Search
  • Follow NativePlanet
Share
» »பாக்சு சுற்றுலா வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், எப்படி அடைவது

பாக்சு சுற்றுலா வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், எப்படி அடைவது

பாக்சு சுற்றுலா வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், எப்படி அடைவது

ஹிமாச்சல பிரதேசத்தில் மெக்லியோட்கஞ்ச் நகருக்கு வெகு அருகில் அமைந்திருக்கும் பாக்சு நகரம் அதன் தொன்மை வாய்ந்த கோயில்களுக்காகவும், அழகிய அருவிகளுக்காகவும் மிகவும் பிரபலமாக அறியப்படுகிறது. இந்த நகரம் தர்மஷாலாவுக்கு அருகாமையில் இருப்பதால் எண்ணற்ற சுற்றுலாப் பயணிகளோடு, ஏராளமான பக்தர்களும் இங்கு ஆண்டுதோறும் கூட்டம் கூட்டமாக வந்து செல்கின்றனர்.

பாக்சுனாக் கோயில்

பாக்சுனாக் கோயில்

பாக்சு நகரின் புகழ்பெற்ற சுற்றுலாப் பகுதியாக மெக்லியோட்கஞ்ச்சிலிருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் பாக்சுனாக் கோயில் அறியப்படுகிறது. இந்தக் கோயில் சிவபெருமானுக்காக அர்ப்பணிக்கப்பட்டிருப்பதுடன், இங்கு நிறைய குளங்களையும், 'புலித்தலை' நீரூற்றுகளையும் காண முடியும். இதில் புலியின் தலையை போன்று காட்சியளிக்கும் 'புலித்தலை' நீரூற்றுகள் ஹிந்து மதத்தினரால் புனிதமானதாக கருதப்படுகிறது.

Ansheeta Sharma

இந்திராஹர் பாஸ்

இந்திராஹர் பாஸ்


பாக்சு நகருக்கு சுற்றுலா வருபவர்கள் கண்டிப்பாக இந்திராஹர் பாஸ் பகுதிக்கு சென்று வர வேண்டும். இந்த புகழ்பெற்ற சுற்றுலாப் பகுதி கடல் மட்டத்திலிருந்து 4342 கிலோமீட்டர் தொலைவில், தௌலாதர் மலைத்தொடர்களில் அமைந்திருக்கிறது. அதோடு இந்திராஹர் பாஸ் பகுதியின் புவியியல் அமைப்பு சம்பா மற்றும் காங்க்ரா பகுதிகளின் எல்லையாக இயற்கையாக அமையப்பெற்றிருக்கிறது. மேலும் தர்மஷாலா அல்லது மெக்லியோட்கஞ்ச் பகுதிகளிலிருந்து டிரெக்கிங் மூலமாக இந்திராஹர் பாஸ் பகுதியை நீங்கள் சுலபமாக அடைந்து விட முடியும். அதுமட்டுமல்லாமல் சம்பா மற்றும் தர்மஷாலா பகுதிகளுக்கு இடையே உள்ள டிரெக்கிங் பாதையில் அமைந்திருக்கும் மின்கியானி பாஸ் பகுதிக்கும் நேரமிருந்தால் சுற்றுலாப் பயணிகள் சென்று வரலாம்.

sanyam sharma

எப்படி அடையலாம்

எப்படி அடையலாம்

பாக்சு நகரை வான், ரயில் மற்றும் சாலை என்று எந்த மார்கத்திலும் சிரமமின்றி அடைந்து விட முடியும். பாக்சு நகரின் அருகாமை விமான நிலையமாக தர்மஷாலா உள்நாட்டு விமான நிலையம் அறியப்படுகிறது. இந்த விமான நிலையத்திலிருந்து டெல்லி, குலு போன்ற நாட்டின் முக்கிய நகரங்களுக்கு அடிக்கடி விமானங்கள் இயக்கப்படுகின்றன. மேலும் பாக்சு நகருக்கு வெகு அருகில் பட்டான்கோட் ரயில் நிலையம் அமைந்திருப்பதோடு, மெக்லியோட்கஞ்ச் மற்றும் தர்மஷாலா போன்ற ஹிமாச்சல பிரதேசத்தின் பிற பகுதிகளிலிருந்து எண்ணற்ற பேருந்துகளும் பாக்சு நகருக்கு இயக்கப்படுகின்றன. பாக்சு நகரம் மிதமான கோடை காலத்தையும், குளிர்ச்சியான பனிக் காலத்தையும் கொண்டது.

இதன் குளிர் காலங்களில் வெப்பநிலை குறைவாக காணப்படுவதுடன், பனிமழையும் பெய்யுமாதலால் சுற்றுலாப் பயணிகள் பனிக் காலங்களில் பாக்சு நகருக்கு வருவதையே பெரிதும் விரும்புகின்றனர்.எனினும் உறையவைக்கும் பனிக் காலங்களை விரும்பாத பயணிகள் கோடை காலங்களில் பாக்சு நகருக்கு சுற்றுலா வரலாம்.

Derek Blackadder

More News

Read more about: himachal pradesh
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+