Search
  • Follow NativePlanet
Share
» »நாமேரி தேசியப் பூங்காவுக்கு நல்லதொரு சுற்றுலா செல்வோமா?

நாமேரி தேசியப் பூங்காவுக்கு நல்லதொரு சுற்றுலா செல்வோமா?

தேஸ்பூரிலிருந்து சுமார் 35 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள நாமேரி தேசியப் பூங்கா சோனித்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. சுமார் 200 சதுர கி.மீ. பரப்பளவில் விரிந்துள்ள இந்த தேசியப் பூங்கா, தன் வடப்புற எல

By Udhaya

தேஸ்பூரிலிருந்து சுமார் 35 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள நாமேரி தேசியப் பூங்கா சோனித்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. சுமார் 200 சதுர கி.மீ. பரப்பளவில் விரிந்துள்ள இந்த தேசியப் பூங்கா, தன் வடப்புற எல்லையை அருணாச்சலப்பிரதேசத்தின் பாக்குயி வனவிலங்கு சரணாலயத்துடன் பகிர்ந்து கொண்டுள்ளது. வாருங்கள் இந்த இடங்களுக்கெல்லாம் ஒரு சுற்றுலா சென்றுவருவோம்.

நாமேரி தேசியப் பூங்கா

நாமேரி தேசியப் பூங்கா

கீழ்ப்புற இமயமலையின் அடிவாரப் பகுதியில் அமைந்துள்ள நாமேரி தேசியப் பூங்கா, பல்வேறு தாவரம் மற்றும் விலங்குகளின் இருப்பிடமாகத் திகழ்கிறது. யானைகள் அதிக அளவில் காணப்படும் இப்பூங்காவில், சிறுத்தைகள், காட்டெருமைகள், கருங்கரடிகள், காட்டுப்பன்றிகள், தொப்பித்தலை குரங்குகள் ஆகியவையும் காணப்படுகின்றன.

Frani Lowe

சுற்றுலாவை அனுபவிக்க

சுற்றுலாவை அனுபவிக்க


ஹார்ன்பில்கள், ஆட்காட்டி குருவிகள், மர வாத்துகள், தேனீக்களை உண்ணும் பறவையினம் மற்றும் இன்னிசைப் பறவைகள் போன்ற பல்வேறு பறவையினங்களையும் இங்கு காணலாம். இப்பூங்காவில் பாயும் ஏராளமான சிற்றோடைகள் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கின்றன. மீன்பிடிப்புக்கு மிகச் சிறந்த இடமாக இருப்பதினால் இங்கு தூண்டில்கள் மூலம் மீன்கள் பிடிக்கப்படுகின்றன.

Digantatalukdar

எப்போது செல்லலாம்

எப்போது செல்லலாம்

நவம்பர் முதல் மே வரையிலான காலமே இப்பூங்காவிற்கு வருகை தர மிகவும் உகந்ததாகும். சுற்றுலாப் பயணிகள் சுமார் 198 கிலோமீட்டர் தொலைவில் உள்ள குவாஹத்தியிலிருந்து நேராக இப்பூங்காவிற்கு வரலாம் அல்லது முதலில் தேஸ்பூர் சென்று பின் அங்கிருந்தும் வரலாம்.

Vikramjit Kakati

குட்டி காசிரங்கா பூங்கா

குட்டி காசிரங்கா பூங்கா

ஒராங் தேசியப் பூங்கா சுமார் 78 சதுர கி.மீ. பரப்பளவில் டர்ராங் மற்றும் சோனித்பூர் மாவட்டங்களில் அமைந்துள்ளது. ஒராங் தேசியப் பூங்கா, காசிரங்கா தேசியப் பூங்காவைப் போன்றே அச்சு அசலாக இருப்பதினால் இது குட்டி காசிரங்கா பூங்கா என்றும் அறியப்படுகிறது. இவ்விரண்டு பூங்காக்களும் சதுப்பு நிலங்கள், நீரோடைகள், மற்றும் புல்வெளிகள் கொண்ட ஒரே விதமான நிலத்தோற்றத்தைக் கொண்டுள்ளன. ஒற்றைக் கொம்புடைய அரிய வகை இந்திய காண்டா மிருகத்தையும் ஒராங் தேசியப் பூங்காவில் காணலாம். ஒராங் தேசியப் பூங்கா ஒவ்வொரு வருடமும், வெள்ளை நாரை, பெருநாரை, ஷெல் வாத்துகள், காட்டு வாத்து, மீன்கொத்தி மற்றும் மரங்கொத்தி போன்ற பல்வேறு புலம்பெயர் பறவைகளின் வருகையினையும் காண்கிறது. ராயல் வங்காள புலி, சிறுத்தைகள், இந்திய எறும்புதின்னிகள், புனுகுபூனைகள், குள்ளமான பன்றிகள் போன்ற ஏராளமான விலங்குகளும் இப்பூங்காவில் வசித்து வருகின்றன. ஒராங் தேசியப் பூங்கா செல்வதற்கான உகந்த காலகட்டம் அக்டோபர் முதல் மார்ச் வரையிலான மாதங்களே ஆகும். சுமார் 56 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள தேஸ்பூர் நகரமே இத்தேசியப் பூங்காவுக்கு அருகாமையில் அமைந்துள்ள நகரம் ஆகும். குவாஹத்தி, இப்பூங்காவில் இருந்து சுமார் 135 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

Kangkan Hazarikaads

 வெம்மையான நீரூற்றுகள்

வெம்மையான நீரூற்றுகள்

கரம்பானி வனவிலங்குகள் சரணாலயம், ஏராளமான வெதுவெதுப்பான நீரூற்றுகளைக் கொண்டிருப்பதனாலேயே இப்பெயர் பெற்றதாகக் கூறப்படுகிறது. கர்பி ஆங்லாங் மாவட்டத்தில் அமைந்துள்ள கரம்பானி வனவிலங்குகள் சரணாலயம் சுமார் 6.05 கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள மிகச்சிறு சரணாலயம் ஆகும். வெம்மையான நீரூற்றுகள் தவிர்த்து, இச்சரணாலயத்தில் ஏகப்பட்ட நீர்வீழ்ச்சிகளும் காணப்படுகின்றன. மலைக்குரங்குகள் மற்றும் தங்க நிற கரடிக்குரங்குகளின் இருப்பிடமாகத் திகழும் கரம்பானி வனவிலங்குகள் சரணாலயத்தில் பல்வேறு வகையான பாலூட்டிகள், பறவைகள் மற்றும் ஊர்வன போன்ற விலங்குகளையும் காணலாம். இவை தவிர புலிகள், யானைகள், காட்டெருதுகள், ஹார்ன்பில், மலைப்பாம்புகள், நாகப்பாம்புகள் மற்றும் ராட்சத பல்லிகள் போன்றவையும் இங்கு காணப்படுகின்றன. கரம்பானி வனவிலங்குகள் சரணாலயம், கொலாகாட் என்ற இடத்திலிருந்து சுமார் 25 கிலோமீட்டர் தொலைவிலும், காசிரங்கா தேசியப் பூங்காவிலிருந்து சுமார் 65 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. இந்த சரணாலயத்திலிருந்து சுமார் 55 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நாகலாந்தின் திமாப்பூர் விமான நிலையமே இதற்கு அருகாமையில் அமைந்துள்ள விமான நிலையம் ஆகும். நவம்பர் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கு இடைப்பட்ட காலமே இங்கு செல்ல ஏதுவானதாகும்.

Giridhar Appaji Nag Y

More News

    Read more about: travel
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+