Search
  • Follow NativePlanet
Share
» »கோவாவிற்கு ஜாலி டிரிப் தான் போகணுமா? அம்மாவுடன் சென்று பார்க்கவும் இத்தனை இடங்கள் இருக்கே

கோவாவிற்கு ஜாலி டிரிப் தான் போகணுமா? அம்மாவுடன் சென்று பார்க்கவும் இத்தனை இடங்கள் இருக்கே

கோவா டூர் என்றாலே பெரும்பாலும் நண்பர்களுடன் பார்ட்டி பண்ண, புதுமண தம்பதிகள் ஹனிமூன் செல்ல அல்லது காதலர்கள் ஜாலி டிரிப் போகும் இடமாக தான் கருதப்படுகிறது. ஆனால் இங்கு உங்கள் அம்மாவுடன் சென்று மகிழ்ச்சியாக சுற்றி பார்க்கவும் நிறைய இடங்கள் உள்ளன. ஆச்சரியமாக உள்ளதா? ஆம், கோவாவில் இருக்கும் சில அமைதியான நீர்வீழ்ச்சி, கலாசார ரீதியாக முக்கியமான இடங்கள், வரலாற்று முக்கியத்தும் வாய்ந்த கோட்டைகள் மற்றும் எழில் மிகுந்த கடற்கரைகள் என எண்ணற்ற இடங்கள் உங்கள் அம்மாவுடன் சென்று கண்டுகளிக்கும் வகையில் உள்ளன. அவற்றில் சிறப்பான சில இடங்களை தெரிந்து கொள்ளலாம்.

Goa beach

1. பலோலெம் கடற்கரை

கோவாவின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள இந்த அழகிய கடற்கரை, அமைதியான சூழல், வெண்மையான மணல் உடைய நீண்ட மற்றும் தெளிந்த நீருடன் தனித்தன்மையுடன் காணப்படும் ஒரு கடற்கரையாகும். இந்த கடற்கரையின் அலைகள் கண்டு மகிழ்ந்தும், நீர் விளையாட்டுகள் அனுபவிக்கவும் மற்றும் கடற்கரை கஃபேக்களில் ஒய்வெடுக்க சிறந்த இடம்.

2. அர்போரா இரவு சந்தை

கோவாவின், பரபரப்பான சனிக்கிழமையில் இந்த இரவு சந்தையில் மண் பானைகள் முதல் அழகிய ஆடைகள், கைவினை ஆபரணங்கள், வீட்டு அலங்காரப் பொருட்கள் மற்றும் கோவாவின் அசல் கலாச்சார சுவைகள் கொண்ட தெருவோர உணவு கடைகள் மற்றும் இன்னிசை நிகழ்ச்சிகள் என அனைத்தும் இங்கு காணலாம்.

3. சபோரா கோட்டை

அழகிய மலைச்சரிவில் அமைந்துள்ளது இந்த வரலாற்று சிறப்புமிக்க கோட்டை, இந்த கோட்டையிலிருந்து அரபிக்கடலின் வாகேட்டர் கடற்கரை கண்டு ரசிக்கலாம். மேலும், மாலை வேளையில் கடலுக்குள் சூரியன் மூழ்கும் அழகையும் கண்டு மகிழலாம்.

Goa beach

4. அன்செஸ்ட்ரல் கோவா

கோவாவின் பாரம்பரிய வாழ்க்கையை முழுமையாக காண விரும்பினால், அன்செஸ்ட்ரல் கோவா என்றழைக்கப்படும் பிக்ஃபுட் ம்யூசியம் சரியான இடமாகும். இங்கு பழங்கால வீடுகள், பழமை வாய்ந்த சிற்பங்கள், மற்றும் கலைநயமிக்க கோவாவின் பண்பாட்டு அழகை காணலாம். மேலும், இந்தியாவின் மிகப்பெரிய லேட்டரைட் சிற்பமான மிராபாய் மணற்சிற்பம் உள்ளது.

5. மிராமர் கடற்கரை

இது பனாஜிக்கு அருகிலுள்ள எழில் கொஞ்சும் மற்றும் குளிர்ந்த காற்று வீசும் அமைதியான கடற்கரை. அதிக மக்கள் கூடாத இடமாக இருப்பதால் அமைதியாக கடற்கரை மணலில் அமர்ந்து சூரிய அஸ் தமனத்தை கண்டு ரசிக்கலாம்.

6. சாவோய் மளிகைப்பண்ணை

கோவாவின் இயற்கை மற்றும் மசாலா தோட்டங்களை கண்டு ரசிக்க சாவோய் தோட்டம் முக்கிய இடமாகும். இங்குள்ள நறுமண மசாலா தோட்டங்களில் சிறந்த வழிகாட்டியுடன் சென்று தோட்டத்தை சுற்றி பார்த்தும், மருத்துவ குணம் உடைய தாவரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். மேலும், இங்கு உலர்ந்த மசாலா வகைகள் தயாரிக்கப்படும் முறைகளையும் பார்வையிடலாம். இங்கு தயாரிக்கப்படும் பாரம்பரிய உணவுகளையும் ருசித்து மகிழலாம்.

7. தூத்சாகர் நீர்வீழ்ச்சி

இந்தியாவின் மிக உயர்ந்த நீர்வீழ்ச்சிகளில் ஒன்றாகும்,இந்த நீர்வீழ்ச்சியின் நீரானது பால் போன்று விழுவதால் இதற்கு 'தூத்சாகர்'என்று பெயர் பெற்றது. இந்த நீர்வீழ்ச்சிக்கு ஜீப் சவாரி மூலமும் அல்லது பசுமையான சூழல் உடைய மகாவீர் வனவிலங்கு சரணாலயம் வழியாக சென்று கண்டு கழிக்கலாம்.

Goa beach

8. பழைய கோவாவின் சே கதீட்ரல்

பழைய கோவாவில் உள்ள சே கதீட்ரல் தேவாலயம் ஆசியாவின் மிகப்பெரிய தேவாலயங்களில் ஒன்று. முந்தைய காலக்கட்டத்தை பிரதிபலிக்கும் முக்கிய கிறிஸ்தவ தேவாலயமான இது பாரம்பரிய ஜரோப்பிய கட்டிடக் கலையை கொண்டுள்ளது. இதன் பழமை மற்றும் கட்டிடக்கலையை கண்டு ரசிக்க சிறந்த இடமகும்.

9. ஃபொன்டைன்ஹாஸ்

கோவாவின் பனாஜிமி ல் உள்ள ஃபொன்டைன்ஹாஸ், பழைய வண்ணமயமான போர்த்துகீசிய பாணி வீடுகள், குறுகிய தெருக்கள், கலைக்கூடங்கள், வித்தியாசமான கஃபேக்கள் மற்றும் கோவா-போர்த்துகீசிய உணவகங்கள் என கலாச்சாரமிக்க இடமாகும்.

10. திவார் தீவு

இந்த தீவு கோவாவின் பரபரப்பிலிருந்து விலகி அமைதியாக இருக்க விரும்புபவர்களுக்கு சிறந்த இடம். இயற்கையின் பசுமை சூழ்ந்த இந்த இடத்திற்கு படகு பயணம் மேற்கொண்டு யாரும் கண்டிராத கோவாவின் கிராமப்புற அழகைக் காணலாம்.

More News

    Read more about: goa beaches in goa
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+