Search
  • Follow NativePlanet
Share
» »கொஞ்ச கொஞ்சமாக மூழ்கிக் கொண்டிருக்கும் நியூயார்க் நகரம் – நாசா வெளியிட்ட அதிர்ச்சி அறிக்கை!

கொஞ்ச கொஞ்சமாக மூழ்கிக் கொண்டிருக்கும் நியூயார்க் நகரம் – நாசா வெளியிட்ட அதிர்ச்சி அறிக்கை!

வானளாவிய கட்டிடங்கள், பிராட்வே ஷோக்கள் மற்றும் அழகான அடையாளங்கள் என பரபரப்பான தூங்காத நகரமாக அறியப்படும் நியூயார்க் உலகின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மக்களும் பார்க்க வேண்டும் என்று ஆசைப்படும் ஒரு கனவு நகரமாகும். நாசா (NASA) வெளியிட்ட புதிய அறிக்கையின்படி நியூயார்க் நகரப் பகுதியின் பெரும்பகுதி மெதுவாக மூழ்கி வருவதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்! மனித மற்றும் இயற்கை காரணிகளால் மூழ்கி வரும் நியூயார்க் நகரம் பற்றிய செய்தி உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது!

நாசா வெளியிட்ட அதிர்ச்சி அறிக்கை

ஒருபோதும் தூங்காத சின்னமான கான்கிரீட் காடு, அதன் பரபரப்பான தெருக்கள் மற்றும் உயர்ந்த வானளாவிய கட்டிடங்களுக்கு பெயர் போன நியூயார்க் நகரத்தின் தெருக்களில் உலா வர வேண்டும் என்பது இந்த காலத்து எந்த நாட்டின் இளைஞர்களுக்கும் ஒரு ஆசை தான். பல்வேறு கனவுகளை சுமந்து கொண்டிருக்கும் கனவு நகரமான நியூயார்க், நாசாவின் சமீபத்திய அறிக்கைபடி மெதுமெதுவாக மூழ்கி வருகிறது என்ற ஆபத்தான செய்தி வெளி வந்துள்ளது.

1

கடலுக்கு அடியில் ஆண்டுதோறும் 1.6 மிமீ வீழ்ச்சி

நகரின் ஒட்டுமொத்த வீழ்ச்சி விகிதம், ஆண்டுதோறும் சராசரியாக 1.6 மில்லிமீட்டர்கள். அதாவது அதிகரித்து வரும் கடல் மட்டங்களின் அச்சுறுத்தலால் நியூயார்க் நகரம் ஆண்டுக்கு1.6 மில்லிமீட்டர்கள் கடலுக்கு கீழே மூழ்குகிறது. நகரின் சராசரி விகிதத்தை விட வேகமாக மூழ்கும் பல முக்கிய ஹாட்ஸ்பாட்களை நாசா அறிக்கை அடையாளம் காட்டுகிறது, இது பெருநகரத்திற்கு குறிப்பிடத்தக்க சவால்களை ஏற்படுத்துகிறது.

அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளுக்கும் பாதிப்பு

லாகார்டியா விமான நிலையம், ஆர்தர் ஆஷ் ஸ்டேடியம், கோனி தீவு மற்றும் பல குறிப்பிடத்தக்க இடங்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளன. அதே போல நியூயார்க் நகரத்திற்கு வெளியே, நியூ ஜெர்சியில் உள்ள நெவார்க், கியர்னி மற்றும் ஹாரிசன் சமூகங்கள் மூழ்கி வருகின்றன. லோயர் மன்ஹாட்டன், புரூக்ளின், குயின்ஸ் மற்றும் லாங் ஐலேண்டின் சில பகுதிகள் வீழ்ச்சியின் அறிகுறிகளைக் காட்டியுள்ளன என்று ஆய்வு கூறுகிறது.

தொடர்ச்சியான சவால்களை எதிர்கொள்ளும் நியூயார்க்

கடலோர மக்கள் மற்றும் சொத்துக்களை கடலோர வெள்ளத்தில் இருந்து பாதுகாப்பது நியூயார்க் நகரத்திற்கு ஒரு தொடர்ச்சியான சவாலாக உள்ளது என்று ஆராய்ச்சியாளர்களின் அறிக்கை கூறுகிறது. கடல் மட்ட உயர்வு தொடர்கிறது, இது இயற்கையான கடல் மட்ட மாறுபாடுகள் மற்றும் அழிவுகரமான புயல்களின் ஒருங்கிணைந்த தாக்கத்தை படிப்படியாக மோசமாக்குகிறது.

ஏற்கனவே மூழ்கிக் கொண்டிருக்கும் பல பகுதிகள்

இன்டர்ஸ்டேட் 78 நகரின் மற்ற பகுதிகளை விட கிட்டத்தட்ட இருமடங்காக மூழ்கிவிட்டதை எடுத்துக்காட்டுகிறது. இது மன்ஹாட்டனை நியூ ஜெர்சியுடன் இணைக்கும் ஹாலந்து சுரங்கப்பாதை வழியாக செல்கிறது. அதே போல கவர்னர்ஸ் தீவின் தெற்குப் பகுதி, ஸ்டேட்டன் தீவின் சில பகுதிகள் மற்றும் ஆர்வெர்ன் பை தி சீ ஆகிய பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

அமெரிக்காவை அதிர்ச்சிக்குள்ளாக்கிய ரிப்போர்ட்

1 மில்லியனுக்கும் அதிகமான கட்டிடங்களைக் கொண்ட நியூயார்க் நகரம் அதன் அபரிமிதமான எடையால் மூழ்கி வருவதாக அமெரிக்க புவியியல் ஆய்வு முன்பு வெளிப்படுத்திய பின்னர் இந்த அறிக்கை வந்துள்ளது. தற்போது நாசா வெளியிட்ட அறிக்கையால் அமெரிக்காவே சற்று அதிர்ந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

More News

    Read more about: new york travel guide
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+