Search
  • Follow NativePlanet
Share
» »சென்னைக்கு பக்கத்தில 'பனிப்பொழிவு' பாக்கணுமா - லம்பாசிங்கிக்கு போலாம் வாங்க!

சென்னைக்கு பக்கத்தில 'பனிப்பொழிவு' பாக்கணுமா - லம்பாசிங்கிக்கு போலாம் வாங்க!

குலு, மணாலி, சிம்லா எல்லாமே வட இந்தியாவில் இருக்கிறதே, போறதுக்கு ரொம்ப செலவு ஆகுமே. தென்னிந்தியாவுல, நம்ம தமிழ்நாட்டுல இருந்து ஈஸியா அணுகக்கூடிய ஒரு இடத்தில் பனிப் பொழிவு ஏற்பட்டால் பார்த்து விட்டு வரலாமே என்று உங்களுக்கு தோன்றுகிறதா? கவலை வேண்டாம், ஏற்கனவே அப்படி ஒரு இடம் இருக்கிறது. தென்னிந்தியாவில் இந்த ஒரேயொரு இடத்தில் மட்டும் தான் பனிப்பொழிவை கண்டு ரசிக்கலாம், அதுவும் சென்னையிலிருந்து ஈஸியா அணுகக்கூடிய தூரத்தில்!

Snowfall

சென்னைக்கு அருகாமையில் இருக்கும் பனிப்பொழிவு இடம்

இந்த பனிக் காலம் வந்துவிட்டாலே, இன்ஸ்டாகிராம் துவங்கி வாட்ஸ்அப், பேஸ்புக் என எல்லா சமூக வலைத்தளங்களிலும் அனைவரும் பனிப் பொழியும் இடங்களுக்கு சென்று போட்டோ, வீடியோக்கள் போடுகின்றனர். எங்களுக்கும் ஆசை தாங்க, ஆனா அவ்வளவு காசு இல்லை என்று நீங்கள் நினைத்தால், நீங்கள் பட்ஜெட்டில் சுற்றிப் பார்க்க கூடிய ஒரு பனிப் பொழிவு இடத்தை பற்றி நாங்கள் கூறுகிறோம், அதுவும் சென்னையில் இருந்து ஈஸியா அணுகக்கூடிய ஒரு தென்னிந்திய சுற்றுலாத் தலம் மக்களே!

தென்னிந்தியாவில் உள்ளல ஒரே பனிப்பொழிவு இடம்

தென்னிந்தியாவிலும் வருடத்திற்கு ஒரு முறை நம்மால் பனிப்பொழிவை பார்க்க முடியும். ஆந்திராவில் அமைந்திருக்கும் கண்கவர் மலைவாசஸ்தலமான லம்பாசிங்கி குளிர்காலத்தில் அடிக்கடி பனிப்பொழிவைப் பெறும். அதுவும் சென்னையிலிருந்து 7 மணி நேர பயண தூரத்தில் ஆந்திராவில் அமைந்திருக்கும் அழகிய இடத்தில்! 2702 அடி உயரத்தில் அமைந்துள்ள கண்கவர் மலைவாசஸ்தலமான லம்பாசிங்கி குளிர்காலத்தில் அடிக்கடி பனிப்பொழிவைப் பெறுகிறது. அதிக தூரம் பயணம் செய்யாமல் பனிப்பொழிவை கண்டு ரசிக்க இது ஒரு சூப்பரான ஸ்பாட்!

அரக்கு பள்ளத்தாக்குக்குள் ஒளிந்திருக்கும் அதிசயம்

லம்பாசிங்கி, விசாகப்பட்டினத்தின் அரக்கு பள்ளத்தாக்கின் சிந்தப்பள்ளி பகுதியில் கடல் மட்டத்திலிருந்து 1025 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள ஒரு மூடுபனி மலைவாசஸ்தலம் ஆகும். இந்த இடம் கொர்ரா பயலு என்றும் அழைக்கப்படுகிறது, இதன் பொருள், "யாராவது திறந்த வெளியில் இருந்தால் அவர்கள் குச்சியைப் போல உறைந்து போவார்கள்!". ஒவ்வொரு ஆண்டும் வெப்பநிலை 0 டிகிரி செல்சியஸுக்குக் கீழே செல்கிறது. அப்படி வெப்பநிலை குறையும் போது காணக்கிடைக்காத அரிய காட்சிகளை எல்லாம் நீங்கள் கண்டு மகிழ்வீர்கள்.

