன் ஷில்லாங்க் நல்ல முறையில் போக்குவரத்து வசதிகளால் இணைக்கப்பட்டிருக்கிறது. எனவே எல்லா காலங்களிலும் வாகன வசதிகளுக்கு குறைவேயில்லை. பருவநிலை இம்மாவட்டத்தின் எல்லா பகுதிகளுமே மிதமான பருவநிலை இயல்பை கொண்டிருக்கின்றன. தென்மேற்கு மழைப்பருவம் இம்மாவட்டத்துக்கு அதிக மழைப்பொழிவை அளிப்பதால் பல மாதங்களுக்கு மழை நீடிக்கிறது. இருப்பினும் குளிர்காலத்தில் ஈரமற்ற சூரிய வெளிச்சம் நிறைந்த சூழல் வாய்க்கிறது.

மாவ்லின்னாங்
மாவ்லின்னாங் கிராமத்தை ஆசியாவிலேயே வெகு சுத்தமான கிராமமாக ‘டிஸ்கவர் இந்தியா' பத்திரிகை சான்றளித்திருக்கிறது. இது ஷில்லாங் நகரத்திலிருந்து 90 கி.மீ தூரத்தில் அமைந்திருக்கிறது. இந்த அழகிய சிறு கிராமம் இந்தோ-பங்களாதேஷ் எல்லைப்பகுதியில் இடம் பெற்றிருக்கிறது. இந்த கிராமவாசிகளின் முக்கியத்தொழில் விவசாயமே ஆகும். பலகாலமாகவே இப்பகுதியின் பூர்வகுடி மக்கள் இந்த கிராமப்பகுதியின் இயற்கைத்தூய்மையை பேணிக்காத்து வருகின்றனர். மூங்கிலால் செய்யப்பட்ட குப்பைக்கூடைகள் இந்த கிராமம் முழுக்க வைக்கப்பட்டிருப்பதோடு எந்த ஒரு குப்பை மற்றும் வேண்டாத பொருளும் வெளியிடங்களில் சிதறிக்கிடப்பதை இவர்கள் விரும்புவதில்லை.

மாவ்சின்ராம் கிராமம்
ஒரு காலத்தில் உலகிலேயே மிக ஈரமான, அதிக மழைப்பொழிவு பெறும் இடமாக பிரசித்தி பெற்றிருந்த இந்த மாவ்சின்ராம் கிராமம் மேகாலயா மாநிலத்தின் ஈஸ்ட் காசி ஹில்ஸ் மாவட்டத்தில் உள்ளது. இது ஷில்லாங் நகரத்திலிருந்து 60 கி.மீ தூரத்தில் அமைந்திருக்கிறது. இயற்கை ரசிகர்களின் கண்களுக்கு இந்த மாவ்சின்ராம் கிராமம் ஒரு பூலோகச்சொர்க்கம் போன்றே காட்சியளிக்கிறது. செங்குத்தாக உயந்தும் மடிந்தும் கிடக்கும் பசுமலைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் போன்றவை இந்த பூமிக்கு வரும் பயணிகளை மயங்க வைக்கின்றன.

ஸ்மிட்
ஸ்மிட் எனும் இந்த அழகிய சாந்தம் தவழும் கிராமம் ஷில்லாங் நகரத்திலிருந்து 16 கி.மீ தூரத்தில் உள்ளது. வளைந்து நெளிந்து செல்லும் சாலைகள் வழியே முடிவுறாத நீளும் மலைக்காட்சிகளை ரசித்தபடி இந்த கிராமத்திற்கு வந்து சேரலாம். வாழ்வில் மறக்கவே முடியாத ஒரு பயண அனுபவமாக இது இருக்கும். இந்த ஸ்மிட் கிராமத்தில் உள்ளூர் தலைவரான ‘லிங்டோ'வின் வீடு பிரதானமான தனித்தன்மையான கலை அம்சங்களுடன் காட்சியளிக்கிறது. மரம் மற்றும் மூங்கிலை பயன்படுத்தி கட்டப்பட்டிருக்கும் இது வேயப்பட்ட கூரையுடன் காட்சியளிக்கிறது.

லெயிட்கின்சியூ கிராமம்
மேகாலயா மாநிலத்தின் ஈஸ்ட் காசி ஹில்ஸ் மாவட்டத்தில் உள்ள இந்த லெயிட்கின்சியூ கிராமம் இங்குள்ள வேர்ப்பாலத்துக்கு பிரசித்தமாக அறியப்படுகிறது. உயிருள்ள மரவேர்களால் பின்னி பிணைத்து 53 அடி நீளத்துக்கு ஒரு ஓடையின் குறுக்கே கட்டப்பட்டிருக்கும் இந்த வேர்ப்பாலம் ‘உம்ன்னோய்' என்று அழைக்கப்படுகிறது. இது 100 வருடங்கள் பழமையுடையது என்பது குறிப்பிடத்தக்கது. உள்ளூர் மக்கள் இதனை ‘ஜிங்கீங் டெயிங்ஜ்ரி' என்றும் அழைக்கின்றனர். இந்த பாலத்தை பார்ப்பதற்காகவே உலகெங்கிலுமிருந்தும் பயணிகள் இந்த கிராமத்துக்கு வருகை தருகின்றனர்.

மாவ்ப்ளாங்
மாவ்ப்ளாங் எனும் இடம் இங்குள்ள புனிதமான காடுகள் மற்றும் தோப்புகளுக்கு பிரசித்தி பெற்றுள்ளது. இவை காலங்காலமாக இருந்து வருகின்றன. காசி இன மக்கள் இந்த காடுகளை புனிதமான இயற்கை சின்னங்களாக கருது பாதுகாத்து வருகின்றனர். மாவ்ப்ளாங் பகுதியில் காசி மலைகளின் மீது இந்த காடுகள் அதிகம் காணப்படுகின்றன. தூய்மையான இயற்கை அழகை ரசிக்க விரும்புகிறவர்கள் ஒரு முறை விஜயம் செய்ய வேண்டிய இடம் இது.



Click it and Unblock the Notifications




