Search
  • Follow NativePlanet
Share
» »கண்டிகொட்டா - இந்தியாவின் 'கிராண்ட் கேன்யன்' !!

கண்டிகொட்டா - இந்தியாவின் 'கிராண்ட் கேன்யன்' !!

By Naveen

ஆந்திர பிரதேச மாநிலத்தில் இருக்கும் கண்டிகொட்டா என்கிற இடம் பரவலாக அறியப்படாத நல்லதொரு சுற்றுலாத்தலம் ஆகும். இது பார்ப்பதற்கு அமெரிக்காவில் அரிசோனா மாநிலத்தில் இருக்கும் 'கிராண்ட் கேன்யன்' போல இருக்கிறது.

இங்கே தான் அந்தக்காலத்தில் தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட் ஜெய்ஷங்கர் போன்றவர்கள் நடித்த 'கவ் பாய்' திரைப்படங்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன. புதுமை விரும்பிகள் நிச்சயம் சென்று பார்க்க வேண்டிய கண்டிகொட்டாவை பற்றி தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

 கண்டிகொட்டா !!

கண்டிகொட்டா !!

ஆந்திர மாநிலத்தில் கடப்பா மாவட்டத்தில் பெண்ணார் நதிக்கரையில் அமைந்திருக்கும் சிறிய கிராமம் தான் இந்த கண்டிகொட்டா ஆகும்.

இது 1123ஆம் ஆண்டு கப்ப ராஜா என்கிற சாளுக்கிய குறுநில மன்னனால் உருவாக்கபட்ட நகரமாகும்.

Prashanth Pai

 கண்டிகொட்டா !!

கண்டிகொட்டா !!

இந்த நகரம் வரலாற்று காலம் நெடுக ககதியா, விஜயநகர பேரரசு மற்றும் குதுப் ஷஹி ஆகியோரது ஆட்சி காலங்களின் போது ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த இடமாக இருந்திருக்கிறது.

கண்டிகொட்டா கோட்டை கிட்டத்தட்ட 300 ஆண்டுகள் பெம்மசனி நாயக்கர்களின் கட்டுப்பாட்டில் இருந்திருக்கிறது.

Prashanth Pai

 கண்டிகொட்டா !!

கண்டிகொட்டா !!

கண்டிகொட்டாவின் தனித்துவங்களில் ஒன்று இதன் புவியமைப்பு தான். இங்கே கண்டிகொட்டா மலை ஒரு பக்கமும் அதிலிருந்து 300அடி ஆழ பக்கத்தாக்கில் பெண்ணார் ஆறும் பாய்ந்தொடுவது பார்க்க அத்தனை அழகாக இருக்கும்.

Suhas Dutta

 கண்டிகொட்டா !!

கண்டிகொட்டா !!

கண்டிகொட்டாவில் இருக்கும் சிதலமடைந்த கோட்டையினுள் இரண்டு கோயில்கள் இருக்கின்றன. இந்த இரண்டு கோயில்களுமே கைவிடப்பட்டு அதனுள் இருக்கும் விலைமதிக்க முடியாத வரலாற்று பொக்கிஷங்கள் அழிந்து வருகின்றன.

Suhas Dutta

 கண்டிகொட்டா !!

கண்டிகொட்டா !!

இங்கிருக்கும் சிதலடமைந்த கோட்டையினுள் அந்தக் காலத்தில் பயன்படுத்தப்பட்ட பீரங்கிகள், தானிய சேகரிப்பு கூடம், 'ராயலசெரவு' என்னும் ஊற்று போன்றவை இருக்கின்றன.

Suhas Dutta

 கண்டிகொட்டா !!

கண்டிகொட்டா !!

கடந்த நவம்பர் மாதம் ஆந்திர மாநிலத்தில் முதல்வர் சந்திரபாபு நாயுடு கண்டிகொட்டாவை ஆந்திராவின் முன்னணி சுற்றுலாத்தலமாக மாற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Suhas Dutta

More News

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+