Search
  • Follow NativePlanet
Share
» »கவலை எல்லாம் மறந்து இயற்கையோடு இணைஞ்சு இருக்க இந்த இடத்துக்கு வாங்க!

கவலை எல்லாம் மறந்து இயற்கையோடு இணைஞ்சு இருக்க இந்த இடத்துக்கு வாங்க!

வாழ்க்கை, எதிர்காலம், வேலை பற்றிய கவலையிலே நாம் நம்மையே மறந்து விடுகிறோம். அவ்வப்போது ஒரு சின்ன பிரேக் எடுத்து நமது மனதிற்கும், உயிருக்கும் புத்துணர்ச்சி அளிப்பது மிகவும் அவசியம். பசுமையான பள்ளத்தாக்குகள், பொங்கி வழியும் ஆறுகள், செழிப்பான புல்வெளிகள் மற்றும் அடர்ந்த காடுகளுடன் ஒரு இயற்கை பொக்கிஷமாக காணப்படும் முப்பானேவுக்கு நீங்கள் சென்றால் நிச்சயம் உங்களுக்கு ஒரு மாறுதல் கிடைக்கும் என்று நாங்கள் உறுதியாக கூறுகிறோம்! இந்த அழகிய இடத்திற்கு எப்படி செல்வது? இந்த இடத்தின் ஸ்பெஷல் என்னவென்று முழு தகவல்கள் இதோ!

இயற்கையோடு ஒன்றிணைக்கும் முப்பானே

ஜோக் நீர்வீழ்ச்சியில் இருந்து வெறும் 6 கிமீ தொலைவில் அமைந்துள்ள இந்த ஷராவதி சாகச முகாம், சாகசத்துடன் கூடிய மலைகளின் பிரம்மாண்டத்தை ஒருங்கிணைக்கிறது. தலகலலே நீர்த்தேக்கத்தை ஒட்டிய ஒரு குன்றின் சரிவுகளில் அழகாக அமைந்திருக்கும் இந்த இயற்கை முகாம், சூரிய ஒளி மற்றும் மழையின் உற்சாகத்தை அளிக்கும் சிறந்த இடமாகும். ஒவ்வொரு பருவமும் இந்த அற்புதமான மலைகளுக்குச் செல்வதற்கு ஒரு புதிய காரணத்தைக் கொண்டுவருகிறது.

trekking

முன்பதிவு செய்வது அவசியம்

கர்நாடக வனத் துறையின் மேற்பார்வையின் கீழ் வருவதால் இங்கு வருவதற்கு முன் முன்பதிவு செய்திருத்தல் அவசியம். சாராவதி உப்பங்கழியில் அமைந்துள்ள இந்த இயற்கை முகாம், பெங்களூருவில் இருந்து 440 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. உங்களது சொந்த காரிலோ அல்லது பேருந்து மார்க்கமாகவோ NH 48 வழியாக முப்பானேவை வந்தடையலாம். ஏழு அல்லது எட்டு மணி நேர நீண்ட பயணத்திற்கு பிறகு, வரவேற்பு பலகையுடன் கூடிய பதாகை உங்களை வரவேற்க்கும்.

நீங்கள் சென்ற இலக்கை இன்னும் அடையவில்லை. உரிய அனுமதிகளைப் பெற்றவுடன், நீங்கள் வாயிலுக்குள் நுழைந்து காட்டின் கரடுமுரடான நிலப்பரப்பு வழியாகச் செல்ல வேண்டும். காட்டுக்குள் 3-4 கிமீ தூரம் சென்ற பிறகு விருந்தினர் மாளிகையை அடைவீர்கள்.

camping

உங்கள் மனது கொள்ளை போவது உறுதி

நீங்கள் ஒரு தீவில் இருக்கிறீர்களா அல்லது காட்டில் இருக்கிறீர்களா அல்லது ஒரு திரைப்படத்தில் இருக்கிறீர்களா என்று பலவும் உங்கள் மனதில் தோன்றி உண்மையை உணர சற்று நேரம் பிடிக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. தண்ணீரின் அலாதியான அமைதி, பறவைகளின் இனிமையான கூக்குரல், அடர்ந்த மரங்கள், அமைதியான மனம் என்று நீங்கள் அந்த இடத்தில் மூழ்கி போவது உறுதி!

படகு சவாரி, கயாக்கிங், நீச்சல் மற்றும் ட்ரெக்கிங்

முப்பானே பயணத்தின் வசீகரமும் தனிமையும் அந்த இடத்தில் எளிமையாக அமர்ந்து இயற்கையோடு ஒன்றிவிடுவதில் அடங்கியிருந்தாலும், வனத்துறை அதிகாரிகளால் ஏற்பாடு செய்யப்படும் படகு சவாரி, கயாக்கிங், நீச்சல் மற்றும் ட்ரெக்கிங் ஆகியவற்றில் நீங்கள் கலந்து கொள்ளலாம்.

site seeing

களைப்படைய வைக்காத முப்பானே ட்ரெக்கிங்

இயற்கை முகாமில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள 110 மீட்டர் உயரமான டப்பே நீர்வீழ்ச்சியை நீங்கள் ட்ரெக்கிங் செய்து ஆராயலாம். நீங்கள் மாலையில் கேம்ஃப் பைர் வைத்து மகிழலாம். இங்கு இருக்கும் சிறப்பம்சமே இந்த சின்ன சின்ன முகாம்களில் இரவில் தங்குவது தான். உங்கள் காதுகளில் கிசுகிசுக்கும் காற்றுடன் நீங்கள் அந்த நெருப்பைச் சுற்றி உட்கார்ந்தால், நம் கிரகத்தின் ஒவ்வொரு அடிப்படை கூறுகளான வானம், நீர், காற்று, பூமி மற்றும் நெருப்புடன் ஒன்றாக இருப்பதைக் காண்பீர்கள்.

jog falls

அனைவரும் கட்டாயம் செல்ல வேண்டிய இடம்

அனைத்து வனவிலங்கு புகைப்படக் கலைஞர்கள், இயற்கைக் கவிஞர்கள், அமைதியான உள்ளங்கள், கலைஞர்கள் மற்றும் ஓய்வுக்காகத் தேடும் அனைவருக்கும் இது ஒரு சரியான இடம். அமைதி உங்களுக்குள் மூழ்கியவுடன், இந்த மாயாஜால இடத்தை விட்டு வெளியேற உங்களை நீங்கள் சமாதானப்படுத்திக் கொண்டால் திரும்பி வரும் வழியில், ஜோக் நீர்வீழ்ச்சிக்கு ஊட்டமாக செயல்படும் செக் டேம் மற்றும் வெறும் 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஜோக் நீர்வீழ்ச்சி ஆகியவற்றைக் கண்டு நீங்கள் மகிழ்ச்சியடையலாம்.

More News

    Read more about: karnataka
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+