Search
  • Follow NativePlanet
Share
» »திருச்சியில இருந்து ஜில்லுன்னு ஒரு நாள் ட்ரிப் – இந்த 3 மலைவாசஸ்தலங்கள் தான் பெஸ்ட் சாய்ஸ்!

திருச்சியில இருந்து ஜில்லுன்னு ஒரு நாள் ட்ரிப் – இந்த 3 மலைவாசஸ்தலங்கள் தான் பெஸ்ட் சாய்ஸ்!

நீங்கள் திருச்சியில் வசிப்பவரா? அடிக்கிற வெயிலுக்கு இதமா எங்கயாச்சும் போய்ட்டு வந்தா நல்லா இருக்கும் என்று தோன்றுகிறதா? கவலையை விடுங்க. உங்களுக்கு அருமையா ஒரு டிராவல் பிளான் இந்த கட்டுரையில் இருக்கு. ஒரு நாளில் கிளம்பி அழகான மலைவாசஸ்தலத்திற்கு சென்று சூப்பரா நேரத்தை செலவழித்துவிட்டு ஒரே நாளில் வீட்டுக்கு திரும்பலாம். திருச்சிக்கு பக்கத்தில அப்படி ஒரு நாள் ட்ரிப் அடிக்க சூப்பரா மூன்று மலைவாசஸ்தலங்கள் இருக்கு தெரியுமா? அந்த மலை வாசஸ்தலங்கள் என்னென்ன? அவற்றிற்கு எப்படி செல்வது என்ற தகவல்கள் கீழே!

paichamaliccover

பச்சைமலை

திருச்சிராப்பள்ளிக்கு வடக்கே 80 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள பச்சமலை மலைகள், பசுமையான மலைத்தொடராகும். திருச்சி வாசிகளுக்கு மிகவும் பிரபலமான இந்த பச்சைமலை மலைத்தொடர் ஆண்டு முழுக்க பச்சை பசேல் என மலைகளைக் கொண்டு இதமான வானிலையை வழங்குவதால் இதற்கு பச்சைமலை என்று பெயர் வந்ததாக கூறப்படுகிறது. பச்சைமலை மலைகள் வழியாக சுவேதா நதி மற்றும் கல்லாறு ஆறுகள் ஓடுகின்றன. நீர்வீழ்ச்சிகள், ஹைகிங் பாதைகள் மற்றும் மருத்துவ தோட்டங்கள் ஆகியவை பச்சை மலையின் சிறப்பான விஷயங்களாகும்.

இது சமீபத்தில் ஒரு சுற்றுச்சூழல் சுற்றுலா தலமாக பிரபலமடைந்துள்ளது, குறிப்பாக வார விடுமுறைக்கு. திருச்சியில் இருந்து ஒரே நாளில் கிளம்பி சுற்றிப்பார்த்துவிட்டு வீடு திரும்பக்கூடிய இடங்களில் பச்சைமலை ஹில் ஸ்டேஷன் முதல் இடம் வகிக்கிறது.

kollimalai1

கொல்லிமலை

நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள கொல்லி மலை அதன் ஆபத்தான ஹேர்பின் பெண்டுகளால் 'மௌண்டெயின் ஆஃப் டெத்' என அழைக்கப்படுகிறது. ஜோடி ஜோடியாக கொல்லி மலையில் பைக்கில் பிரயாணம் செய்வது சமீப காலத்தில் அதிகரித்து வருகிறது. திருச்சியில் இருந்து 100 கிமீ தொலைவில் அமைந்துள்ள கொல்லிமலை பல அழகிய நீர்வீழ்ச்சிகள், பள்ளத்தாக்குகள், வியூபாயின்ட்கள் உட்பட பல வசீகரமான இடங்களுக்கு தாயகமாக உள்ளது.

கொல்லிமலை ஊட்டி, கொடைக்கானல் போன்று வணிக அளவில் இன்னமும் பிரபலமடையாமல் இருப்பதால் அதன் இயற்கை அழகு சற்றும் மாசடையாமல் இருக்கிறது. அதிக கூட்டத்தில் சிக்கி கொள்ளாமல் தனிமையை விரும்பும் நமக்கு இந்த இடம் தான் சரியான சாய்ஸ். முக்கியமாக கொல்லி மலைக்கு சென்று திரும்பும் போது, அங்கே விற்கும் மசாலா பொருட்களை வாங்க மறக்காதீர்கள்.

sirumalai1

சிறுமலை

திண்டுக்கல்லில் இருந்து 25 கிமீ தொலைவில் அமைந்துள்ள சிறுமலை 60,000 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்திருக்கும் ஒரு அழகிய மலை வாசஸ்தலமாகும். கடல் மட்டத்திலிருந்து 1600 மீட்டர் உயரத்தில் இருக்கும் சிறுமலை ஆண்டு முழுவதும் மிதமான தட்பவெப்ப நிலை கொண்ட அடர்ந்த வனப்பகுதியாகும். இங்கே நீங்கள் பலதரப்பட்ட தாவரங்கள் மற்றும் விலங்கினங்களையும் கண்டு மகிழலாம்.

சிறுமலை மலைகள் ஒரு ஆஃப்பீட் மலை வாசஸ்தலமாக இருந்தாலும், பல சிறிய நகரங்கள் இந்த அழகிய இடங்களில் அமைந்துள்ளன, மேலும் எதிர்காலத்தில் இதை ஒரு தனித்துவமான சுற்றுலாத் தலமாக நவீனமயமாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சிறுமலையின் ஹேர்பின் வளைவுகள் மீது பயணம் செய்வது அங்கே நின்று அதன் செழுமையான வனாந்திரத்தை ரசிப்பது என உங்களுக்கு அங்கே நேரம் போவதே தெரியாது.

இந்த மூன்று இடங்களில் நீங்கள் முதலில் எந்த இடத்திற்கு இந்த வார இறுதியில் செல்ல போகிறீர்கள்?

More News

    Read more about: trichy tamilnadu
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+