Search
  • Follow NativePlanet
Share
» » இந்தியாவிலிருந்து இந்த வெளிநாடுகளுக்கு எல்லாம் சாலை வழியாகவே நீங்கள் பைக் ட்ரிப் செல்லலாம் தெரியுமா?

இந்தியாவிலிருந்து இந்த வெளிநாடுகளுக்கு எல்லாம் சாலை வழியாகவே நீங்கள் பைக் ட்ரிப் செல்லலாம் தெரியுமா?

சாகச விரும்பிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. ட்ரெக்கிங், பாராகிளைடிங், ஸ்கூபாடைவிங், ஸ்னோர்கெலிங், ஸ்கைடைவிங், ரிவர் ராஃப்டிங், பஞ்சி ஜம்பிங், சர்ஃபிங், கயாக்கிங் என ஏகப்பட்ட சாகச நடவடிக்கைகள் இருப்பது போல பைக்கிங் செய்வதும் மிகவும் ஸ்பெஷல் ஆன ஒரு நடவடிக்கையாகும். இந்திய இளைஞர்கள் பலரும் கேரளா to லடாக், தமிழ்நாடு to மும்பை, லக்னோ to மேகாலயா என பல சாலை பிரயாணங்கள் மேற்கொள்ளுகின்றனர்.

International road trips from India

அப்படி சாலை பிரயாணம் செய்வது உங்களுக்கு பிடிக்குமென்றால் இந்தியாவிலிருந்து சில வெளிநாடுகளுக்கு சாலை வழியாக பிரயாணம் செய்து பார்க்கலாமே! இந்தப் பயணத்திற்கு இந்திய ட்ரைவிங் லைசென்ஸ் மட்டும் இருந்தால் போதுமாம்! எந்தெந்த நாடுகளுக்கு எல்லாம் நாம் சாலை வழியாக பயணிக்கலாம் என்று பார்க்கலாமா?

nepal1

நேபாளம்

சாகசஆர்வலர்களுக்கான மையமாகவும், உலகின் மிக உயரமான சிகரமான எவரெஸ்ட் சிகரத்தின் தாயகமாகவும் விளங்கும் நேபாளம் இதமான வானிலை, இயற்கை அழகு, புத்த மடாலயங்கள், பனி மூடிய சிகரங்களுக்கு பெயர் பெற்றது.

புது டெல்லியிலிருந்து 1,125 கிமீ தொலைவில் அமைந்துள்ள காத்மாண்டுவிற்கு உத்தரப் பிரதேசம், சுனௌலி எல்லை வழியாக நேபாளத்திற்குள் நுழையலாம். இந்த பயணத்திற்கு தோராயமாக 2 நாட்கள் ஆகிறது. இந்திய ஓட்டுநர் உரிமம் தவிர வேறு எந்த ஆவணமும் தேவையில்லை. நேபாளத்தைச் சுற்றிப் பார்க்க உங்களுக்கு விசா எதுவும் தேவையில்லை.

bangladesh

பங்களாதேஷ்

வளமான வரலாறு மற்றும் கலாச்சாரம் நிறைந்த பங்களாதேஷ் பல வரலாற்றுக் கோட்டைகள், கோவில்கள், மார்க்கெட்டுகள், அருங்காட்சியகங்கள் ஆறுகளுக்கும் பேமஸ். புது டெல்லியிலிருந்து 1,850 கிமீ தொலைவில் உள்ள பங்களாதேஷை அடைய கிட்டத்தட்ட 3 நாட்கள் ஆகும்.

பங்களாதேஷ் இந்திய சர்வதேச ஓட்டுநர் அனுமதியை அங்கீகரிக்கிறது. இருப்பினும், நீங்கள் நாட்டிற்குள் நுழைவதற்கு முன் உங்கள் வாகனத்திற்கு கார்னெட் தேவை. கார்னெட் என்பது கார்னெட் இந்திய ஆட்டோமொபைல் சங்கத்தால் வழங்கப்படும் ஒரு என்ட்ரி ஆகும். பங்களாதேஷின் தூதரகத்திலிருந்து விசாவை நீங்கள் பெற்றுக் கொள்ளலாம்.

myanmar1

மியான்மர்

பிரமிக்க வைக்கும் மலைத்தொடர்கள், இயற்கை பாதைகள், அழகிய கடற்கரைகள் மற்றும் செழிப்பான நகரங்களை கொண்டுள்ள மியான்மர் நீங்கள் சாலை வழியாக பயணம் செய்யக்கூடிய ஒரு அழகிய நாடாகும். புது டெல்லியிலிருந்து 2,959 கிமீ தொலைவில் அமைந்துள்ள மாண்டலேவை பை பயணத்தில் அடைய தோராயமாக 6 நாட்கள் எடுகஊம்.

