Search
  • Follow NativePlanet
Share
» »கூவத்தூரை விட கூடுதல் ஜாலி! குற்றாலம் ரிசார்ட்டில் குதூகலிக்க இவ்வளவு இருக்கா?

கூவத்தூரை விட கூடுதல் ஜாலி! குற்றாலம் ரிசார்ட்டில் குதூகலிக்க இவ்வளவு இருக்கா?

By IamUD

தென்இந்தியாவின் ஸ்பா அப்படின்னு பலரால அழைக்கப்படுற குற்றாலம், நம்ம தமிழ் நாட்டுல திருநெல்வேலி மாவட்டத்துல இருக்குற செம்மயான ஒரு பகுதி. மேற்கு தொடர்ச்சி மலைகள்ல கடல் மட்டத்துல இருந்து 167 மீட்டர் உயரத்ல இருக்குற இந்த குற்றாலம், நிறைய சுகாதார ஓய்வு விடுதிகள், அமைதியான ரிசார்ட்கள் அப்றமா மிக முக்கியமான மருத்துவ குணம் கொண்ட நீர்வீழ்ச்சிகளையும் பெற்றிருக்கு.. கூவத்தூர் ரிசார்ட்ட விட கூடுதல் வசதிகள் குதூகலிக்க தயாரா இருக்கு. மேலும் இங்க செம்ம ஜாலியா ரெண்டு நாளை கழிக்க அற்புதமான சுற்றுலாத் திட்டமும் இருக்கு.. வாங்க தொடர்ந்து படிக்கலாம்

 இசக்கி ஹைவியூ ரிசார்ட்

இசக்கி ஹைவியூ ரிசார்ட்

குற்றாலம் மற்றும் ஐந்தருவி முதன்மை சாலையில் இடைப்பட்ட ஒரு பகுதியில் அமைந்துள்ளது இந்த ரிசார்ட். தனியார் ரிசார்ட்டான இது இந்த பகுதியில் இருக்கும் அழகிய இடங்களுள் ஒன்றாகும்.

esakkiresorts

 எப்படி செல்வது

எப்படி செல்வது

திருநெல்வேலியிலிருந்து 62 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது இந்த இடம். பாவூர் சத்திரத்திலிருந்து குற்றாலம் செல்லும் சாலையில், பழைய குற்றாலம் நோக்கி திரும்புகையில் பாதி வழியிலேயே எழில் நிறைந்த இடங்கள் பல இருக்கின்றன. அவற்றில் ஒன்று தான் இந்த ரிசார்ட் ஆகும்.

ஹோட்டல் புக்கிங்கிற்கு

ஹோட்டல் புக்கிங்கிற்கு

நமது தளத்திலிருந்து ஹோட்டல் புக்கிங் செய்ய இதை சொடுக்குங்கள்

Santoshsellathurai

 என்னென்ன வசதிகள்

என்னென்ன வசதிகள்

இந்த பகுதி முழுவதும் பச்சை பசேலென காட்சி தரும் அழகிய செடி கொடிகளால் சூழப்பட்டுள்ளது. நடந்து செல்லும் தூரத்திலேயே அருவிகள் ஆர்ப்பரிக்கின்றன.

சுற்றிலும் மிதமான வெப்பநிலை, அப்பப்ப குளிர், மழை சாரல்னு நாம தமிழ்நாட்டுலதான் இருக்கோமானு யோசிக்குற அளவுக்கு நல்ல சூழ்நிலை நிலவும்.

Ruthran BalaGanesh

 காதல் ரசம் சொட்டும் சூழ்நிலை

காதல் ரசம் சொட்டும் சூழ்நிலை

இங்கு நிறைய வீடுகள் இருந்தாலும், நிசப்தமாக அழகிய வயலின் சத்தம் இசைப்பதை போல ஒரு நிலையை காட்டும்.

மற்ற எல்லா ரிசார்ட்டுகளிலும் இருக்கும், கார்பார்க்கிங், டிவி, ஏசி, வைபை, ஜிம் உட்பட இன்னும் பல அற்புத வசதிகள் செய்து தரப்பட்டிருக்கிறது.

