Search
  • Follow NativePlanet
Share
» »குறைந்த பட்ஜெட்டில் வெளிநாடு டூர்...எந்தெந்த நாடுகளுக்கு போகலாம்?

குறைந்த பட்ஜெட்டில் வெளிநாடு டூர்...எந்தெந்த நாடுகளுக்கு போகலாம்?

வெளிநாடு சென்று வேலை செய்து சம்பாதிக்க முடியவில்லை என்றாலும், குறைந்தபட்சம் சுற்றுலா பயணியாக சென்றாவது ஏதாவது ஒரு வெளிநாட்டிற்கு விமானத்தில் சென்று வர வேண்டும் என்பது இன்றும் பலரின் கனவாக உள்ளது. ஆனால் பணம் அதிகம் செலவாகும் என்பதால் உள்நாட்டிற்குள் மட்டும் டூர் போய் கொண்டிருக்கிறோம்.

Abu Dhabi

உண்மையில் சமீப காலமாக விமான டிக்கெட்களின் விலை வெகுவாக குறைக்கப்பட்டு விட்டது. உள்நாட்டு விமானங்கள் மட்டுல்ல வெளிநாடு செல்வதும் இப்போது எளிதாகி விட்டது. குறைந்த பட்ஜெட்டில் வெளிநாடு செல்ல ஆசைப்படுபவரா நீங்கள்? அப்படியானால் உங்கள் பட்ஜெட்டிற்குள் எந்தெந்த நாடுகளுக்கு செல்லலாம் என்பதை ஒரு பார்வை பார்க்கலாம் வாங்க.

அபுதாபி

அழகான தீவுகள், தீம் பார்க்குகள் ஆகியவற்றின் பிறப்பிடமாக திகழ்வது அபுதாபி. உலகின் பாதுகாப்பான நகரங்களில் இதுவும் ஒன்று. உங்களை வியப்படைய வைக்கும் வான் உயர்ந்த கட்டிடங்கள், பிரபலமான சுற்றுலா தலங்கள் ஆகியவற்றை கண்டு ரசிக்க விரும்பினால் அபுதாபிக்கு செல்லலாம். இங்கு செல்வதற்கான விமான டிக்கெட் கட்டணம் ரூ.9453 மட்டும் தான்.

பூடான்

அடர்ந்த காடுகள், அழகான பசுமையான நிலப்பரப்புகள் என்பதை தாண்டி அமைதியை அனுபவிக்க வேண்டும் என்றால் நீங்கள் செல்ல வேண்டிய நாடு பூடான் தான். சுத்தமான காற்று, சுத்தமான சூழல் ஆகியவற்றை பெறவும் நீங்கள் பூடான் செல்லலாம். இந்தியாவில் இருந்து பூடான் செல்வதற்கு விசா தேவையில்லை என்றாலும் அந்த நாட்டிற்குள் செல்வதற்கு அனுமதி பெறுவதற்கு ஒரு நபருக்கு ஒரு இரவிற்கு ரூ.1200 என்ற வீதத்தில் எத்தனை நாட்கள் தங்க போகிறோமோ அத்தனை நாட்களுக்கு கட்டணம் செலுத்த வேண்டும். விமான டிக்கெட் ரூ.26,282 தான்.

இந்தோனேசியா

கடற்கரை, இயற்கை அழகுமிக்க பகுதிகளை சுற்றி வர விரும்பினால் நீங்கள் செல்ல வேண்டிய நாடு இந்தோனேசியா தான். இதை வெப்ப மண்டல சொர்க்கம் என்றே சொல்லலாம். ஆன்மிக தலம் முதல் அருங்காட்சியகங்கள் வரை அனைத்துமே பார்க்க பார்க்க பரவசத்தை ஏற்படுத்தும் இடங்கள் தான். இந்தோனேசியா செல்வதற்கான விமான டிக்கெட் ரூ.27,372 மட்டுமே.

Thailand

தாய்லாந்து

கடற்கரை பிரியர்கள், ஜாலியாக என்ஜாய் பண்ண வேண்டும் என்பவர்களுக்கு ஏற்ற இடம் தாய்லாந்து தான். இங்கு நிறைய புத்தர் கோவில்கள் உள்ளன. இந்தியாவில் இருந்து தாய்லாந்து செல்வதற்கு குறைந்தபட்சமாக ரூ.14,996 முதலே விமான டிக்கெட்கள் உள்ளன.

மலேசியா

கடற்கரை பிரியர்கள் செல்வதற்கு ஏற்ற மற்றொரு நாடு என்றால் அது மலேசியா தான். கலாச்சாரம், அழகான கட்டிடங்கள் நிறைந்த நாடான மலேசியா பலரின் விருப்பமான நாடுகளில் ஒன்றாக இடம்பிடித்தது. சென்னையில் இருந்து வெறும் ரூ.8000 கட்டணத்திலேயே மலேசியா செல்ல முடியும். மலேசியாவில் 30 நாட்களுக்கும் குறைவாக தங்க போகிறீர்கள் என்றால் விசா கிடையாது. அதற்கு மேல் தங்குவதற்கு மட்டுமே விசா பெற வேண்டும்.

மஸ்கட்

புகழ்பெற்ற மன்னர் கால கோட்டைகள், அரண்மனைகள், அருங்காட்சியகம் ஆகியவற்றிற்கு புகழ்பெற்ற நாடு என்றால் அது மஸ்கட் தான். மத்திய கிழக்கு ஆசியாவின் அழகு மிகுந்த நாடுகளில் இதுவும் ஒன்றாகும். மஸ்கட்டில் இரவு நேர வாழ்க்கை என்பது மிகவும் தனித்துவமானது. இந்தியாவில் இருந்து ரூ.8777 கட்டணத்திலேயே மஸ்கட் செல்ல முடியும்.

இலங்கை

இந்தியாவிற்கு மிக அருகில் இருக்கக் கூடிய தீவு நாடான இலங்கை பல விதமான சுவையான பழங்கள், காரமசாரமான உணவுகளுக்கும் பெயர் பெற்றது. இங்கு அழகிய கடற்கரைகள், கோவில்கள், வயல்வெளிகள், மலைகள் ஆகியவை மிக அதிகம். இந்தியாவில் இருந்து ரூ.7026 கட்டணத்தில் இலங்கைக்கு செல்ல முடியும்.

வியட்நாம்

பல யுனெஸ்கோ பாரம்பரிய இடங்களை கொண்ட தலமாக இருப்பது வியட்நாம். இன்னும் அழகான கடற்கரைகள், வரலாற்று சிறப்பு மிக்க இடங்கள் ஆகியன உள்ளன. இங்கு இரவில் வசிப்பது அற்புதமான அனுபவமாக இருக்கும். இந்தியாவில் இருந்து ரூ.16,226 விமான கட்டணத்திலேயே வியட்நாமிற்கு செல்ல முடியும்.

More News

    Read more about: thailand sri lanka
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+