Search
  • Follow NativePlanet
Share
» »கஞ்சாவிற்கு என பிரத்யேகமாக ஒரு அருங்காட்சியகம் – மாணவர்கள் கூட பார்வையிடலாமாம்!

கஞ்சாவிற்கு என பிரத்யேகமாக ஒரு அருங்காட்சியகம் – மாணவர்கள் கூட பார்வையிடலாமாம்!

வரலாற்று சிறப்புமிக்க அருங்காட்சியகம், ராணுவ அருங்காட்சியகம், தேசத் தலைவர்களின் அருங்காட்சியகம், ஏன் காபி தேயிலை அருங்காட்சியகம் கூட நாம் பார்த்திருக்கிறோம்! ஆனால் இங்கே கஞ்சாவிற்கு என பிரத்யேகமாக ஒரு அருங்காட்சியகம் இருக்கிறது தெரியுமா? உலகப்புகழ்பெற்ற நியூயார்க் நகரில் தான் இந்த அருங்காட்சியகம் அமைந்திருக்கிறது. இதன் பின்னால் ஏகப்பட்ட சுவாரஸ்யமான விஷயங்கள் ஒளிந்து இருக்கிறது! என்னவென்று பார்ப்போம் வாருங்கள்!

weedmuseumcover

நியூயார்க்கில் அமைக்கப்பட்டுள்ள வித்தியாசமான அருங்காட்சியகம்

அருங்காட்சியகங்கள் நிச்சயமாக குறிப்பிட்ட ஒன்றைப் பற்றி விரிவாகத் தெரிந்துகொள்ள சிறந்த இடங்களில் ஒன்றாகும். நியூயார்க் நகரில் விரைவில் திறக்கப்படும் இந்த புத்தம் புதிய அருங்காட்சியகம் மற்ற எல்லா அருங்காட்சியகங்களிலிருந்தும் வித்தியாசமானது. "தி ஹவுஸ் ஆஃப் கஞ்சா" (THC NYC) என்று பெயரிடப்பட்ட இது உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த கஞ்சா அருங்காட்சியகம் நீங்கள் முன்பு அனுபவித்த பெரும்பாலான அருங்காட்சியகங்களைப் போலல்லாமல் ஒரு வித்தியாசமான உணர்வை வழங்க தவறாது என பலரும் கூறுகின்றனர்.

பார்வையாளர்களுக்காக காத்திருக்கும் பல சுவாரஸ்யங்கள்

மன்ஹாட்டனின் சோஹோ சுற்றுப்புறத்தில் 427 பிராட்வேயில் அமைந்துள்ள இந்த நான்கு அடுக்கு கட்டிடம், அதன் 25,000-சதுர-அடியில் பிராமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தின் ஒவ்வொரு அங்குலமும் கவர்ச்சிகரமான உண்மைகள் மூலம் அனைத்து தரப்பினரையும் மகிழ்விக்க ஏற்றதாக இருக்கும் என இதன் உரிமையாளர்களான மார்செல் ஃப்ரே மற்றும் ராபர்ட் ஃப்ரே ஆகியோர் கூறுகின்றனர்.

weedmuseum

ஏப்ரல் 7 முதல் தி ஹவுஸ் ஆஃப் கஞ்சா

நியூயார்க்கில் அமைக்கப்பட்டுள்ள இந்த புதிய கஞ்சா அருங்காட்சியகத்தின் கதவுகள் ஏப்ரல் 7 ஆம் தேதி திறக்கப்படுகின்றன. மனதை மாற்றும் பல அனுபவங்களை இங்கே காண நீங்கள் தயாராகலாம். தி ஹவுஸ் ஆஃப் கஞ்சா உங்களை பல கலைத் துண்டுகள், சாகுபடி, கஞ்சா கலாச்சாரத்தின் வளமான வரலாறு, ஃபேஷன், இசை மற்றும் பல காட்சி அனுபவங்களுடன் உங்களுக்கு ஒரு புதுவிதமான அனுபவத்தைக் கொடுக்கும் என்று கூறப்படுகிறது.

weedmuseum

பலவகையான புது விதமான அனுபவங்கள்

கஞ்சா அருங்காட்சியகத்தில் பல தனித்துவமான அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவை குறிப்பிடத்தக்க அனுபவங்களை வழங்குவதற்காக கட்டப்பட்டுள்ளன. அதனைக் கண்டு ஆராய்வது மூலம் பல புதிய விஷயங்களை நீங்கள் அறிந்துக் கொள்ளலாம்.

1. டிஸ்ஓரியன்டேஷன் அரை

2. சீட் to சோல்

3. தி யுபோரியம்

4. தி ஃபோரம்

5. தி க்ரோ

6. தி ஹிப்னோட்ரோம்

7. தி ஜாயின்ட்

8. தி மைக்ரோவர்ஸ்

9. தி ஆல்ஃபாக்டரி

10. தி ஸ்பாட்

weedmuseum

நுழைவுக்கட்டணம்

15 மில்லியன் டாலர் மதிப்பில் எழுப்பட்டுள்ள இந்த கஞ்சா அருங்காட்சியகம், வாரத்தில் ஏழு நாட்களும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். THC NYC க்கான டிக்கெட் விலை மாணவர்கள் மற்றும் இராணுவப் பணியாளர்களுக்கு $25 (இந்திய ரூபாயின் மதிப்பில் ரூ.2,000), பொது மக்களுக்கு $39 (இந்திய ரூபாயின் மதிப்பில் ரூ.3,200) மற்றும் விஐபி டிக்கெட்டுகளின் விலை $75 (இந்திய ரூபாயின் மதிப்பில் ரூ.6,150) ஆகும்.

இந்த இடத்தில் ஏராளமான பொழுதுபோக்கு விருப்பங்கள் மற்றும் ஒரு அருமையான ஓட்டலும் உள்ளது, அதோடு மட்டுமல்லாமல் ஆடைக் கடைகளும் உள்ளன. இந்த கஞ்சா அருங்காட்சியகம் அனைவருக்கும் சிறந்த சுவாரஸ்யமான அனுபவங்களை வழங்கும் என கூறி வருகின்றனர்..

More News

    Read more about: weed museum usa america
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+