Search
  • Follow NativePlanet
Share
» »IRCTC அறிமுகப்படுத்திய அட்டகாசமான லடாக் டூர் பேக்கேஜ்கள் – இன்றே திட்டமிடுங்கள்!

IRCTC அறிமுகப்படுத்திய அட்டகாசமான லடாக் டூர் பேக்கேஜ்கள் – இன்றே திட்டமிடுங்கள்!

காஷ்மீர் பிராந்தியத்தின் ஒரு பகுதியான லடாக் அனைத்து இளசுகள் மற்றும் இயற்கை ஆர்வலர்களின் பக்கெட் லிஸ்டில் ஒரு முக்கிய டெஸ்டினேஷன் ஆகும்.

வடக்கே காரகோரம் மலைத்தொடர், தெற்கில் இமயமலை என சுற்றிலும் பனி மூடிய சிகரங்களால் சூழப்பட்டிருக்கும் லடாக் ஒரு குளிர் பாலைவனம் என்பது நம்மில் பலர் அறிந்திடாத விஷயமாகும்.

பிரமிப்பூட்டும் நிலப்பரப்புகளின் பூமியான லடாக், பைக் ஓட்டுபவர்கள் மற்றும் சாலையில் பயணிப்பவர்களால் மட்டுமே செல்ல முடியும் என்று நீங்கள் நினைத்தால், அந்த எண்ணத்தை மாற்றிக் கொள்ள வேண்டும்.

ஏனென்றால் IRCTC செப்டம்பர் மாதத்திற்கான அட்டகாசமான லடாக் டூர் பேக்கேஜ்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அதனைப் பற்றிய விரிவான தகவல்களை இங்கேக் காண்போம்!

லே, ஷாம்வேலி, நுப்ரா, பாங்காங் மற்றும் துர்டுக் போன்ற அனைத்து முக்கிய இடங்களையும் உள்ளடக்கிய 6 இரவு 7 பகல் சுற்றுப்பயணம் இந்த தொகுப்புகளில் அடங்கும். பல பள்ளத்தாக்குகளின் நிலமான லடாக்கிற்கு பயணம் செய்து இயற்கையை அதன் மாசற்ற அழகில் திளைக்க, கீழ்வரும் டூர் பேக்கேஜ்களை உடனே உபயோகிப்படுத்திக் கொள்ளுங்கள்!

டிஸ்கவர் லே-லடாக் எக்ஸ் கொல்கத்தா

டிஸ்கவர் லே-லடாக் எக்ஸ் கொல்கத்தா

IRCTC இன் 6 இரவு 7 பகல் லடாக் டூர் பேக்கேஜ் சலுகையானது, கொல்கத்தாவில் இருந்து டெல்லிக்கும் பின்னர் லேவுக்கும் பயணிகளை விமானத்தில் அழைத்துச் செல்லும்.

ஷாம் பள்ளத்தாக்கு, லே, நுப்ரா, துர்டுக் மற்றும் பாங்காங் போன்ற இடங்களை இந்த சுற்றுலா உள்ளடக்கியது. செப்டம்பர் 11-17, செப்டம்பர் 17-23 மற்றும் செப்டம்பர் 23-29 ஆகிய தேதிகளில் பேக்கேஜ்கள் கிடைக்கும். ஒருவருக்கான கட்டணம் ரூ.47,600 ஆக நிர்ணயிக்கப்படுகிறது.

டிஸ்கவர் லடாக் வித் IRCTC- LTC

டிஸ்கவர் லடாக் வித் IRCTC- LTC

இந்த 6 இரவு 7 பகல் பயணம் டெல்லியில் இருந்து தொடங்குகிறது. புறப்படும் தேதிகள் செப்டம்பர் 3, 5, 10, 12, 17, 19, 24 மற்றும் 29.

ரூ.38,900 விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இந்த பேக்கேஜில் விமான கட்டணம், 3 நட்சத்திர ஹோட்டல்களில் தங்கும் வசதி, பயணத்திட்டத்தின்படி உணவு மற்றும் சுற்றிப்பார்த்தல் ஆகியவை அடங்கும்.

டர்டுக் எக்ஸ் ஹைதராபாத் உடன் லே

டர்டுக் எக்ஸ் ஹைதராபாத் உடன் லே

இந்த 6 இரவு 7 பகல் பயணத்தில் ஹைதராபாத் வாசிகள் லடாக் பகுதியின் மயக்கும் அழகைப் ரசிக்க முடியும்.

ரூ.38,470 இல் தொடங்கும் இந்த பேக்கேஜில், ஷாம் பள்ளத்தாக்கு, லே, நுப்ரா, துர்டுக் மற்றும் பாங்காங்போன்ற இடங்களைச் சுற்றி பார்க்கலாம். செப்டம்பர் 8 மற்றும் 23 ஆம் தேதிகளில் இந்த பேக்கேஜ் தொடங்குகிறது.

மேஜிகல் லடாக் எக்ஸ் கோரக்பூர்

மேஜிகல் லடாக் எக்ஸ் கோரக்பூர்

இது கோரக்பூர் ஸ்டேஷனிலிருந்து தொடங்கி புது டெல்லி வழியாக லே செல்லும் 9 இரவு 10 நாள் டூர் பேக்கேஜ் ஆகும்.

இந்த சுற்றுப்பயணத்தில் லக்னோவிற்கு பேருந்தில் இரவு பயணம், அதைத் தொடர்ந்து டெல்லிக்கு ரயில் பயணம் ஆகியவை அடங்கும். இந்த பேக்கேஜ் செப்டம்பர் 20 அன்று கோரக்பூரில் இருந்து தொடங்குகிறது. தொகுப்பின் விலை ரூ.43,900 ஆகும்.

மேஜிகல் லடாக் எக்ஸ் பரேலி

மேஜிகல் லடாக் எக்ஸ் பரேலி

இந்த 7 இரவு 8 பகல் சுற்றுப்பயணத்திற்கான பயணம் செப்டம்பர் 14 மற்றும் 21 ஆம் தேதிகளில் பரேலியில் இருந்து தொடங்குகிறது.

ரூ. 43,900 விலையில் தொடங்கும் இந்த பேக்கேஜில், பேருந்து மற்றும் இரயில் கட்டணம், தங்குமிடம், மூன்று வேளை உணவு மற்றும் பயணத்திட்டத்தின்படி பார்வையிடும் கட்டணம்ஆகியவை அடங்கும்.

இன்னும் என்ன தாமதம்! இந்த மலிவு விலை டூர் பேக்கேஜ்களை பயன்படுத்தி அழகான லடாக்கை சுற்றிப் பாருங்கள்! மேலும் விவரங்களுக்கு https://irctctourism.com/indian-domestic-holidays/leh-tour-packages என்ற இணையத்தளத்தைப் பார்வையிடவும்.

More News

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+