Search
  • Follow NativePlanet
Share
» »'தல' தோனியின் வாழ்வில் ஸ்பெஷலான இடங்களைப் பற்றி தெரியுமா?

'தல' தோனியின் வாழ்வில் ஸ்பெஷலான இடங்களைப் பற்றி தெரியுமா?

தல தோனிக்கு ஸ்பெஷலான இடங்களுக்கு போயிருக்கீங்களா?

By Udhaya

மகேந்திர சிங் தோனி என்ற பெயரைக் கேட்டாலே நமக்குள் ஒரு உற்சாகம் ஒட்டிக்கொள்ளும். தோனி பெரும்பாலான கிரிக்கெட் ரசிகர்களின் கடவுள். இவர் களத்தில் இறங்கிவிட்டாலே வான வேடிக்கைதான்.

இவர் ஆடுகிறார் என்றாலே கிரிக்கெட் பார்ப்பதற்கு எந்த வேலையாக இருந்தாலும் ஒத்திவைத்துவிட்டு வந்து டிவி முன்பு இருப்பவர்கள் ஏராளம். ஒருநாள் போட்டிகளிலும் சரி, டி20 போட்டிகளிலும் சரி வெளுத்து வாங்கும் இவர் தற்போது எல்லா வகையான போட்டிகளிலிலிருந்தும் அணித் தலைவர் பொறுப்பைத் துறந்துவிட்டார்.

இந்திய அணி ஒரு நல்ல தலைவனை இழந்துவிட்டது என்று பலர் கருத்துகூறியுள்ளனர். எனினும் அவர் தொடர்ந்து கிரிக்கெட் விளையாடுவார் என்பது ஆறுதலான விசயம்தானே. தோனியின் கிரிக்கெட் வாழ்க்கையைப் பற்றி பலருக்கு தெரியும். ஆனால் அவரது வாழ்வில் முக்கியமான இடங்கள் என அவர் நினைப்பவற்றை உங்களுக்குத் தெரியுமா?

தோனிக்கு பிடித்த இடங்களை நாம் இப்பதிவில் காணலாம்.

ராஞ்சி

ராஞ்சி

ராஞ்சி, ஜார்க்கண்ட் மாநிலத்தின் தலைநகர். சுற்றுலாப் பயணிகளின் சொர்க்கபூமி. அருவிகளின் நகரம் என பலரால் பாராட்டப்படும் இடம்.

தோனியின் குடும்பம் முழுக்க முழுக்க ராஞ்சியைச் சேர்ந்தது. பின்னர் வேலைக்காக குடிபெயர்ந்து பல்வேறு இடங்களுக்கு சென்றனர் தோனியின் குடும்பத்தினர்.

ராஞ்சி மிக அருமையான பல சுற்றுலாத் தளங்களைக் கொண்டது. தோனிக்கு மிகவும் பிடித்ததாக கூறப்படும் இடங்களை இப்பதிவில் அடுத்தடுத்து காணலாம்.

PC: Biswarup Ganguly

ஹூண்டுரு அருவி

ஹூண்டுரு அருவி

இயற்கை எழில் கொஞ்சும் ராஞ்சி நகரில் இருக்கும் முக்கியமான சுற்றுலாத்தலம் தான் இந்த ஹூண்டுரு அருவி ஆகும். இந்தியாவில் இருக்கும் உயரமான அருவிகளில் ஒன்றான இது சுபர்ணரேகா ஆற்றின் ஊடாக 322 அடி உயரத்தில் இருந்து வீழ்கிறது. மழை காலத்தில் இவ்வருவியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் அப்போது சுற்றுலாப்பயணிகள் இங்கு அனுமதிக்கப்படுவதில்லை. அதேசமயம் கோடை காலத்தில் மிதமான அளவில், குளுகுளுவென கொட்டும் தண்ணீரில் ஆட்டம் போடுவது அற்புதமாக இருக்கும். மேலும் இதனை சுற்றிலும் நாம் புகைப்படம் எடுக்க அற்புதமான காணிடங்கள் நிறைய உள்ளன. ராஞ்சி நகரில் இருந்து 45 கி.மீ தொலைவில் ராஞ்சி - புருலியா சாலையில் இவ்விடம் அமைந்திருக்கிறது.

