Search
  • Follow NativePlanet
Share
» »நாகர்ஹொளே தேசியப் பூங்கா

நாகர்ஹொளே தேசியப் பூங்கா

By

கர்நாடகாவின் நாகர்ஹொளே பகுதியில் உள்ள நாகர்ஹொளே தேசியப் பூங்கா முன்னால் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவாக ராஜீவ் காந்தி தேசியப் பூங்கா என்றும் அழைக்கப்படுகிறது.

அந்தக் காலங்களில் மைசூர் மகாராஜாக்கள் இங்கு காட்டெருமைகள் உள்ளிட்ட மிருகங்களை வேட்டை ஆடி வந்தார்கள் என்று சொல்லப்படுகிறது.

பின்னர் 1955-ஆம் ஆண்டு வனவிலங்கு சரணாலயமாக ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பூங்காவின் பரப்பளவு, 643 சதுர கிலோமீட்டராக அதிகரிக்கப்பட்டு, 1988-ஆம் ஆண்டு தேசியப் பூங்காவாக தரம் உயர்த்தப்பட்டது.

இங்கு வரும் பயணிகள் தேனுண்ணுங் கரடி, கருஞ்சிறுத்தை, நான்கு கொம்புகள் உடைய இரலை மான்கள், காட்டுப் பன்றி, எறும்புத்திண்ணி, காட்டெருமை, புலிகள் உள்ளிட்ட விலங்குகளை கண்டு ரசிக்கலாம்.

அதோடு இங்கு மலைப்பாம்பு, முதலை, விரியன் பாம்புகள் போன்ற ஊர்வன வகைகளும் வசித்து வருகின்றன. இவைத்தவிர எண்ணற்ற பறவை இனங்களும் இங்கே காணப்படுகின்றன.

மேலும் கர்நாடகாவின் மற்றொரு புகழ்பெற்ற தேசியப் பூங்காவான பந்திப்பூர் தேசியப் பூங்காவையும், நாகர்ஹொளே தேசியப் பூங்காவையும் பிரிக்கும் கபினி ஆறும் இந்தப் பகுதியின் முக்கிய சுற்றுலா ஈர்ப்பாகும்.

நாகர்ஹொளே ரிசார்ட்டுகள்

யானைக் குளியல்

யானைக் குளியல்

நாகர்ஹொளே தேசியப் பூங்காவில் உல்லாசமாக தன் தும்பிக்கையில் நீரை பீய்ச்சி அடித்துக் குளிக்கும் யானை.

படம் : Dhruvaraj S

ஆண் சிறுத்தை

ஆண் சிறுத்தை

புகைப்படமெடுப்பவரை முறைத்து பார்க்கும் ஆண் சிறுத்தை.

படம் : Srikaanth Sekar

பாலருந்தும் மான் குட்டி!

பாலருந்தும் மான் குட்டி!

மான் குட்டி ஒன்று தன் அம்மாவிடம் பாலருந்தும் அரிய காட்சி.

படம் : Ankur d

நீர் நாய்

நீர் நாய்

சத்தம் கேட்டு எட்டிப் பார்க்கும் நீர் நாய்.

படம் : Yathin S Krishnappa

இந்தப் பழம் புளிக்கும்!

இந்தப் பழம் புளிக்கும்!

சீ! சீ! இந்தப் பழம் புளிக்கும் என்று மற்ற மான்கள் எல்லாம் ஒதுங்கி நிற்க அசராமல் இரண்டு கால்களில் நின்றுகொண்டு பழம் உண்ணும் புள்ளி மான்.

படம் : Yathin S Krishnappa

மலைப்பாம்பு

மலைப்பாம்பு

இரை தேடி ஊர்ந்து செல்லும் மலைப்பாம்பு.

படம் : Yathin S Krishnappa

ஓரியென்ட்டல் டார்டர்

ஓரியென்ட்டல் டார்டர்

ஓரியென்ட்டல் டார்டர் எனும் ஒருவகை மீன் உண்ணும் பறவை.

படம் : Yathin S Krishnappa

மங்கூஸ்

மங்கூஸ்

தன் சின்னஞ்சிறிய முகத்தில் உள்ள குட்டிக் கண்களைக் கொண்டு காமராவை உற்று நோக்கும் மங்கூஸ்.

படம் : Yathin sk

புலி

புலி

அமைதியும், ஆக்ரோஷமாகவும் காணப்படும் புலி.

படம் : Yathin S Krishnappa

புள்ளி மான்கள்

புள்ளி மான்கள்

நாகர்ஹொளே தேசியப் பூங்காவில் சாலையொன்றை கடந்து செல்லும் புள்ளி மான்கள்.

