Search
  • Follow NativePlanet
Share
» »கலாச்சாரக்காவலர்களே! தமிழகத்தின் இந்த உல்லாச விடுதிகள் பற்றி தெரியுமா?

கலாச்சாரக்காவலர்களே! தமிழகத்தின் இந்த உல்லாச விடுதிகள் பற்றி தெரியுமா?

கலாச்சாரக்காவலர்களே! தமிழகத்தின் இந்த உல்லாச விடுதிகள் பற்றி தெரியுமா?

By Staff

உலகமே மாறி வருகிறது. மேற்கத்திய கலாச்சாரம் மேல் பற்றுக்கொண்டு அனைவரும் அந்த மாதிரியான உடை, நடை, உணவுப் பழக்கவழக்கத்திற்கு மாறி வருகின்றனர்.

இங்கு சிலர் காதலர் தினத்துக்கே தடைவிதிக்கவேண்டும், கலாச்சாரத்தை கெடுக்கிறார்கள் என்று குமுறிக்கொண்டிருக்கும்போது, நாம் ஒரு விசயத்தைப் பற்றி நன்கு யோசிக்கவேண்டும்.

உல்லாசம் என்ற வார்த்தையே கெட்டவார்த்தையான பிறகு அந்த வார்த்தையை வேறெதிலும் பயன்படுத்தமுடியாததாகி விட்டது. எனினும் இன்பமயமாக நண்பர்களுடன் கொண்டாடி மகிழும் சில விடுதிகள் நம் தமிழகத்திலேயே இருக்கின்றன. விடுமுறை காலங்களில் வாரஇறுதிகளில் இங்கெல்லாம் கூட்டம் அலைமோதுகிறது.

வாரம் முழுவதும் இறுக்கமான மனநிலைக்கு சென்றுவிடுகின்ற இளைஞர்கள் இந்த இடத்துக்கு சென்று தங்களை புத்துணர்ச்சியடைந்துகொள்கின்றனர். சரி இப்போது தமிழகத்தில் எங்கெல்லாம் இந்த உல்லாச விடுதிகள் இருக்கின்றன என்று பார்க்கலாமா?

ஹவானா, ரெயின்ட்ரீ ஹோட்டல்

ஹவானா, ரெயின்ட்ரீ ஹோட்டல்

சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள ரெயின்ட்ரீ ஹோட்டலில் அமைந்துள்ள ஹவானா டிஸ்கோதேக் உள்நாட்டு மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட பானங்களுக்காக புகழ்பெற்றது. இங்கு உலகத்தரம் வாய்ந்த மற்றும் புதுமையான காக்டெயில்கள், ட்ராட் பீர் உள்ளிட்ட மது வகைகளை நீங்கள் ருசிக்கலாம். இந்த டிஸ்கோதேக்கில் கூட்டம் அவ்வளவாக இருக்காது என்தால் காதலர்களை நிறைய எண்ணிக்கையில் இங்கு காணலாம்.

மேலும் தகவலுக்கு

டப்ளின், பார்க் ஷெரட்டன்

டப்ளின், பார்க் ஷெரட்டன்

சென்னை டி.டி.கே சாலையில் உள்ள 5 நட்சத்திர ஹோட்டலான பார்க் ஷெரட்டனில் இந்த டப்ளின் டிஸ்கோதேக் அமைந்துள்ளது. இங்குள்ள நடனத்தளம் மிகப்பெரியது என்பதுடன், சென்னையில் மிகப்பெரிய டிஸ்கோதேக்குகளில் ஒன்றாகவும் டப்ளின் திகழ்ந்து வருகிறது. இந்த டிஸ்கோதேக்கில் உணவு, மது, நடனம், இசை என்று எல்லாமே அமர்க்களப்படுவதால் அடிக்கடி இங்கே தமிழ் திரையுலக பிரபலங்களை பார்க்க முடிகிறது. இது சாதாரண நாட்களில் 8 முதல் 12 மணி வரையிலும், வார இறுதி நாட்கள் மற்றும் விசேஷ நாட்களில் 8 முதல் 3 மணி வரையிலும் திறந்திருக்கும்.

