Search
  • Follow NativePlanet
Share
» »உலகையே வியக்கவைக்க பாலிவுட் செய்யும் செயல்களைப் பாருங்கள்

உலகையே வியக்கவைக்க பாலிவுட் செய்யும் செயல்களைப் பாருங்கள்

உலகையே வியக்கவைக்கும் பாலிவுட்காரர்களின் செயல்களைப் பாருங்கள்

மாயநகரம் என்று அவ்வப்போது அழைக்கப்படும் அழகிய மும்பை நகரம் பாலிவுட் சினிமாவின் மாபெரும் தொழில் நகரம். சினிமாப் படப்பிடிப்பு தளங்களில் நாட்டிலேயே மிகப் பெரியது. உலகின் முக்கிய படப்பிடிப்புத் தளங்களில் ஒன்று மும்பையின் இதயத்தில் ஒய்யாரமாய் அமர்ந்திருக்கிறது. இந்த நகரம் எண்ணற்ற கனவுகளுடன் சிறகை விரிக்க வருபவர்களின் நடிகர்கள், இயக்குநர்கள் ஆகும் ஆசைகளை மெருகேற்றி வானில் பறக்க உதவுகிறது. சினிமா கற்றுக் கொள்ளவும், முன்னேறவும் அழகிய மழை மாலையில் பசேலென்ற பாசிகளுடன் கூடிய ஏணிப் படிக்கட்டுகளுடன் காட்சியளிக்கும் கனவுத் தொழிற்சாலை மும்பை நகரம். கவனத்துடன் மேலேறுபவர்களுக்கு பாதிப்பில்லை. கைக்கொடுத்து தூக்கி நிறுத்தவும் ஆள்களுண்டு. இந்தியத் திரைப்படங்களை உலகின் பல்வேறு மூலைக்கும் அனுப்பியதிலும், உலகின் பல மொழி படங்களிலும் இடம் பெற்றுள்ள இந்த இடத்தைப் பற்றியும், அதன் அனுபவத்தைப் பற்றியும், பாலிவுட் சினிமாக் காரர்கள் என்னவெல்லாம் செய்கிறார்கள் என்பதை பற்றியும் காண்போம் வாருங்கள்.

ஆர்வம்

ஆர்வம்

உங்களுக்கு சினிமா எனும் கலையைப் பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் இருக்கிறதா? பாலிவுட்டின் பலே பாடல்களுக்கும் குத்தாட்டம் போட்ட நீங்கள் அதை எடுக்கும் விதம் பற்றியும், உருவான இடங்கள் பற்றியும் தெரிந்துகொள்ள ஆர்வமாக இருந்தால் மேற்கொண்டு படியுங்கள். ஆம்.. நாம் மும்பையின் பாலிவுட் உலகை சுற்றிப் பறக்கப்போகிறோம்.

பாலிவுட் உலகுக்குள் வந்த பின் உங்கள் மனதை பூட்டி சாவியைத் தொலைத்து விடுங்கள். உங்கள் அடையாளத்தை மறந்து சிறிது நேரம் களித்திருப்போம்.

A.Savin

 கதவுகள்

கதவுகள்

மின்மினிப் பூச்சிகளின் வண்ண சிறு ஒளிகளால் அலங்கரிக்கப்பட்டதைப் போன்ற அழகிய கதவுகள் உங்கள் வருகைக்காக திறக்கப்பட்டிருக்கின்றன. மனம் மகிழ்ந்து வாருங்கள் மும்பையின் பிலிம் சிட்டி ஸ்டுடியோவுக்கு உங்களை கரம்பிடித்து அழைத்துச் செல்கிறோம்.

மும்பையின் பிலிம் சிட்டி ஸ்டுடியோ மாநில சுற்றுலாத் துறையுடன் ஒப்பந்தம் இட்டு, பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது.

நாலு சுவர்களுக்குள் காட்டிய அந்த மாயை உலகை கட்டி ஆண்ட ரசிகர்கள் தங்கள் கதாநாயகன், கதாநாயகியரை தாங்கள் முதன் முதலாக திரையில் கண்ட இடங்களை நேரில் கண்டு களித்திருக்கிறார்கள். களித்துக் கொண்டிருக்கிறார்கள்.