படம் : Dineshkannambadi

நதிக்கு திரும்பும் முதலை

நதிக்கு திரும்பும் முதலை

கபினி ஆற்றின் கரையில் ஓய்வெடுத்து முடித்து நதிக்கு திரும்பும் முதலை.

படம் : Yathin S Krishnappa

ஜீப் சவாரி

ஜீப் சவாரி

நாகர்ஹொளே தேசியப் பூங்காவில் நீங்கள் ஜீப் சவாரி செல்லும்போது காட்டெருமை கூட்டம், புள்ளி மான்கள் போன்றவை சாலையை கடந்து செல்வதை பார்க்க முடியும். எனவே ஒரு குறிப்பிட்ட வேகத்துக்கு மேலே பூங்காவினுள் வாகனங்களில் செல்ல அனுமதியில்லை.

படம் : Sissssou2

முட்டித் தள்ளு!

முட்டித் தள்ளு!

நாகர்ஹொளே தேசியப் பூங்காவில் மரமொன்றை முட்டித் தள்ளிக் கொண்டிருக்கும் யானை.

படம் : Sankara Subramanian

தடைசெய்யப்பட்ட பகுதி

தடைசெய்யப்பட்ட பகுதி

நாகர்ஹொளே தேசியப் பூங்காவில் சில தடைசெய்யப்பட்ட பகுதிகள் இருக்கின்றன. இந்தப் படத்தில் தெரியும் கார் அப்படி தடைசெய்யப்பட்ட பகுதி ஒன்றின் உள்ளே சென்று சேற்றில் சிக்கிக்கொண்டது. எனவே நீங்கள் பூங்காவினுள் பயணம் செய்யும்போது கவனமாக இருக்க வேண்டும். இல்லையேல் மிருகங்களிடம் மாட்டிக்கொள்ள நேரும்!

படம் : Sankara Subramanian

நீரருந்தும் குரங்கு

நீரருந்தும் குரங்கு

சேற்று நீரை ருசித்து அருந்தும் குரங்கு.

படம் : Sankara Subramanian

இராட்சஸ அணில்

இராட்சஸ அணில்

மரத்தில் தாவிச் செல்லும் இராட்சஸ அணில்.

படம் : Dhruvaraj S

இந்த இடம்தான் எனக்கு பிடிச்சிருக்கு!!!

இந்த இடம்தான் எனக்கு பிடிச்சிருக்கு!!!

இந்த இடம்தான் எனக்கு பிடிச்சிருக்கு என ஒய்யாரமாக மரக்கிளையில் காலை தொங்கப் போட்டுக்கொண்டு அமர்ந்திருக்கும் குரங்கு.

படம் : Jon Connell

பழக்கப்படுத்தப்பட்ட யானைகள்

பழக்கப்படுத்தப்பட்ட யானைகள்

நாகர்ஹொளே தேசியப் பூங்காவினுள் காணப்படும் இந்தப் பகுதியில் பழக்கப்படுத்தப்பட்ட யானைகள் சிலவற்றை நீங்கள் பார்க்க முடியும்.

படம் : Sakeeb Sabakka

சாம்பார் மான்

சாம்பார் மான்

யாருடா என்ன போட்டோ எடுக்கறது என்று திரும்பிப் பார்த்து செல்லும் சாம்பார் மான்.

படம் : Sankara Subramanian

குடும்பப் புகைப்படம்!

குடும்பப் புகைப்படம்!

ஒரு அழகான யானைக் குடும்பத்தின் புகைப்படம்.

படம் : Yathin S Krishnappa

லங்கூர்

லங்கூர்

மரத்தின் மீது அமர்ந்திருக்கும் லங்கூர் குரங்கு.

படம் : Sankara Subramanian

சோம்பேறி கரடி!

சோம்பேறி கரடி!

சாலையில் மெதுவாக நடந்து செல்லும் கரடி.

படம் : Chinmayisk

மூங்கில் தோட்டம்

மூங்கில் தோட்டம்

நாகர்ஹொளே தேசியப் பூங்காவினுள் அமைந்துள்ள மூங்கில் தோட்டம் ஒன்று.

படம் : Jon Connell

ஒற்றைத் தந்த யானை!

ஒற்றைத் தந்த யானை!

குளித்துவிட்டு கரையேறும் ஒற்றைத் தந்த யானை.

படம் : Yathin S Krishnappa

மீனவர்

மீனவர்

கபினி ஆற்றில் பரிசல் ஒன்றில் மீன் பிடிக்கும் மீனவர்.

படம் : Jon Connell

நாகர்ஹொளேவை எப்போது மற்றும் எப்படி அடைவது?

நாகர்ஹொளேவை எப்போது மற்றும் எப்படி அடைவது?

எப்படி அடைவது?

எப்போது பயணிக்கலாம்?

படம் : Chinmayisk

More News

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+