Search
  • Follow NativePlanet
Share
» »கனவுகளின் நகரம் மும்பை!!!

கனவுகளின் நகரம் மும்பை!!!

By

மும்பை கனவுகளின் நகரமாகவும், நாகரிகத்தின் சின்னமாகவும், அதிர்வலைகளை ஏற்படுத்தும் வாழ்வியல் முறைகளுக்காகவும், பாலிவுட்டின் இல்லமாகவும் பிரபலமாக அறியப்படுகிறது.

சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் உலக மக்கள் அமெரிக்காவை கண்டு கனவு காண்பதை போல, இந்திய மக்கள் மும்பைக்காக கனவு காண்கிறார்கள்.

மும்பையின் ஜனக் கூட்டமும், பல்வேறு இடங்களும், பலவகைப்பட்ட வழிபாடுகளும், எண்ணற்ற உணவு வகைகளும் அதன் வெவ்வேறு நிறங்களை பளிச்சென எடுத்துக்காட்டுகின்றன. இதன் காரணமாக மும்பை நகரம் இந்தியாவின் தனித்துவம் மிக்க சுற்றுலாத் தலமாக விளங்கி வருகிறது.

மும்பை ஹோட்டல் டீல்கள்

மும்பையின் சுற்றுலாத் தலங்கள்

மும்பையின் சுற்றுலாத் தலங்கள்

மும்பையின் பிரபலமான சுற்றுலாத்தலங்களான கேட் வே ஆஃப் இந்தியா, ஜூஹு பீச், மரீன் டிரைவ் தவிர எண்ணற்ற சுற்றுலாத் தலங்கள் இங்கு நாள்தோறும் ஏராளமான பயணிகளை ஈர்த்து வருகின்றன. அவற்றில் கொலாபா காஸ்வே, எஸல் வேர்ல்ட் மற்றும் வாட்டர் கிங்டம், ஹாஜி அலி மசூதி, மும்பை ஸீ லிங்க், பேண்ட்ஸ்டாண்ட், ஃபேஷன் ஸ்ட்ரீட், தொங்குதோட்டம் ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

படம் : Cididity Hat

சோர் பஜார்

சோர் பஜார்

தெற்கு மும்பையின் பேண்டி பஜார் அருகே இந்த சோர் பஜார் அமைந்துள்ளது. சோர் என்றால் இந்தி மொழியில் 'திருடன்' என்று அர்த்தம். மும்பையில் உங்களுடைய பொருள் காணாமல் போனால் அதை நீங்கள் சோர் பஜாரில் கண்டுபிடிக்க முடியும் என்று ஒரு நம்பிக்கை உள்ளது. ஆனால் 'இரைச்சலான சந்தை' (Shor Market) என்ற பொருளிலேயே முன்பு இது அழைக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இங்கு திருட்டுப் பொருட்கள் கிடைக்கும் என்று நம்பப்பட்டாலும், செகண்ட் ஹேன்ட் மார்கெட் என்றே சோர் பஜார் பரவலாக அறியப்படுகிறது.

படம் : A Vahanvati

தாராவி

தாராவி

தாராவி பகுதியில் வசிக்கும் குழந்தைகள் மழையில் நடனமாடி குதூகலிக்கும் கட்சி.

படம் : Dinesh Bareja

கபூதர்கானா

கபூதர்கானா

மும்பையின் தாதர் ரயில் நிலையத்துக்கு அருகர் கபூதர்கானா அமைந்துள்ளது. கபூதர்கானா என்றால் ஹிந்தியில் புறாக்கள் இல்லம் என்று அர்த்தம்.

படம் : Arjun Shekar

குதிரைகள் பூட்டிய ரதங்கள்!

குதிரைகள் பூட்டிய ரதங்கள்!

ஜூஹு பீச் மற்றும் சௌபாத்தி கடற்கரை பகுதிகளில் இதுபோன்ற குதிரைகள் பூட்டிய ரதங்கள் சுற்றுலாப் பயணிகளுக்காக காத்துக்கொண்டிருக்கின்றன.

படம் : garbyal

வீதியோர சலூன் கடைகள்

வீதியோர சலூன் கடைகள்

மும்பையின் சில பகுதிகளில் வீதியோர சலூன் கடைகள் அமைந்துள்ளன.

படம் : Jon Hurd

மலிவான விலையில், தரமான காலணிகள்!

மலிவான விலையில், தரமான காலணிகள்!

மும்பையின் லிங்கிங் ரோடு பகுதியில் மலிவான விலையில், தரமான காலணிகளை வாங்கலாம். இங்கு கிடைக்கும் காலணிகள் உலகின் முன்னணி ப்ராண்டுகளுடன் போட்டி போடக்கூடியவை.