PC: Skmishraindia

ஜோன்ஹா அருவி

ஜோன்ஹா அருவி

ராஞ்சி நகருக்கு பக்கத்தில் அமைந்திருக்கும் மற்றுமொரு பேரழகு நிரம்பிய அருவி தான் இந்த ஜோன்ஹா அருவி. ராஞ்சி பீடபூமியின் ஒரு முனையில் அமைந்திருப்பதால் 'தொங்கும் அருவி' என்ற புனைப்பெயரும் இதற்கு உண்டு. 722 படிகள் ஏறி இந்த அருவியை அடைந்தால் புத்த விஹாராத்தை உடைய சுற்றுலா விடுதியொன்றும், சிறு கோயிலும் இருக்கிறது. ராஞ்சி நகரில் இருந்து 40 கி.மீ தொலைவில் இந்த இடம் அமைந்திருக்கிறது. ஹூண்டுரு அருவியை போலவே இவ்வருவியும் ராஞ்சி - புருலியா சாலையில் அமைந்திருக்கிறது.

PC: Eddyvishal

சிட்டா அருவி

சிட்டா அருவி


இயற்கை எழில் கொஞ்சும் மலைகளின் மீது வெள்ளைக் கூந்தல் வைத்தார்போல பாய்ந்து ஓடி வரும் அருவி கண்களை குளிரச் செய்யும்.

PC: Skmishraindia

 காங்கே அணை

காங்கே அணை

ராஞ்சி மாவட்டத்தில் அமைந்துள்ள காங்கே அணை ராஞ்சி நகருக்கு நீர் விநியோகிக்கும் தளமாக உள்ளது. நகரின் முக்கிய நீர் ஆதாரமே இந்த அணைதான்.

PC:Biswarup Ganguly

பஞ்ச்காக் நீர்வீழ்ச்சி

பஞ்ச்காக் நீர்வீழ்ச்சி


ராஞ்சி அருகில் அமைந்துள்ள மற்றொரு நீர் வீழ்ச்சி இதுவாகும்.

PC: Binayrungta

 டஸ்ஸாம் அருவி

டஸ்ஸாம் அருவி

ராஞ்சி நகருக்கு அருகே அமைந்துள்ள தைமரா கிராமத்தில் உள்ள இந்த நீர்வீழ்ச்சிக்கு டஸ்ஸாம் என்று பெயர்.

காஞ்சி ஆற்றில் உருவாகி வரும் இந்த டஸ்ஸாம் அருவி காண்பதற்கு நல்ல அழகாக தோற்றமளிக்கும். சுற்றிலும் பறவைகளின் கொஞ்சல்களும், நீரின் சத்தமும் இன்னிசை ஒன்றை மனதிற்குள் உருவாக்கும்.

PC: Samratbit

ஹிர்னி நீர்வீழ்ச்சி

ஹிர்னி நீர்வீழ்ச்சி

ராஞ்சி நகரிலிருந்து சுமார் ஒரு மணிநேர பயண தூரத்தில் அமைந்துள்ளது இந்த ஹிர்னி நீர்வீழ்ச்சி. பெயருக்கு ஏற்றார்போல அழகான நீர்வீழ்ச்சி இதுவாகும்.

PC: Skmishraindia

ஜார்க்கண்ட் போர் நினைவுச் சின்னம்

ஜார்க்கண்ட் போர் நினைவுச் சின்னம்

நாட்டுக்காக தங்கள் உயிரையே அர்ப்பணித்த வீரர்களுக்காக, அவர்களின் சாதனையை நினைவுகூர்வதற்காக அமைக்கப்பட்ட இந்த போர் நினைவுச் சின்னம் ஒரு பூங்கா போல காட்சியளிக்கிறது.

நாட்டுப்பற்று மிக்க தோனி இந்த இடத்தை அடிக்கடி நினைவு கூர்ந்து கொள்வாராம்.

