Search
  • Follow NativePlanet
Share
» »விண்கல் விழுந்ததால உருவான இம்மாம்பெரிய பள்ளம். பழைய சென்னையே மூழ்கிடும் போலிருக்கே!

விண்கல் விழுந்ததால உருவான இம்மாம்பெரிய பள்ளம். பழைய சென்னையே மூழ்கிடும் போலிருக்கே!

Posted By: Staff

வேலூரில் உள்ள ஒரு கல்லூரியில் விண்கல் விழுந்து ஒருவர் உயிரிழந்திருக்கிறார் என்று தமிழக முதல்வரால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. எனினும் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையமான NASA அப்படியான விண்கல் எதுவும் பூமிக்குள் வரவில்லை என்று தெரிவித்திருக்கிறது. 

இதுகுறித்த குழப்பம் நிலவி வரும் வேளையில் இந்தியாவில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மிகப்பெரிய விண்கல் ஒன்று விழுந்திருக்கிறது. விண்கல் விழுந்த இடத்தில் மிகப்பெரிய குளம் ஒன்றும் உருவாகியிருக்கிறது. 

பூமியில் இருக்கும் அரிய புவியியல் அதிசயங்களுள் ஒன்று என விஞ்ஞானிகளால் சொல்லப்படும் 'லோனார்' ஏரியை பற்றி தெரிந்துகொள்வோம் வாருங்கள்.  

லோனார் ஏரி !!

லோனார் ஏரி !!

மகாராஷ்டிரா மாநிலத்தில் புல்தானா மாவட்டத்தில் உள்ள குக்கிராமமான லோனாரில் தான் கிட்டத்தட்ட ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு 1.8 விட்டமுள்ள மிகப்பெரிய விண்கல் விழுந்ததினால் உருவானது தான் இந்த லோனார் ஏரியாகும்.

லோனார் ஏரி !!

லோனார் ஏரி !!

அதீத விசையுடன் பூமியில் விழுந்ததன் காரணமாக கிட்டத்தட்ட 1.8கி.மீ அகலமும் 449அடி ஆழமும் கொண்ட மிகப்பெரிய பள்ளம் உருவாகியிருக்கிறது.

இந்த ஏரிக்கு புர்னா மற்றும் பென்கங்கா என்ற இரண்டு சிறிய ஓடைகளில் இருந்து தண்ணீர் வருகிறது.

லோனார் ஏரி !!

லோனார் ஏரி !!

விண்கல் அதீத விசையுடன் இங்கே வந்து விழுந்த போது இங்கிருக்கும் பாறைகள் அந்த விழும்போது ஏற்ப்பட்ட உராய்வின் சூட்டில் உருகி மேலெழும்பியிருக்கின்றன.

இந்த பாறைகளில் இருக்கும் ரசாயனங்களின் காரணமாக ஏரியில் இருக்கும் பெரும்பகுதி நீர் உப்புத்தன்மை கொண்டதாக இருக்கிறது.

லோனார் ஏரி !!

லோனார் ஏரி !!

லானோர் ஏரியில் பெரும்பகுதி நீர் உப்புத்தன்மை உள்ளதாக இருந்தாலும் இதன் தெற்குப்பகுதியில் நன்னீர் இருக்கிறது.

ஒரே ஏரியில் உப்பு நீரும் நன்னீரும் இருப்பது லோனார் ஏரியில் மட்டும் தான்.

லோனார் ஏரி !!

லோனார் ஏரி !!

பழங்காலத்தில் இந்த இடத்தின் மகிமையை அறிந்தோ என்னவோ லோனார் ஏரியை சுற்றிலும் ஆயிரம் வருடங்களுக்கு முன்பே ஏராளமான கோயில்களை ரிஷிகளும் முனிவர்களும் எழுப்பியிருக்கின்றனர்.

அந்த கோயில்கள் அனைத்தும் இப்போது சிதலமடைத்து காணப்பட்டாலும் அக்கோயில்களுள் பல ரகசியங்கள் பொதிந்திருப்பதாக சொல்லப்படுகிறது.