படம் : Andreas Lehner

பழைய டேக்ஸிகள்

பழைய டேக்ஸிகள்

மும்பையைத் தவிர இவைப்போன்ற பழைய மாடல் டேக்ஸிகளை உங்களால் வேறு எங்கும் பார்க்க முடியாது.

படம் : Jonathan

ஜூஹு பீச்

ஜூஹு பீச்

கடற்கரையை நேசிக்கும் ஒவ்வொருவரும் சென்று பார்க்க வேண்டிய இடம் மும்பையின் ஜூஹு பீச்சாகும். இந்தக் கடற்கரை பாந்த்ராவிலிருந்து 30 நிமிட பயண தூரத்தில் உள்ளது. இங்கு கிடைக்கும் பேல் பூரி, பானி பூரி, சாண்ட்விச் போன்ற அனைத்து கடற்கரை உணவுகளையும் நீங்கள் போதும் போதும் என்ற அளவுக்கு சுவைத்து மகிழலாம்.

படம் : Manish Prabhune

குரங்காட்டி

குரங்காட்டி

அல்ட்ரா மாடர்ன் நகரமான மும்பையில் கூட இன்னும் குரங்காட்டிகள் எல்லாம் இருக்கிறார்களே என்று ஆச்சரியப்படுகிறீர்களா?!!

படம் : NEENAD ARUL

தோபி காட்

தோபி காட்

மும்பையில் உள்ள இந்த தோபி காட் பகுதியில் கூட்டம் கூட்டமாக சலவைத்தொழிலாளிகள் துணிகளை சலவை செய்வது வழக்கம்.

படம் : Dennis Jarvis

நரிமன் பாயின்ட்

நரிமன் பாயின்ட்

மும்பையின் காஸ்ட்லி பகுதிகளில் ஒன்றான நரிமன் பாயின்ட்.

படம் : Humayunn Niaz Ahmed Pee

நெடுஞ்சாலை

நெடுஞ்சாலை

மும்பையிலிருந்து, புனே செல்லும் நெடுஞ்சாலை.

படம் : Danial Chitnis

தாஜ் ஹோட்டலும், கேட் வே ஆஃப் இந்தியாவும்!

தாஜ் ஹோட்டலும், கேட் வே ஆஃப் இந்தியாவும்!

தாஜ் ஹோட்டலும், கேட் வே ஆஃப் இந்தியாவும் ஒரே ஃபிரேமில் தெரியும் காட்சி.

படம் : Andy Hay

நடைபயணம்

நடைபயணம்

மரீன் டிரைவ் பகுதியில் தடுப்புச் சுவர் மீது நடந்து செல்லும் இளைஞர்.

படம் : Sarah Jamerson

இரவு போக்குவரத்து

இரவு போக்குவரத்து

மும்பை கார்ப்பரேஷன் கட்டிடம் முன்பாக மாநகராட்சி பேருந்து, டேக்ஸிகள் உள்ளிட்ட வாகனங்கள் செல்லும் காட்சி.

படம் : Advait Supnekar

நேப்பியன் சீ ரோடு

நேப்பியன் சீ ரோடு

மும்பையின் வோர்லி பகுதிக்கு செல்லும் நேப்பியன் சீ ரோடு.

படம் : sajpics

மாடி பஸ்

மாடி பஸ்

மாடி பஸ்ஸில் பயணம் செய்யும் பயணிகள்.

படம் : Joe

மும்பை மரீன் டிரைவ்

மும்பை மரீன் டிரைவ்

'அந்த அரபிக்கடலோரம் ஒரு அழகை கண்டேனே...' என்று அரபிக்கடலின் ஓரத்தில் அமைந்திருக்கும் மும்பையின் மரீன் டிரைவ் அட்டகாச அழகுடன் காட்சியளித்துக்கொண்டிருக்கிறது. 'C' வடிவில் காணப்படும் இந்த மரீன் டிரைவ் 3 கி.மீ நீளத்தில் நரிமன் பாயிண்ட் பகுதியையும், பாபுல்நாத் பகுதியையும் இணைக்கிறது.

லோக்கல் ரயில்

லோக்கல் ரயில்

மும்பை லோக்கல் மின்சார ரயிலில் பயணம் செய்யும் மும்பைவாசிகள் மற்றும் பயணிகள்.

படம் : Prasad Kholkute

உத்சவ் சர்க்கிள்

உத்சவ் சர்க்கிள்

நவி மும்பையின் கார்கர் பகுதியில் உள்ள உத்சவ் சர்க்கிள்.

