Search
  • Follow NativePlanet
Share
» »இனி இந்தியாவிலேயே இக்லூ வீட்டில் எஸ்கிமோக்கள் போல தங்கிடலாம் – மீதி விவரங்கள் இங்கே!!

இனி இந்தியாவிலேயே இக்லூ வீட்டில் எஸ்கிமோக்கள் போல தங்கிடலாம் – மீதி விவரங்கள் இங்கே!!

எஸ்கிமோக்களின் அனுபவத்தை பெற வேண்டுமா? கவலை வேண்டாம் - இனி மணாலிக்கு செல்லுங்கள்!

இனி இந்தியாவில் இருந்தபடியே ஆர்க்டிக் பகுதியில் இருப்பது போன்ற ஒரு உணர்வை பெற்றிட முடியும். மணாலியில் பனி மூடிய மலைகளின் பின்னணியில் ஒரு இக்லூவிற்குள் இரவைக் கழித்து, உங்கள் குழந்தைப் பருவக் கனவை மெய்பித்திட உங்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது.

மணாலியில் இக்லூ ஸ்டே

மணாலியில் இக்லூ ஸ்டே

மலைகளில், புல்வெளிகளில், காடுகளில் என பல்வேறு இடங்களில் நாம் ஏற்கனவே முகாமிட்டு இருப்போம். ஆனால் பனியில் முகாமிடுவதை பற்றி நாம் கேள்வி பட்டு இருக்கிறோமே தவிர, நம் நாட்டில் வழக்கத்தில் அது இல்லை.

ஆம், நீங்கள் யோசிப்பது சரி தான், இந்த பதிவு அதைப்பற்றியது தான்.இந்தியாவில் இக்லூ தங்குமிடம் வந்துவிட்டது. கேம்ப்ஃபைர், பார்பிக்யூ, உணவு, சாகச நடவடிக்கைகள், பனிச்சறுக்கு மற்றும் ஸ்னோபோர்டிங் போன்றவற்றை அனுபவிக்கவும், பனிச்சறுக்கு மலைகளை ஆராயவும், உங்களுக்கான சொந்த இக்லூவை அனுபவத்தை பெறவும் இனி நீங்கள் மணாலிக்கு செல்ல திட்டமிடலாம்.

சேத்தன் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள இக்லூ ஹவுஸ்

சேத்தன் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள இக்லூ ஹவுஸ்

திகைப்பூட்டும் சேத்தன் பள்ளத்தாக்கின் பனி மூடிய மலைகளில் வசதியாக அமைந்திருக்கும் இந்த முகாம் கடல் மட்டத்திலிருந்து சுமார் 10,000 அடி உயரத்தில் அமைந்துள்ளது.

இந்த முழு மண்டலமும் வெள்ளைத் தாள்கள் போன்ற மலைகளாலும் சுற்றிலும் பனி சிகரங்களின் பிரமிக்க வைக்கும் காட்சிகளாலும் சூழப்பட்டுள்ளது. இங்கு சென்று இக்லூவில் தங்கி தனித்துவமான மற்றும் முற்றிலும் விசித்திரமான தங்கும் அனுபவத்தில் நீங்கள் ஈடுபடலாம்.

பல வசதிகள் அடங்கிய எஸ்கிமோ ஸ்டே

பல வசதிகள் அடங்கிய எஸ்கிமோ ஸ்டே

பொதுவான கழிவறைகள், படுக்கைகள், வசதியான போர்வைகள் மற்றும் சார்ஜிங் வசதிகள் போன்ற வசதிகளுடன் ஒரே நேரத்தில் ஒரு இக்லூவில் குறைந்தபட்சம் 2 நபர்களும் மற்றும் அதிகபட்சமாக 4 நபர்களும் தங்கலாம்.

உங்கள் முகாமிலிருந்த படியே பனி மூடிய மலைகளின் காட்சிகளுடன் மயக்கும் சூரிய உதயத்தைக் கண்டு மகிழ்ந்திடலாம். பனிச்சறுக்கு, ஸ்னோமேன் தயாரித்தல், டியூப் ஸ்லைடு மற்றும் ஸ்னோ சவாரி போன்ற பல வெளிப்புற செயல்பாடுகளை இந்த முகாம் வழங்குகிறது. உங்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் மாலையில் இசையுடன் கூடிய கேம்ப்ஃபைரில் ஓய்வெடுக்கவும் வசதி உள்ளது.

விருந்தினர்கள் தங்களுடைய வாகனங்களை முகாம் தளத்தில் ஒதுக்கப்பட்டுள்ள பார்க்கிங் இடத்தில் நிறுத்தலாம். செக்-இன் செய்த உடனேயே ஜம்ப்சூட் மற்றும் ஸ்னோஷூக்கள் வழங்கப்படும். கூடவே, குளிப்பதற்கு வெந்நீர் கிடைக்கிறது.

மணாலியின் ஜில்லென்ற காலநிலை

மணாலியின் ஜில்லென்ற காலநிலை

தற்போது, மணாலியில் இரவு 8:30 மணியளவில் வெப்பநிலை -4 டிகிரியை எட்டுகிறது, மேலும் இது நள்ளிரவுக்குப் பிறகு -10 டிகிரியாக குறையும். இதனால், சுற்றுலாப் பயணிகளை சூடாக வைத்திருக்க, தூங்கும் பைகளை வழங்குகிறார்கள். இந்த பைகள் -30 டிகிரிக்கு குறைவான வெப்பநிலையில் கூட பயனுள்ளதாக இருக்கும்.

எப்படி இங்கே சென்றடைவது

எப்படி இங்கே சென்றடைவது

சேத்தன் பள்ளத்தாக்கு, மணாலி மால் சாலையில் இருந்து 13.4 கிமீ தொலைவில் அமைந்துள்ளது மற்றும் பொது அல்லது தனியார் போக்குவரத்து முறைகளைப் பயன்படுத்தி எளிதாக அணுகலாம். மணாலிக்கு அருகிலுள்ள விமான நிலையம் இமாச்சலப் பிரதேசத்தின் பூந்தர் விமான நிலையம் ஆகும், இது முகாமிலிருந்து 65 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. விமான நிலையத்திலிருந்து ஒரு டாக்ஸி அல்லது பகிரப்பட்ட வாகனம் ஒன்றை வாடகைக்கு அமர்த்திக் கொள்ளலாம்.

மணாலி பேருந்து நிலையம் முகாமில் இருந்து 25 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. மேலும் 312 கி.மீ தொலைவில் சண்டிகர் ரயில் நிலையம் அமைந்துள்ளது. பேருந்து மற்றும் ரயில் நிலையங்களிலிருந்து ஒரு டாக்ஸி அல்லது பகிரப்பட்ட வாகனம் ஒன்றை வாடகைக்கு அமர்த்திக் கொண்டு முகாமிற்கு செல்லலாம்.

More News

    Read more about: igloo houses in india manali
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+