ஆண்டு முழுவதும் குளிர்ந்த வானிலை

குளிர்காலம் மட்டுமின்றி ஆண்டு முழுவதும், இந்த சிறிய கிராமம் ஒரு மிதமான காலநிலையுடன் கூடிய அற்புதமான இயற்கை காட்சியுடன் காணப்படுகிறது. வெயில் காலத்தில் மற்ற இடங்களை விட இந்த கிராமம் கூடுதல் குளிர்ச்சியை அனுபவிக்கிறது. இதனால் ஆந்திர மாநில மக்கள் வெயில் காலத்திலும் குளிர்காலத்திலும் இந்த இடத்தை நோக்கி அதிகம் படை எடுக்கின்றனர்.

தென்னிந்தியாவின் காஷ்மீர் - லம்பாசிங்கி

வினோதமான பள்ளத்தாக்குகள் மற்றும் குளிர்ச்சியான வெப்பநிலையுடன், லம்பாசிங்கி தென் பிராந்தியத்தில் பனிப்பொழிவைக் காணும் ஒரே இடமாக உள்ளதால் இது தென்னிந்தியாவின் காஷ்மீர் என்றும் அழைக்கப்படுகிறது. ஆண்டு முழுவதும், இந்த சிறிய கிராமம் ஒரு ரம்மியமான வானிலையுடன் காணப்படுகிறது. ஆனால் குளிர்காலம் வந்தவுடன் லம்பாசிங்கியின் வெப்பநிலை பூஜ்ஜிய டிகிரி செல்சியஸாகக் குறைந்து பனிப்பொழிவை எதிர்கொள்ளுகிறது.

அனைவருக்கும் ஏற்ற அழகிய இடம்

பசுமையான பள்ளத்தாக்கு, குளிர்ச்சியான வெப்பநிலை, இயற்கை அழகு ஆகியவற்றால் நிரம்பிய லம்பாசிங்கி, சுற்றுச்சூழல் சுற்றுலாத் தலமாக நம்மை வரவேற்கிறது. அதோடு இயற்கை ஆர்வலர்களுக்கு ஏற்ற இடமாகவும் உள்ளது. இந்த மலைவாசஸ்தலம் குறைந்த மக்கள்தொகை கொண்டதாக இருந்தாலும், மிளகு மற்றும் காபி தோட்டங்களில் ஈடுபடும் தனிமைப்படுத்தப்பட்ட பழங்குடியின சமூகத்தின் தாயகமாக இது உள்ளது.

அங்கே என்னவெல்லாம் சுற்றிப் பார்க்கலாம்

வெறுமனே பனிப்பொழிவை மட்டுமல்ல லம்பாசிங்கியில் சுற்றிப் பார்ப்பதற்கும் ஏராளமான அழகிய இடங்கள் உள்ளன.

1. லம்பாசிங்கி வியூபாயின்ட்

2. தஜங்கி ரிசர்வாயர்

3. கொத்தப்பள்ளி நீர்வீழ்ச்சி

4. சூசன் கார்டன்

5. ஏரவரம் நீர்வீழ்ச்சி

6. அன்னாவரம்

7. அரக்கு பள்ளத்தாக்கு

8. விசாகப்பட்டினம்

லம்பாசிங்கிக்கு எப்படி செல்வது?

இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் விசாகப்பட்டினத்திற்கு ரயில் மற்றும் விமானப் போக்குவரத்து இயக்கப்படுகிறது. அதனால் நீங்கள் விசாகப்பட்டினத்தை முதலில் அடைய வேண்டும். விசாகப்பட்டினத்தில் இருந்து தனியார் டாக்சி அல்லது கேப் மூலமாக 110 கிமீ தூரத்தில் இருக்கும் லம்பாசிங்கியை எளிதில் அடையலாம். அதோடு விசாகப்பட்டினத்தில் இருந்து லம்பாசிங்கிக்கு அரசு பொது பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. நீங்கள் அப்படியும் செல்லலாம். ஆனால் எது எப்படியோ இந்த வருடம் இந்த குட்டி காஷ்மீரில் பனிப்பொழிவை பார்க்க ரெடி ஆகிடுங்க!

இந்த இடத்திற்கு ஆண்டு முழுவதும் செல்லலாம். அனைத்து காலத்திலும் குளுகுளு ஸ்பாட்டாகத்தான் இது இருக்கும். ஆனால் நீங்கள் பனிப்பொழிவை பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டால் நவம்பர் - ஜனவரி மாதங்களில் செல்ல வேண்டும். அதற்கு பின் பனிப்பொழிவு இருக்காது.

More News

    Read more about: andhra pradesh travel guide
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+