படம் : SandeepRathod

கேட் வே ஆஃப் இந்தியா

கேட் வே ஆஃப் இந்தியா

1911-ஆம் ஆண்டு மும்பை வந்த ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் மற்றும் ராணி மேரி இருவரையும் வரவேற்கும் பொருட்டு கேட் வே ஆஃப் இந்தியா எழுப்பப்பட்டுள்ளது. மும்பை வரும் பயணிகள் கேட் வே ஆஃப் இந்தியா வந்து புகைப்படம் எடுத்துக்கொண்டால்தான் அவர்களின் பயணம் முற்றுப் பெற்றதாக அர்த்தம்.

படம் : Coolaks21

சத்ரபதி சிவாஜி டெர்மினஸ், மும்பை

சத்ரபதி சிவாஜி டெர்மினஸ், மும்பை

அண்மையில் சத்ரபதி சிவாஜி டெர்மினஸ் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட மும்பையின் மத்திய ரயில் நிலையம், முன்னர் விக்டோரியா டெர்மினஸ் (வி.டி ரயில் நிலையம்) என்ற பெயரில்தான் அழைக்கப்பட்டு வந்தது. இதற்கு அருகிலேயே பிரபலமான தாஜ் ஹோட்டல் அமைந்திருகிறது.

படம் : Aaditya Ganapathy

பேண்ட்ஸ்டாண்ட்

பேண்ட்ஸ்டாண்ட்

பேண்ட்ஸ்டாண்ட் பகுதி காதலர்களின் மையமாக அறியப்படுகிறது. எனவே இந்த இடத்துக்கு நீங்கள் வரும் சமயம் எண்ணற்ற காதல் ஜோடிகள் இங்குமங்கும் உலாவிக் கொண்டிருப்பதை பார்க்கலாம். மேலும் இங்கிருந்து நடந்து செல்லும் தூரத்தில்தான் ஷாருக் கானின் 'மன்னத்' இல்லமும், சல்மான் கான் வசித்து வரும் கேலக்ஸி டவர் அடுக்குமாடி குடியிருப்பும் இருக்கிறது.

படம் : Ajay Panachickal

ஃபீனிக்ஸ் மார்க்கெட் சிட்டி

ஃபீனிக்ஸ் மார்க்கெட் சிட்டி

மும்பையின் துணை நகரமாக அறியப்படும் குர்லா நகரில் அமைந்துள்ள ஃபீனிக்ஸ் மார்க்கெட் சிட்டிதான் இந்தியாவின் மிகப்பெரிய ஷாப்பிங் மாலாக கருதப்படுகிறது. இது 4,050,000 சதுர அடியில் ஆசியாவின் மிகப்பெரிய ஷாப்பிங்க மால்களில் ஒன்றாகவும் திகழ்கிறது.

ஓஷிவாரா அந்தேரி மசூதி

ஓஷிவாரா அந்தேரி மசூதி

மும்பையின் ஓஷிவாரா அந்தேரி பகுதியில் அமைந்துள்ள மசூதி.

படம் : Tawheed Manzoor

கவாஸ்ஜீ ஜெஹாங்கீர் ஹால்

கவாஸ்ஜீ ஜெஹாங்கீர் ஹால்

கொலாபா பகுதியில் அமைந்திருக்கும் கவாஸ்ஜீ ஜெஹாங்கீர் ஹால்.

படம் : Swaminathan

D.Y.பட்டேல் ஸ்டேடியம்

D.Y.பட்டேல் ஸ்டேடியம்

நவி மும்பையின் நெருள் பகுதியில் அமைந்திருக்கும் D.Y. பட்டேல் கிரிக்கெட் ஸ்டேடியம் 60,000 பேர் அமர்ந்து பார்க்கும் வசதிகொண்டது. இங்கு 9 டென்னிஸ் கோட்டுகளும், 4 உள்ளரங்கு பேட்மிட்டன் கோட்டுகளும், ஒரு ஒலிம்பிக் அளவு நீச்சல் குளமும் இருக்கின்றன.

படம் : Redtigerxyz

நவோட்டல் ஹோட்டலிலிருந்து...

நவோட்டல் ஹோட்டலிலிருந்து...

நவோட்டல் என்ற நட்சத்திர ஹோட்டலிலிருந்து ஜூஹு பீச்சின் தோற்றம்.

படம் : Sarah Jamerson

சூரிய அஸ்த்தமனம்

சூரிய அஸ்த்தமனம்

ஜூஹு பீச்சில் சூரிய அஸ்த்தமனத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படம்.

படம் : Ritesh Niranjan

சித்தி விநாயக் மந்திர், மும்பை

சித்தி விநாயக் மந்திர், மும்பை

மும்பையின் புகழ்பெற்ற கோயில்களில் ஒன்றான சித்தி விநாயக் மந்திர் 1801-ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இந்தக் கோயில் முன்பு சிறிய செங்கல் கட்டிடமாக காட்சியளித்துக்கொண்டிருந்தாலும், இன்று மும்பையின் செல்வச் செழிப்பான கோயிலாக திகழ்ந்து வருகிறது.