உங்கள் வாகனத்துடன் மியான்மருக்குப் பயணிக்க ஒரு சிறப்பு தரைவழி அனுமதி, ஒரு தற்காலிக சுங்க இறக்குமதி அனுமதி மற்றும் MMT அனுமதி தேவைப்படும். மியான்மர் நாட்டுக்குள் செல்வதற்கு முன், மியான்மர் தூதரகத்திலிருந்து முத்திரையிடப்பட்ட விசா தேவை.

bhutan1

பூட்டான்

உலகின் மகிழ்ச்சியான நாடான பூட்டான், அமைதி தேடுபவர்களை மட்டுமல்ல, உலகெங்கிலும் உள்ள பயண ஆர்வலர்களையும் ஈர்க்கிறது. மகிழ்ச்சியான வாழ்க்கை முறையைத் தவிர, பூட்டான் வளமான மற்றும் மாறுபட்ட இயற்கை அழகையும் கொண்டுள்ளது.

புது டெல்லியிலிருந்து 1,546 கிமீ தொலைவில் அமைந்துள்ள திம்ப் பைக் பயணம் வழியாக அடைய 3 நாட்கள் ஆகும். நாட்டிற்குள் நுழைவதற்கு பயண அனுமதிச் சீட்டு மற்றும் வாகன அனுமதிச் சீட்டு தேவைப்படும். இந்தியர்களுக்கு அதிகாரப்பூர்வ விசா தேவை இல்லை என்றாலும், செல்லுபடியாகும் பாஸ்போர்ட் வைத்திருக்கும் இந்தியர்கள் தாராளமாக பூட்டானைச் சுற்றிப் பார்க்கலாம்.

thailand1

தாய்லாந்து

அழகிய கடற்கரைகள் முதல் அடர்ந்த காடுகள் வரை, பழங்கால மடங்கள் முதல் பவளப்பாறைகள் வரை, புத்த துறவிகள் முதல் மிதக்கும் சந்தைகள் வரை அனைவர்க்கும் பிடித்த சுற்றுலாத் தலமான தாய்லாந்திற்கு நீங்கள் பைக் பயணம் செய்யலாம்.

புது டெல்லியிலிருந்து 4,198 கிமீ தொலைவில் அமைந்துள்ள பாங்காக்கை அடைய கிட்டத்தட்ட 8 நாட்கள் ஆகும். இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் பயணித்து, மியான்மரைக் கடந்து தாய்லாந்திற்கு நீங்கள் செல்ல வேண்டும். இத்தனை நாடுகள் கடந்து செல்லுவதற்கு இந்திய ஓட்டுனர் உரிமம் போதாது. சர்வதேச ஓட்டுநர் உரிமம் தேவை. தாய்லாந்து இந்தியர்களுக்கு விசா ஆன் அரைவல் கொடுப்பதால் அங்கு சென்று விசா வாங்கிக் கொள்ளலாம்.

vietnam1

வியட்நாம்

கடற்கரைகள் மற்றும் பசுமையான நிலப்பரப்புகளுடன், கலாச்சாரம் மற்றும் இயற்கை அழகு நிறைந்த நாடான வியட்நாம் அனைவர்க்கும் ஒரு அமைதியான புத்துணர்ச்சி நிறைந்த சுற்றுலாவை வழங்குகிறது. புது டெல்லியிலிருந்து 5,162 கிமீ தூரத்தில் அமைந்துள்ள ஹனோயை அடைய 6 நாட்கள் ஆகிறது.

சர்வதேச ஓட்டுநர் அனுமதி மற்றும் கார்னெட் மூலம் இந்தியர்கள் தங்கள் சொந்த வாகனங்களை நாட்டிற்குள் ஓட்ட வியட்நாம் அனுமதிக்கிறது. நாட்டிற்குள் நுழைவதற்கு முன் இந்தியர்கள் இ-விசாவைப் பெற வேண்டும்.

turkey1

துருக்கி

வளமான வரலாறு, கலாச்சாரத்துடன் நவீன நாகரீகம் நிறைந்த பல நகரங்களை நீங்கள் துருக்கியில் காணலாம். ஷாப்பிங் மால்கள், கபேக்கள், பப்கள், பல அழகிய சுற்றுலாத் தலங்களை சுற்றிப் பார்ப்பதோடு பல சாகச விளையாட்டுகளில் ஈடுபடலாம்.

புது டெல்லியிலிருந்து 4,546 கிமீ தூரத்தில் அமைந்துள்ள இஸ்தான்புல்லை அடைய தோராயமாக 6 நாட்கள் ஆகும். புது டெல்லியிலிருந்து பயணம் சீனா, கிர்கிஸ்தான், உஸ்பெகிஸ்தான், கஜகஸ்தான், அஜர்பைஜான் மற்றும் ஜார்ஜியா ஆகிய நாடுகளின் வழியாக துருக்கிக்கு செல்ல வேண்டும். இந்திய சர்வதேச ஓட்டுநர் அனுமதி போதுமானதாக இருக்கும், ஆனால் துருக்கிய அதிகாரிகளிடமிருந்து கார்னெட்டுடன் கூடுதலாக ஒரு சிறப்பு அனுமதி தேவைப்படும்.

உங்களுக்கும் நண்பர்களுடன் இது போல நீண்ட பைக் ட்ரிப் போக வேண்டும் என்று ஆசையாக உள்ளதா?

More News

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+