Search
  • Follow NativePlanet
Share
» »வெறும் ரூ. 50,000 ஆயிரம் இருந்தால் போதும் – இந்த வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்லலாம்!

வெறும் ரூ. 50,000 ஆயிரம் இருந்தால் போதும் – இந்த வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்லலாம்!

சுற்றுலா செல்லும் எவருக்கும் வெளிநாடு சுற்றுலா செல்ல வேண்டும் என்ற ஆசை இருக்கும். என்ன தான் இந்தியாவில் பல இடங்களுக்கு சென்று வந்திருந்தாலும், வெளிநாட்டு ஊருக்கு சென்று வந்ததாக சொல்லுங்களேன். அனைவருமே சற்று நின்று என்ன ஏது என்று கேக்கிறார்கள் அல்லவா! ஆனால் அதிக பட்ஜெட் இல்லையே, எப்படி வெளிநாடுகளுக்கு செல்வது என்ற யோசனையா? கவலை வேண்டாம். வெறும் 50000 ஆயிரம் ரூபாய் இருந்தால் போதும். கீழே லிஸ்டில் கொடுக்கப்பட்டுள்ள இடங்களுக்கு சூப்பரா ட்ரிப் பிளான் பண்ணலாம்! எந்தெந்த இடங்கள் என்று பார்ப்போம் வாருங்கள்!

தாய்லாந்து

தாய்லாந்து

பட்ஜெட் பிரண்ட்லி இடங்களில் முதல் இடம் வகிப்பது தாய்லாந்து தான். ஏனெனில் அதிகப்படியான இந்தியர்கள் சுற்றுலா செல்லும் வெளிநாடு தாய்லாந்து தான். புத்தர் மற்றும் அரச அரண்மனைகளின் பழங்கால கோவில்களுக்கு மிகவும் பிரபலமான தாய்லாந்து தென்கிழக்கு ஆசியாவின் மையத்தில் அமைந்துள்ள ஒரு வெப்பமண்டல கடற்கரை சொர்க்கமாகும். விருந்து செல்லும் இடம் என்ற நற்பெயரைப் பெற்ற தாய்லாந்து, சாகசப் பிரியர்களுக்கு சொர்க்கமாக இருக்கும் கிராபிக்கு ஏராளமான நீர் விளையாட்டு ஆர்வலர்களை ஈர்க்கிறது. பல டிராவல் ஏஜென்சிகள் ரூ. 30,000 இல் இருந்தே தாய்லாந்து செல்வதற்கான பேக்கேஜுகளை வழங்குகிறது.

பாலி, இந்தோனேசியா

பாலி, இந்தோனேசியா

இந்தோனேசியாவின் இயற்கை அழகு மலிவான சாகசத்தை விரும்பும் ஆர்வமுள்ள பயணிகளிடையே ஒரு சுற்றுலா காந்தமாக அமைகிறது. இந்திய மற்றும் பசிபிக் பெருங்கடல்களுக்கு இடையில் அமைந்துள்ள இது, தீண்டப்படாத நீல நீர், அழகான கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் அற்புதமான பவளப்பாறைகள் கொண்ட உலகின் மிகப்பெரிய தீவு நாடாகும். இந்தோனேசியாவின் பாலி நகரம் தேனிலவு சுற்றுலாப் பயணிகளின் தலைநகரம் என்றே சொல்லலாம். இந்த ஊரின் பணமும், இந்திய ரூபாயின் மதிப்பை விட குறைவு என்பதால் சுற்றுலாவை நாம் பட்ஜெட்டில் முடித்துக் கொள்ளலாம்.

மலேசியா

மலேசியா

மலைத்தொடர்கள், காடுகள் நிறைந்த மலைகள், வெப்பமண்டல காலநிலை மற்றும் கடலோர சமவெளிகளைப் பார்ப்பவராக இருந்தால், மலேசியா உங்களுக்கு சரியான இலக்காக இருக்கும். இந்திய, தாய் மற்றும் மலாய் சுவைகள் கலந்த கவர்ச்சியான உணவுகளுடன், மலேசிய உணவு அதன் பல இன கலாச்சாரத்தை பிரதிபலிக்கிறது. மலேசிய முருகன் கோவில் முதல், அழகிய வீதிகள் வரை, தீம் பார்க்குகள் முதல் புகழ்பெற்ற பெட்ரோனாஸ் கோபுரங்கள் வரை அனைத்தும் ஒரு கம்மி பட்ஜெட்டில் நீங்கள் சுற்றிப் பார்க்கலாம்.

பூடான்

பூடான்

பூட்டானின் ஒவ்வொரு மூலையிலும் நீங்கள் அழகைக் காணலாம். எங்கு திரும்பினாலும் இயற்கை அழகு, புத்த துறவிகள், ஒரு வித அமைதி என பூட்டான் உங்கள் மனதை கொள்ளை கொள்ளும். பரோ தக்ட்சாங் மடாலயம், தாஷிச்சோ ட்சோங், புனாகா டிசோங், கிச்சு லகாங் கோயில் மற்றும் இமயமலை சாரலில் அமைந்துள்ள பல அழகிய சுற்றுலாத் தலங்கள் அனைத்தையும் ரூ. 50,000 இல் நீங்கள் சுற்றிப் பார்த்திடலாம்.