மேலும் தகவலுக்கு

ஃப்ளேம் லீ கிளப், லீ ராயல் மெரிடியன்

ஃப்ளேம் லீ கிளப், லீ ராயல் மெரிடியன்

சென்னையில் கத்திப்பாரா பட்டர்ஃபிளை மேம்பாலத்துக்கு அருகில் உள்ள நட்சத்திர ஹோட்டலான லீ ராயல் மெரிடியனில் ஃப்ளேம் லீ கிளப் அமைந்துள்ளது. இங்கு 'அப்போஜி சவுண்ட்' தொழிற்நுட்பம் பயன்படுத்தப்படுவது இதன் உலகத்தரத்தை எடுத்துரைக்கிறது. இந்த வகை தொழிற்நுட்பம் கிராமி அவார்ட் வழங்கும்போது பயன்படுத்தப்படுகிறது. இப்படி கட்டமைப்பு, தொழிற்நுட்பம் என்று அற்புதமான மாலைநேரத்தை உங்களுக்கு ஃப்ளேம் லீ கிளப் ஏற்படுத்திக்கொடுக்கிறது.

மேலும் தகவலுக்கு

ஸ்டார் ராக், ஸ்ப்ரிங் ஹோட்டல்

ஸ்டார் ராக், ஸ்ப்ரிங் ஹோட்டல்

நுங்கம்பாக்கத்தில் உள்ள ஸ்ப்ரிங் ஹோட்டலில் அமைந்துள்ள ஸ்டார் ராக் டிஸ்கோதேக் சென்னையின் முக்கியமான நைட் கிளப்புகளில் ஒன்று. இங்கு மிகப்பெரிய காக்டெயில் பார், அட்டகாசமான இசை, அற்புதமான நடனத்தளம் என்று அருமையான காதலர் தின கொண்டாட்டம் உங்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது.

மேலும் தகவலுக்கு

பாஷா, தி பார்க்

பாஷா, தி பார்க்

சென்னை அண்ணா சாலையில் உள்ள 5 நட்சத்திர ஹோட்டலான தி பார்க் ஹோட்டலில் அமைந்திருக்கும் பாஷா, திரையுலக பிரபலங்களை ஈர்க்கும் நைட் கிளப்புகளில் ஒன்று. இங்கே உங்கள் காதலரோடு உற்சாகமாக நடனமாட அற்புதமான நடனத்தளம் இருக்கிறது. அதோடு பல்வேறு வசதிகள் கொண்ட இந்த நைட் கிளப் சென்னையின் மிக முக்கியமான டிஸ்கோதேக்குகளில் ஒன்றாகும்.

மேலும் தகவலுக்கு

ஸ்பார்க்ஸ், சவேரா

ஸ்பார்க்ஸ், சவேரா

சென்னை இராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள சவேரா ஹோட்டலில் ஸ்பார்க்ஸ் நைட் கிளப் அமைந்துள்ளது. இங்கு உள்ள நடனத்தளம் மிகப்பெரியதாக இருப்பதால் டிஸ்கோதேக் தேடி சென்னை வரும் பயணிகளுக்கு இது ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்.

மேலும் தகவலுக்கு

ஹைதராபாத்திலும் ஒரு தாஜ்மஹால்

ஹைதராபாத்திலும் ஒரு தாஜ்மஹால்

ஹைதராபாத்திலும் ஒரு தாஜ்மஹால்... உங்களுக்குத் தெரியாத மர்மங்கள்..!!

இந்த இடத்த புடிச்சா போதும் காவிரி தமிழ்நாட்டுக்குத்தான்

இந்த இடத்த புடிச்சா போதும் காவிரி தமிழ்நாட்டுக்குத்தான்

இந்த இடத்த புடிச்சா போதும் காவிரி தமிழ்நாட்டுக்குத்தான் - சோழர்களின் சாமர்த்தியம்

உயர்ந்துகொண்டே செல்லும் அம்மன் சிலை

உயர்ந்துகொண்டே செல்லும் அம்மன் சிலை

உயர்ந்துகொண்டே செல்லும் அம்மன் சிலை... எங்கே தெரியுமா ?

கொல்கத்தாவின் உண்மை முகம்!

கொல்கத்தாவின் உண்மை முகம்!

100 வருடங்களுக்கு முன்னும்! பின்னும்! கொல்கத்தாவின் உண்மை முகம்!

More News

Read more about: சென்னை
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+