இங்கு மினி பார் செட்டப்பும் இருக்கிறது.

esakkiresorts.com

 சீசன் காலங்கள்

சீசன் காலங்கள்

குற்றாலம் எல்லா நாட்களிலும் நன்றாகவே இருக்கும் என்றாலும், ஜூலை, செப்டம்பர், அக்டோபர், நவம்பர், ஜனவரி, பிப்ரவரி காலங்களில் மிகவும் அழகானதாக இருக்கும். உங்கள் அனுபவத்துக்கான காலம் இதுவாக இருக்கும்படி திட்டமிட்டுக்கொள்ளுங்கள்.

Raghukraman

ரிசார்ட்டை சுற்றி

ரிசார்ட்டை சுற்றி

கூவத்தூர் ரிசார்ட்டை ஒப்பிடும்போது இது இன்னும் இரண்டு மூன்று மடங்கு செம்ம ஜாலியான குதூகலிக்க ஏற்ற ரிசார்ட்.. அங்கு வெளியில் சென்றால் கடற்கரை மட்டும்தான் இருந்தது. ஆனால், குற்றாலத்திலோ என்னென்ன இருக்கிறது என்று நீங்களே பாருங்கள்.

பழைய குற்றாலம், பழைய குற்றால அருவி, குற்றால முதன்மை அருவி, ஐந்தருவி, அருகிலேயே மூன்று அழகிய ஏரிகள், குற்றால அருவியின் சத்தம் காதில் விழுந்துகொண்டே இருக்கும். இன்னும் கொஞ்ச தூரம் போனால் அருவிதலை நீர்வீழ்ச்சி, தேனருவி என பல இடங்கள் இருக்கின்றன. அருகிலேயே பல தோப்புகளும், வரப்புகளும் உங்களை கிட்டத்தட்ட நாகரிக கிராமத்துக்கே அழைத்துச் செல்லும் இந்த பயணம்.

Muthukumaran

படகு குழாம்

படகு குழாம்

படகு குழாம் இளையவரையும் முதியவர்களையும் இதன் கண்ணை கவரும் அழகு மற்றும் படகு சவாரிக்கு ஈர்க்ககூடிய மிக பிரபலமான சுற்றுலா தலமாகும். இந்த படகு குழாம் பிரதான அருவி (அ) ஐந்தருவி மற்றும் பழைய குற்றால அருவி (அ) ஐந்தருவி உள்ள மேலவெண்ணமாடைகுளம் செல்லும் வழியில் உள்ளது.

PREVRAVANTH

மகாதேவ கிரி

மகாதேவ கிரி

மகாதேவ கிரி சமய முக்கியத்துவம் வாய்ந்தாக கருதப்படுகிறது. ஏனென்றால் இது நான்கு முக்கிய சமயம் சார்ந்தவர்களான செண்பகதேவி, முருக கடவுள் தஷிணாமூர்த்தி மற்றும் அகஸ்திய முனிவர் ஆகியோர் சந்தித்த இடம் என்று நம்பப்படுகிறது.

அதே நேரத்தில் இது மிக அழகிய காட்சிகளடங்கிய இடம் ஆகும். மிகவும் நன்றாக அமைந்துள்ள பகுதிகள் மனதில் இருக்கும் காதலை வெளிப்படுத்த ஏற்ற தளமாக உள்ளது.

இந்த சந்திப்பு தான் கலியுகத்தின் ஆரம்பம் என்றும் சொல்லப்படுகிறது. தேனருவிக்கு சற்று மேலே இந்த புனித தலம் அமைந்துள்ளது.

ILAKKIA KAMARAJ

 பாம்பு பூங்கா

பாம்பு பூங்கா

பாம்பு பூங்கா ஒரு புகழ்பெற்ற சுற்றுலாத்தலமாகும். இப்பூங்கா முதன்மை அருவி அல்லது ஐந்தருவி அருகில் அமைந்துள்ளது. இதற்கு அருகிலுள்ள கண்கவர் இடங்கள் சிறுவர் பூங்கா மற்றும் மீன் பண்ணை முதலியன ஆகும். பாம்பு பண்ணையில் பல்வேறு வகையான பாம்புகள் உள்ளன

Kalyani Patake

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Nativeplanet sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Nativeplanet website. However, you can change your cookie settings at any time. Learn more