 பிலிம் சிட்டி ஸ்டுடியோ

பிலிம் சிட்டி ஸ்டுடியோ

இந்தியாவின் மிகப் பெரிய படப்பிடிப்பு நிறுவனமான பிலிம் சிட்டி ஸ்டுடியோ வார இறுதி நாட்களில் இதற்கென சிறப்பு பேருந்து வசதிகளையும் செய்து தருகிறது. நீங்கள் இந்த பிலிம் சிட்டியை சுற்றிப் பார்க்க ஆசைப் பட்டால் அதற்கேற்ப கட்டணத்தை செலுத்தி பேருந்தில் சுற்றி வரலாம்.

உள் அரங்கம், வெளிப்புற படப்பிடிப்பு தளங்கள் அனைத்தையும் ஒரு நாள் முழுக்க சுற்றிப் பார்த்து மகிழலாம். ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஹேப்பி நியூ இயர் ல இருந்து இன்னும் எக்கச்சக்க பாலிவுட் கதாநாயகர்களும், கதாநாயகிகளும் காதலித்த, நடனமாடிய, நடந்து சென்ற, சண்டைப் போட்ட நாம் திரையில் ரசித்த காட்சிகளை காதலியின் பழைய நினைவுகளாய் மனதில் பொறுத்தி பார்க்கலாம்.

கையில் இருக்கும் மொபைல் கேமராவில் அந்த அற்புத தருணங்களை எண்ணங்களோடு சேர்த்து உங்கள் சொந்தங்களையும் நட்புக்களையும் இணைத்தே காட்டலாம்.

ASaber91

சுற்றுலா

சுற்றுலா

சுற்றுலா ஏற்பாடு செய்யும் தனியார் நிறுவனங்களும் இதற்கென பல முன்னேற்பாடுகளை வழங்குகின்றன. இணையத்திலிருந்தே நீங்கள் உங்கள் வருகைக்கான அனுமதியை பெறமுடியும்.

திரைப்பட படப் பிடிப்பு தளங்கள் மட்டுமல்லாமல், படத் தொகுப்பு செய்யும் முறைகள், டப்பிங் செய்யும் இடங்கள், பாடல் ஒளிப்பதிவு பகுதி என எண்ணற்ற சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது இந்த இடம்.

Mintu500px

ராயல் ஓபரா ஹவுஸ்

ராயல் ஓபரா ஹவுஸ்

அடடே... பேரே பிரம்மாண்டமா இருக்கே என்று உங்களுக்கு தோன்றலாம்.. உள்ளே இன்னும் பிரம்மாண்டம். இங்கு இருக்கும் தனியார் திரை அரங்குகளும், அங்கு திரையிடப்படும் படங்களும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெறுபவை. கிட்டத்தட்ட எடுக்கப்பட்ட படத்தின் உண்மையான அனுபவத்தை இந்த திரையரங்கில் கண்டுகளிப்பதாக மக்களே கூறுகின்றனர்.

பாலிவுட் சினிமாக்களில் உங்களுக்கு பெரும் விருப்பம் இல்லாவிட்டால் வேறு வழியில்லை ஒரு நல்ல வழிகாட்டியைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அவரின் துணையுடன் நீங்கள் மும்பையில் பெரும்பான்மை இடங்களில் களிக்கலாம்.

கேட் வே ஆப் இந்தியா, தாஜ் ஹோட்டல்,மரைன் டிரைவ், பந்த்ரா, தாராவி உள்ளிட்ட இடங்கள் பாலிவுட் படங்களில் மட்டுமல்லாமல், தமிழ் படங்களிலும் நிறைய இடங்களில் வந்துள்ளன.

மகாலட்சுமி டோபி, ஜிகு கடற்கரை, கிர்கவும் சௌபட்டி, அக்ஷா என அழகிய கடற்கரைகளும் பல தமிழ் படங்களில் வந்துள்ளன.

More News

Read more about: mumbai
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+