தைத்திய சுதன் கோயில்:

தைத்திய சுதன் கோயில்:

லோனார் ஏரிக்கு அருகில் அமைந்திருக்கும் தைத்திய சுதன் கோயில்அற்புதமான வேலைப்பாடுகள் நிரம்பிய கோயிலாகும். இங்கே விஷ்ணு, துர்க்கை, சூரிய தேவன், நரசிம்மர் ஆகியோரது சிற்பங்கள் இருக்கின்றன.

தைத்திய சுதன் கோயில்:

தைத்திய சுதன் கோயில்:

கஜுராஹோ கோயிலைப் போன்றே மைதுன சிற்பங்கள் கொண்ட இக்கோயிலில் மேற்கூரை கட்டாமலேயே விடப்பட்டதா அல்லது ஏதேனும் ஒரு காரணங்களுக்காக இடித்து அளிக்கப்பட்டதா என்பது இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

லோனர்தார் கோயில்:

லோனர்தார் கோயில்:

லோனர்தார் என்னும் இக்கோயில் விண்கல் தாக்கத்தினால் மேலெழும்பிய நன்னீர் ஊற்றின் மேல் கட்டப்பட்டதாகும். இந்த ஊற்றில் வருடம் முழுக்கவும் நல்ல சுவையான நீர் வந்துகொண்டே இருக்கிறது.

இந்த தண்ணீர் எங்கிருந்து வருகிறது என்பது இன்னமும் எவருக்கும் தெரியாத புதிராக உள்ளது.

கமலஜா கோயில்:

கமலஜா கோயில்:

லோனார் ஏரியின் தெற்கு முனையில் அமைந்திருக்கும் இக்கோயிலின் மூலவராக பார்வதி தேவியின் உருவானகமலஜா தேவி வீற்றிருக்கிறார்.

ஒவ்வொரு ஆண்டும் இங்கு கொண்டாடப்படும் வருடாந்திர திருவிழாவிற்கு மகாராஷ்டிர மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர்.

மாருதி கோயில்:

மாருதி கோயில்:

இவை தவிர லோனார் ஏரியின் அருகில் ஒன்பதடி ஆஞ்சநேயர் சிற்பம் கொண்ட சிறு கோயிலொன்றும் இருக்கிறது. இந்த ஆஞ்சநேயர் சிலையானது வெறும் கல்லினால் மட்டும் செய்யப்படவில்லை என்றும் விண்கல் தாக்கத்தினால் வெளிவந்த பல அரிய உலோகங்களை கொண்டு செய்யப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த சிலை அதிக காந்தத்தன்மை கொண்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

லோனார் !!

லோனார் !!

கிட்டத்தட்ட 50,000 வருடத்திற்கு முன்பு உருவான இந்த இயற்கை அதிசயத்தை நேரில் சென்று காணும்போது காலச்சக்கரத்தில் பயணித்து அந்த காலத்துக்கே பின்னோக்கி போனது போன்ற உணர்வு ஏற்படும் என்றே சொல்லலாம்.

லோனார் !!

லோனார் !!

சுதாகர் கஸ்தூரி என்பவர் எழுதிய தமிழின் மிகச்சிறந்த அறிவியல் புனைவு நாவலாக சொல்லப்படும் '6174' என்ற புத்தகத்தில் இந்த லோனார் ஏரியை பற்றிய சுவாரஸ்யமான விவரிப்புகள் உண்டு.

லோனார் !!

லோனார் !!

லோனார் ஏரியை எப்படி சென்றடைவது?

லோனார் பற்றிய பயண தகவல்கள்

லோனார் !!

லோனார் !!

வானிலிருந்து படம்பிடிக்கப்பட்ட லோனார் ஏரியின் புகைப்படம்.

லோனார் !!

லோனார் !!

லோனாரில் சூரிய உதயத்தையும்,அஸ்தமன காட்சியையும் நிச்சயம் தவற விடக்கூடாது.

Read more about: maharastra lake adventure pune

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Nativeplanet sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Nativeplanet website. However, you can change your cookie settings at any time. Learn more