அழகிய வண்ணமயமான கடற்கரைகள், பசுமையான காடுகள், பவளப்பாறைகள், வரலாற்றுக் கட்டிடங்கள், ஸ்கூபா டைவிங், ஸ்நோர்கெலிங், சுட சுட கடல் உணவுகள் இவை யாவும் அந்தமானில் நீங்கள் அனுபவிக்கக்கூடிய விஷயங்களாகும். மயக்கவைக்கும் இயற்கை அழகுடன் கூடிய அந்தமான் சுற்றுலாத் தலங்களை சுற்றிப் பார்க்க ஆசையா? உங்களுக்காகவே IRCTC 5 இரவுகள் மற்றும் 6 நாட்கள் கொண்ட ஒரு அசத்தலான டூர் பேக்கேஜை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த டூர் பேக்கேஜின் கீழ் எந்தெந்த இடங்களைச் சுற்றிப் பார்க்கலாம்? கட்டணம் எவ்வளவு? தேதி? ஆகிய தகவல்கள் இதோ கீழே!

ஆண்டின் எல்லா நாட்களிலும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் அந்தமான்
உலகின் எந்தெந்த மூலையில் இருந்தோ மக்கள் நம் அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு சுற்றுலாவிற்காக வருகிறார்கள்! ஆனால் இந்தியாவில் இருக்கும் பெரும்பான்மையான மக்கள் அந்தமான் தீவுகளுக்கு சென்றது இல்லை. அது கடல் கடந்து இருப்பதும், சரியான தகவல்கள் தெரிய வராமல் இருப்பதுமே அதற்கு காரணம். காலாபானி என்று பிரபலமாக அழைக்கப்படும் அந்தமான் உலகின் மிகவும் கவர்ச்சிகரமான இடங்களில் ஒன்றாகும். மேலும் இது ஏராளமான இயற்கை வளங்களால் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது. இது தவிர, இந்த இடம் சுத்தமான மற்றும் அழகிய கடற்கரைகள், தெளிவான நீர், பரந்த கடற்கரை மற்றும் அழகான இயற்கை அழகு ஆகியவற்றைக் கொண்டுள்ளது! மேலும் இது நீர் விளையாட்டுகளை விரும்புவோருக்கு சொர்க்கமாகும். இங்கே ஸ்நோர்கெலிங் செய்வதும் ஸ்கூபா டைவிங் செய்வதும் மிகவும் விசேஷமாகும்.

IRCTC யின் அசத்தல் ஆஃபர்
இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (IRCTC) உதவியுடன் அந்தமானில் அழகிய இடங்களை நீங்கள் சுற்றிப் பார்க்கலாம். போர்ட் பிளேர், ஹேவ்லாக் தீவு, நீல் தீவு, ராஸ் மற்றும் நார்த் பே தீவு உள்ளிட்ட இடங்கள் IRCTC அந்தமான் டூர் பேக்கேஜ் மூலம் நீங்கள் கண்டு களிக்கலாம். 5 இரவுகள் மற்றும் 6 நாட்கள் நீடிக்கும் இந்த சுற்றுப்பயணம் ஏப்ரல் 29 அன்று தொடங்கும். IRCTC அந்தமான் டூர் பேக்கேஜ் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் இங்கே.

தினமும் 3 வகையான அந்தமான் டூர் பேக்கேஜ்கள்
IRCTC சென்னையிலிருந்து அந்தமானுக்கு தினசரி டூர் பேக்கேஜ்களை இயக்கி வருகிறது. இது நம்மில் பல பேருக்கு தெரியாது என்று தான் சொல்ல வேண்டும். மூன்று வகையான டூர் பேக்கேஜ்களை IRCTC வழங்குகிறது. ஒரு நபருக்கான கட்டணம் ரூ.16000 ஆயிரத்தில் இருந்து ரூ.47000 வரை டிக்கெட் கட்டணம் வசதி வாரியாக வித்தியாசப்படுகிறது. நீங்கள் தனியாக போவதை விட டபுள் அல்லது ட்ரிபிள் ஆக்குபன்சியில் சென்றால் டிக்கெட் கட்டணம் பாதியாக குறைகிறது.

பேமிலி அந்தமான் ஹாலிடேஸ் கோல்ட் பேக்கேஜ்
பேமிலி அந்தமான் கோல்ட் பேக்கேஜின் கீழ் தினமும் புறப்படும் பேக்கேஜில் நீங்கள் ஹேவ்லாக் தீவு, நீல் தீவு, போர்ட் பிளேயர் ஆகிய இடங்களில் உள்ள அழகிய சுற்றுலாத் தலங்களைச் சுற்றிப் பார்ப்பீர்கள். பிரிமியம் ஹோட்டல்களில் தங்கவைக்கப்படுவீர்கள். ட்ரிபிள் ஆக்குபன்சியில் ஒரு நபருக்கான கட்டணம் ரூ.23665, டபுள் ஆக்குபன்சியில் ஒரு நபருக்கான கட்டணம் ரூ.25880, சிங்கிள் ஆக்குபன்சியில் ஒரு நபருக்கான கட்டணம் ரூ.39245. இந்த கட்டணமே அக்டோபர் மாதத்திற்கு மேல் மாறுகிறது.

மற்ற 2 பேக்கேஜ்கள்
மேற்கூறிய பேக்கேஜ் போலவே ரொமான்டிக் அந்தமான் ஹாலிடேஸ் கோல்ட் பேக்கேஜும், எக்ஸோடிக் அந்தமான் ஹாலிடேஸ் கோல்ட் பேக்கேஜும் IRCTC ஆல் இயக்கப்படும் தினசரி பேக்கேஜ்கள் ஆகும். இவற்றில் ட்ரிபிள் ஆக்குபன்சியில் ஒரு நபருக்கான கட்டணம் முறையே ரூ.28825 மற்றும் ரூ.16600, டபுள் ஆக்குபன்சியில் ஒரு நபருக்கான கட்டணம் முறையே ரூ.31925மற்றும் ரூ.18255, சிங்கிள் ஆக்குபன்சியில் ஒரு நபருக்கான கட்டணம் முறையே ரூ.47890 மற்றும் ரூ.24505 . இந்த கட்டணங்களும் அக்டோபர் மாதத்திற்கு மேல் மாறுகிறது.

டூர் பேக்கேஜுடன் கூடிய இதர வசதிகள்
விமான நிலையத்தில் பிக்-அப் மற்றும் டிராப்-ஆஃப் போன்ற அனைத்து இடமாற்றங்களுடன் முழு நாள் சுற்றுப்பயணம், சூடான உணவுகள், எல்லா இடங்களிலும் ஏர் கண்டிஷனிங் வசதிகள், நுழைவுக் கட்டணங்கள் மற்றும் பயணக்காப்பீடு ஆகியவை இந்த சுற்றுலாப் பேக்கேஜுடன் சேர்ந்து வருகிறது. நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் ஒன்றே ஒன்று தான், உங்கள் நண்பர்களுடன் சேர்ந்து டிக்கெட் புக் செய்து அந்தமானை சுற்றிப் பார்த்துவிட்டு வாருங்கள்!



Click it and Unblock the Notifications




