Search
  • Follow NativePlanet
Share
» »அதிகமான இந்தியர்கள் பயணிக்கும் டாப் 10 வெளிநாடுகள் இவைகள் தான்

அதிகமான இந்தியர்கள் பயணிக்கும் டாப் 10 வெளிநாடுகள் இவைகள் தான்

சுற்றுலா, தொழில், கல்வி, மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட பல காரணங்களுக்காக ஒவ்வொரு ஆண்டும் அதிகமான இந்தியர்கள் பல்வேறு வெளிநாடுகளுக்கும் பயணம் செய்து வருகிறார்கள். இவற்றில் மிகவும் புகழ்பெற்ற, இந்தியர்களின் மனம் கவர்ந்த டாப் 10 வெளிநாடுகள் பற்றியும், அங்கு இந்தியர்கள் அதிகம் செல்வதற்கு என்பதற்கான காரணத்தையும் வாங்க தெரிந்து கொள்வோம்.

Foreign countries that attracts most of the Indians

தாய்லாந்து :

இந்தியர்களின் மனதை அதிகம் கவர்ந்த நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது தாய்லாந்து. அதிகமான இந்தியர்கள் ஒவ்வொரு ஆண்டும் தாய்லாந்துக்கு சுற்றுலா செல்லுவதை அதிக விரும்புகிறார்கள். இங்கு உள்ள அழகான இடங்கள், கலாச்சாரங்கள், அமைதியான சூழல் அனைத்தும் இந்தியர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.

பாலி :

இந்தியர்களை அதிகம் கவர்ந்த நாடுகளின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருப்பது பாலி. இந்தோனேசியாவில் அமைந்துள்ள ஒரு தீவு இது. இங்குள்ள வித்தியாசமான கட்டிடங்கள், மிகப் பழமையான கோவில்கள், அழகிய சுற்றுலா தலங்கள், இயற்கை காட்சிகள் அனைத்தும் இந்தியர்களே பெரிதும் கவர்ந்து வருகிறது.

Foreign countries that attracts most of the Indians

சிங்கப்பூர் :

வேலை, சுற்றுலா ஆகிய காரணங்களுக்காக அதிகமான இந்தியர்கள் செல்லும் நாடாக இருப்பது சிங்கப்பூர். இங்கு கட்டுப்பாடுகள் மட்டுமின்றி இந்தியர்களுக்கான வேலை வாய்ப்புகளும் அதிகம். அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற வகையில் பணி வாய்ப்புகள் கொட்டி கிடப்பதால் அதிகமான இந்தியர்கள் சிங்கப்பூருக்கு வேலைக்கு செல்ல அதிகம் விரும்புகிறார்கள்.

மலேசியா :

சுற்றுலா என்றாலே பெரும்பாலான இந்தியர்கள் தேர்வு செய்யும் நாடு மலேசியா தான். முக்கியமான தொழில் நகரமான மலேசியாவில் எஸ்டேட்கள் அதிகம் என்பதால் காலம் காலமாக இந்தியர்கள் தொழில் மற்றும் வேலை வாய்ப்புகள் தேடி மலேசியாவிற்கு சென்று வருகிறார்கள். சிங்கப்பூருக்கு மிக அருகில் இருப்பதால் சிங்கப்பூர் செல்பவர்களில் பெரும்பாலானவர்கள் மலேசியாவிற்கும் சென்று விட்டு தான் திரும்புகிறார்கள்.

லண்டன் :

இந்தியர்கள் கல்வி, வேலை, சுற்றுலா பல காரணங்களுக்காக அதிகம் பயணிக்கும் நாடாக இருப்பது லண்டன். ஐக்கிய நாடுகளில் ஒன்றாக இருக்கும் லண்டன் பலருக்கும் விருப்பமான ஒரு நகரம். இங்குள்ள குளிரான தட்பவெப்ப நிலை தேனிலவு செல்லும் ஜோடிகளின் பெஸ்ட் தேர்வாக உள்ளது.

மாலத்தீவு :

இந்தியர்கள் தனியாக செல்வதாக இருந்தாலும் சரி, நண்பர்களுடன் சுற்றுலா செல்வதாக இருந்தாலும் சரி முதலில் தேர்வு செய்யும் நாடாக இருப்பது மாலத்தீவு தான். கடற்கரை பிரியர்களின் ஃபேவரைட் நாடு. அதிலும் இந்திய பிரபலங்கள் குடும்பத்துடன் ஓய்வெடுக்க செல்வதற்கு தேர்வு செய்யும் முதல் நாடு மாலத்தீவு தான்.

ஐக்கிய அரபு எமிரெட்ஸ் :

இந்தியர்களுக்கு அதிகமான வேலை வாய்ப்புகளை வழங்கும் நாடாக இருப்பது ஐக்கிய அரபு எமிரெட்ஸ் தான். குறிப்பாக தென்னிந்தியாவை சேர்ந்த அதிகமானவர்கள் வேலை தேடி பயணிக்கும் நாடாக இருப்பது ஐக்கிய அரபு எமிரெட்ஸ். இங்கு பெண்களுக்கு பாதுகாப்பு அதிகம் என்பதால் குடும்பத்துடன் பலரும் சென்று குடியேறவும் விரும்புவதுண்டு.

வியட்நாம் :

இந்தியர்களுக்கு விருப்பமான மற்றொரு நாடு வியட்நாம். பக்தி சுற்றுலா, பேச்சுலர்கள் தனியாக சென்று சுற்றிப் பார்த்துவிட்டு வருவதற்கு என்று சரியான தேர்வாக இருக்கும் நாடு வியட்நாம். இந்தியாவின் நட்பு நாடுகளில் ஒன்று என்பதால் இங்கு தொழில் வாய்ப்புகள் அதிகம்.

கம்போடியா :

உலகின் மிகப்பெரிய ஆலயங்கள், பழமையான கட்டிடங்கள், பழமையான கோவில்கள் அமைந்துள்ள நாடாக இருப்பது கம்போடியா. இது மன அமைதி தேடும் இந்தியர்களுக்கு ஏற்ற சுற்றுலாத் தலமாகவும் இருந்து வருகிறது. தொல்லியல் ஆய்விற்கான இங்கு செல்பவர்கள் அதிகம்.

அமெரிக்கா :

இந்தியர்களுக்கு வேலை வாய்ப்பை அதிகம் வழங்கும் நாடுகளில் மற்றொரு முக்கியமான நாடு அமெரிக்கா. அதிகமான இந்தியர்கள் ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவிற்கு பயணம் செய்து வருகிறார்கள். மாணவர்கள் கல்விக்காக, குறிப்பாக உயர் கல்விக்காக செல்லும் நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று.

More News

    Read more about: thailand indonesia
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+