PC: Ashwani Aman

ஜவஹர் வித்யா மந்திர்

ஜவஹர் வித்யா மந்திர்

தனது பள்ளிப் பருவத்தை அடிக்கடி மனதில் அசைப் போட்டுக்கொள்ளும் எம்எஸ் தோனி, தனக்கு தன்னம்பிக்கையை தந்தது தான் பயின்ற இந்த பள்ளிதான் என கூறுவார்.

தனக்குள் கிரிக்கெட் வீரன் ஒருவன் உருவாகிறான் என்பதை கண்டுணரச் செய்ததும் இந்த பள்ளிதான் என்கிறார் தோனி.

PC: Akhigraphy

கரக்பூர் ரயில் நிலையம்

கரக்பூர் ரயில் நிலையம்

நினைவு இருக்கிறதா... தன் கனவுக்கா இந்திய ரயில்வேயில் பணிபுரிந்தார் தோனி. இந்த காட்சிகள் தோனி அன்டோல்ட் ஸ்டோரி படத்தில் வரும். அவர் பணிபுரிந்த கரக்பூர் ரயில் நிலையம் இதுதான்.

PC: Bishwarup Ganguly

ஜார்க்கண்ட் சர்வதேச விளையாட்டு அரங்கம்

ஜார்க்கண்ட் சர்வதேச விளையாட்டு அரங்கம்

மிகவும் பின்தங்கிய ஜார்கண்ட் மாநிலத்தில் இருந்து வந்த ஒருவர் இந்திய அணிக்கு கேப்டனாக வருவார் என்பது யாருமே யுகிக்காத ஒன்று. அப்படி தோனி ஒரு நாயகனாக உருவானது ஜார்க்கண்டின் விளையாட்டு துறையின் வளர்ச்சிக்கு பெரிய அளவில் உதவி புரிந்திருக்கிறது. அதன் ஒரு பகுதியாக உருவானது தான் ஜார்கண்ட் சர்வதேச விளையாட்டு வளாகம். உலகத்தரத்தில் அமைக்கப்பட்ட இந்த மைதானத்தில் இந்தியா மற்றும் தோனி கேப்டனாக இருக்கும் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிகள் பங்கேற்ற போட்டிகள் நடைபெற்றுள்ளன. இந்தியாவில் நாம் நிச்சயம் சென்று பார்க்க வேண்டிய மைதானங்களில் இதுவும் ஒன்றாகும்.

PC: Akash Guruji

மும்பை வான்கடே மைதானம்

மும்பை வான்கடே மைதானம்


இந்தியாவுக்கு பல ஆண்டுகளுக்குப் பின்னர் கிரிக்கெட் உலகக் கோப்பையை பெற்றுத் தந்தார் தோனி. அவரது கேப்டன்ஷிப்பில் இந்திய அணி உலகக்கோப்பையை மட்டுமல்லாமல் பல்வேறு சாதனைகளையும் செய்தது. உலகக் கோப்பையை வென்ற இந்த மைதானம் தோனிக்கு மிகவும் பிடித்த மைதானமாகும். தோனி தன் ஆஸ்தான வீரராக மதித்த கில்கிறிஸ்ட், மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் ஆகியோருக்கும் இந்த மைதானம் மிகவும் பிடித்த மைதானமாகும்.

PC: G.patkar

எம் ஏ சிதம்பரம் ஸ்டேடியம்

எம் ஏ சிதம்பரம் ஸ்டேடியம்

சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு பெரிய விசில் அடிங்க... அப்படின்னு களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோனியின் படைவீரர்கள் அனைவரும் சென்னையிலே பிறந்து வளர்ந்தவர்களைப் போல ஐக்கியமாகிவிட்டனர்.

ஐரோப்பாவின் கிளப் கால்பந்து அணிகளைப் போல பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய இந்த ஐபிஎல் அணியின் தாய் மைதானம் சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் ஸ்டேடியம் தோனிக்கு மிகவும் பிடித்த மைதானமாகும்.

PC: Prasad1287

More News

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+