ஸ்ரீலங்கா

ஸ்ரீலங்கா

அழகிய கடற்கரைகள், வினோதமான இடங்கள், வரலாற்று நினைவுச்சின்னங்கள், மலைவாசஸ்தலங்கள், பரபரப்பான நகரங்கள் ஆகிய அனைத்தையும் நீங்கள் ஒரு சேர ரசிக்க வேண்டுமென்றால் நீங்கள் ஸ்ரீலங்காவிற்கு செல்லலாம். சிகிரியா, பல் கோயில், தம்புள்ளை குகைக் கோயில், பின்னவல யானைகள் அனாதை இல்லம் ஆகியவை யாவும் இங்கு நீங்கள் பார்க்க வேண்டிய இடங்களாகும்.

நேபாளம்

நேபாளம்

'லேண்ட் ஆஃப் தி இடி டிராகன்' என்று பிரபலமாக அறியப்படும் நேபாளம், இமயமலையின் சாரலில் அமைந்திருக்கும் ஒரு அழகிய நாடாகும். உயரமான பனி மூடிய சிகரங்கள், பசுமையான நிலபரப்பு, அமைதியான மடாலயங்கள் என உங்களுக்கு தனி அனுபவம் நேபாளம் தந்தாலும் இது ஒரு பட்ஜெட் பிரண்ட்லி இடமாகும். காத்மாண்டு பள்ளத்தாக்கு, பௌதநாத் கோயில், பசுபதிநாத் கோயில், தர்பார் சதுக்கம், ஃபெவா ஏரி ஆகியவற்றை இங்கு நீங்கள் தவறாமல் பார்வையிட வேண்டும்.

வியட்நாம்

வியட்நாம்

ஆசியாவின் மிகப்பெரிய குகை, ஹாலோங் விரிகுடா, தீவுகள், காடுகள், மத இடங்கள் ஆகியவற்றை கம்மி பட்ஜெட்டில் கண்டு களிக்க நீங்கள் வியட்நாமிற்கு செல்ல வேண்டும். பளிங்கு மலைகளும் பசுமையான நெல் பண்ணைகளும் உங்களை மெய் சிலிர்க்க வைக்கும். ஹா லாங் பே, கு சி சுரங்கங்கள், ஹோன் கியாம் ஏரி, போர் எச்சங்கள் அருங்காட்சியகம், Phú Quốc கடற்கரைகள், போ நகர் ஆகியவற்றை நீங்கள் இங்கே தவறவிடக் கூடாது.

பிலிப்பைன்ஸ்

பிலிப்பைன்ஸ்

மரகத நெல் வயல்களின் நிலம், ஜிப்சிகள், கிராஃபிட்டி சுவர்கள், எரிமலைகள், பெரிய கண்கள் கொண்ட டார்சியர்கள், ஃபிரிஸி நீர், மகிழ்ச்சியான முகங்கள் என பிலிப்பைன்ஸ் நம்மை வரவேற்கிறது. ஒவ்வொரு கடலிலும் மெரூன் படிந்த மணல், அங்கு டைவர்ஸ், சூரிய வழிபாடு செய்பவர்கள் மற்றும் சாகசப் பயணிகள் பலவான் கடற்கரையில் கூடாரம் அமைத்து இரவுகளைக் கழிக்கின்றனர். கம்மி விலையில் இந்தியாவிலிருந்து சுற்றுலா செல்லக் கூடிய இடங்களில் பிலிப்பைன்ஸும் ஒன்று.

கம்போடியா

கம்போடியா

தென்கிழக்கு ஆசியாவில் கோவில்களின் பேரரசுவாக காட்சி தரும் கம்போடியாவில் தான் உலகிலேயே மிகப்பெரிய கோவில் உள்ளதாம். புனோம் பென்னின் ஆற்றங்கரையோரங்கள், சிஹானூக்வில்லின் கடற்கரைகள், பட்டம்பாங்கின் காலனித்துவ நகரங்கள், மொண்டுல்கிரியின் முடிவில்லாத நெற்களஞ்சியங்கள் மற்றும் அமைதியை வழங்கும் விசித்திரமான அமைப்புகளுடன் கூடிய பசுமையான பூங்கா போன்ற பல்வேறு அனுபவங்களை கம்போடியா வழங்குகிறது.

சிங்கப்பூர்

சிங்கப்பூர்

நம்பமுடியாத அளவு படைப்பாற்றல், துடிப்பான கலாச்சாரம், பரபரப்பான வீதிகள், வண்ணமயமான ஷாப்பிங் என சிங்கப்பூர் நமக்கு ஒரு புது வித அனுபவத்தை வழங்குகிறது. 'தி லயன் சிட்டி' என்றும் அழைக்கப்படும் இது, பல்வேறு அலங்கரிக்கப்பட்ட கோவில்களில் அதன் கலாச்சாரத்தின் சில காட்சிகளுடன் பழைய பாரம்பரியத்துடன் தொடர்பில் உள்ளது. வானுயர்ந்த கட்டிடங்கள், தீம் பார்க்குகள், இரவு பார்ட்டிக்கள், வித விதமான உணவுகளை இங்கே நீங்கள் அனுபவிக்கலாம்.

மேற்கூறப்பட்ட அனைத்து நாடுகளுக்குமே சரியாக திட்டமிட்டால் ரூ. 50,000 இருந்தால் போதும் ஒரு நபருக்கு. நீங்கள் எப்போது செல்லப் போகிறீர்கள்?

More News

    Read more about: india foreign travel
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+