படம் : Darwininan

பாந்த்ரா-வோர்லி சீ லிங்க்

பாந்த்ரா-வோர்லி சீ லிங்க்

இந்தியாவின் மிக நீண்ட பாலமான பாந்த்ரா-வோர்லி சீ லிங்க் ரூபாய் 1600 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. ராஜீவ் காந்தி சீ லிங்க் என்றும் அழைக்கப்படும் இந்தப் பாலம் பாந்த்ரா மற்றும் வோர்லி பகுதிகளுக்கு இடையே கடல் நீருக்கு மேலே 5600 மீட்டர் நீளத்தில் கட்டப்பட்டுள்ளது.

எஸ்ஸல் வேர்ல்ட், மும்பை

எஸ்ஸல் வேர்ல்ட், மும்பை

இந்தியாவின் முதல் கேளிக்கைப் பூங்காவாக எஸ்ஸல் வேர்ல்ட் கேளிக்கைப் பூங்கா அறியப்படுகிறது. இந்தப் பூங்கா அடிப்படையில் கலிஃபோர்னியாயில் உள்ள டிஸ்னி லேண்டை பார்த்து, அதன் மாதிரி வடிவமாகவே வடிவமைக்கப்பட்டுள்ளது.

படம் : Sajeevkumarc

கொலாபா காஸ்வே

கொலாபா காஸ்வே

இந்தியாவில் ஃபேஷன் தொடங்கிய இடம் மும்பை என்றால், மும்பையில் ஸ்ட்ரீட் ஷாப்பிங் முறை அறிமுகமானது கொலாபா காஸ்வேயில் தான். இங்கு தெருவோரக் கடைகள் மட்டுமல்ல, பிரபல பிராண்டுகளின் ஷோ ரூம்களும் இருக்கின்றன. இந்தப் பகுதி கேட்வே ஆஃப் இந்தியா, விக்டோரியா டெர்மினஸ், ரீகல் சினிமா மற்றும் லியோபோல்ட் கஃபே போன்ற மும்பையின் முக்கிய அடையாளங்களுக்கு வெகு அருகாமையில் அமைந்திருக்கிறது.

ஹாஜி அலி மசூதி

ஹாஜி அலி மசூதி

மும்பையின் புகழ்பெற்ற வோர்லி பகுதியில் கடலை பார்த்துக் கொண்டு எழில் உருவமாய் நின்று கொண்டிருக்கிறது ஹாஜி அலி மசூதி. இங்கு சாதி மத வேறுபாடின்றி அனைத்துத் தரப்பு மக்களும் கூட்டமாக கூட்டமாக வந்து செல்கின்றனர். இது போன்ற உன்னதமான ஒரு அனுபவம் அவர்களுக்கு வாழ்க்கையில் எப்போதாவதுதான் கிடைக்கும்.

ஃபேஷன் ஸ்ட்ரீட்

ஃபேஷன் ஸ்ட்ரீட்

ஃபேஷன் ஸ்ட்ரீட்டில் நீங்கள் எதிர்பார்க்காத அளவுக்கு நீண்ட வரிசையில் வியாபாரிகள் நின்று கொண்டு மலிவு விலைகளில் உலகத் தரமான ஆடை அணிகலன்களையும், காலணி போன்ற பொருட்களையும் விற்றுக் கொண்டிருப்பார்கள். ஆனாலும் நீங்கள் பேரம் பேசும் வித்தையை அறிந்து வைத்திருப்பது நல்லது. இந்த வணிக வீதிக்கு அருகில் கிராய்ஸன்ட்ஸ் மற்றும் நாட் ஜஸ்ட் ஜாஸ் போன்ற மும்பையின் சிறந்த உணவகங்களும் உள்ளன.

படம் : Vishalngp

தொங்குதோட்டம்

தொங்குதோட்டம்

மும்பை மாநகரில் உள்ள பூங்காக்களில் மிகவும் பழமையானதும், பாதுகாக்கப்பட்டும் வருவது தொங்குதோட்டமாகும். இந்தத் தோட்டத்தின் கவர்ந்திழுக்கும் அம்சமான ராட்சஸ மூதாட்டியின் காலணியை படம்பிடிக்க வேண்டுமென்று ஒவ்வொரு புகைப்பட ஆர்வலரும் விரும்புவார்கள். தொங்குதோட்டம் கெம்ப்ஸ் கார்னர் மற்றும் போர்ஷே ஷோரூமுக்கு வெகு அருகில் இருக்கிறது.

படம் : Nichalp

More News

Read more about: மும்பை
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+