Search
  • Follow NativePlanet
Share
» »தல தோணியோட ஊர் ஏன் நீர்வீழ்ச்சி நகரம்னு அழைக்கப்படுது தெரியுமா?

தல தோணியோட ஊர் ஏன் நீர்வீழ்ச்சி நகரம்னு அழைக்கப்படுது தெரியுமா?

பீகார் மாநிலத்தில் இருந்து பிரிக்கப்பட்டு, தனி சிறப்புகளுடன் புதிய மாநிலமாக உருவாக்கப்பட்டது ஜார்கண்ட் மாநிலம். இது நம் கிரிக்கெட் கேப்டன் எம் எஸ் தோணியின் சொந்த ஊர். இந்த மாநிலத்தின் தலைநகரம் தான் ர

By Udhaya

பீகார் மாநிலத்தில் இருந்து பிரிக்கப்பட்டு, தனி சிறப்புகளுடன் புதிய மாநிலமாக உருவாக்கப்பட்டது ஜார்கண்ட் மாநிலம். இது நம் கிரிக்கெட் கேப்டன் எம் எஸ் தோணியின் சொந்த ஊர். இந்த மாநிலத்தின் தலைநகரம் தான் ராஞ்சி. செழுமையான கனிம வளங்களை கொண்டிருந்தாலும் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே இருந்த ஜார்கண்ட் மாநிலத்திற்கு புது அடையாளத்தையும், அது மேம்பட உதவியதிலும் மண்ணின் மைந்தன் நம்ம இந்திய அணி கேப்டன் தோனிக்கு பெரும் பங்குண்டு. அவரின் பெருமைகளுக்காகவே அந்த ஊருக்கு சென்று வரலாம்தான். ஆனால் அதனினும் அங்குள்ள சுற்றுலாத் தளங்கள் உங்களை திரும்ப திரும்ப வரவழைக்கும் தன்மைகொண்டவை. ஆனா அதுக்கு முன்னாடி இந்த பக்கத்தில் மேல் பகுதியில் இருக்கும் பெல் பட்டனைத் தட்டி, இந்த தளத்திலிருந்து தொடர் அப்டேட்டுகளை பெறுங்கள். மேலும் நமது முகநூல் பக்கத்திலும் பின்தொடருங்கள். ஏதேனும் சுற்றுலாத் தொடர்பான சந்தேகங்களுக்கு முகநூல் பக்கத்தின் உள்டப்பியைத் தொடர்புகொள்ளுங்கள். தமிழ் நேட்டிவ் பிளானட்

ஹூண்டுரு அருவி :

ஹூண்டுரு அருவி :

இயற்கை எழில் கொஞ்சும் ராஞ்சி நகரில் இருக்கும் முக்கியமான சுற்றுலாத்தலம் தான் இந்த ஹூண்டுரு அருவி ஆகும். இந்தியாவில் இருக்கும் உயரமான அருவிகளில் ஒன்றான இது சுபர்ணரேகா ஆற்றின் ஊடாக 322 அடி உயரத்தில் இருந்து வீழ்கிறது.

வெள்ளப்பெருக்கு

வெள்ளப்பெருக்கு

மழை காலத்தில் இவ்வருவியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் அப்போது சுற்றுலாப்பயணிகள் இங்கு அனுமதிக்கப்படுவதில்லை. அதேசமயம் கோடை காலத்தில் மிதமான அளவில், குளுகுளுவென கொட்டும் தண்ணீரில் ஆட்டம் போடுவது அற்புதமாக இருக்கும். மேலும் இந்த இடம் மிகவும் அழகான சுற்றுலா அம்சங்களோடு நிறைந்திருப்பதால், நல்லதொரு உல்லாச பயணத்துக்கும் சிறப்பா னதாக இருக்கும். வெகு தூரம் பயணம் செய்து ஒரு இடத்துக்கு சுற்றுலா செல்வது என்பது சற்று பெருத்த செயல்தான். திட்டமும் கொஞ்சம் கடினமானதாக இருக்கும். போக்குவரத்து செலவு, உணவு, தங்குமிடம் பற்றிய கவலை நமக்கு இருக்கும். ஆனால் அப்படி கடினமான வழியில் பயணம் செய்தாலும் கூட அந்த பட்ஜெட்டை தாண்டாத ஒரு சுற்றுலா இது.

Biswarup Ganguly

எப்படி செல்வது

எப்படி செல்வது

மேலும் இதனை சுற்றிலும் நாம் புகைப்படம் எடுக்க அற்புதமான காணிடங்கள் நிறைய உள்ளன. ராஞ்சி நகரில் இருந்து 45 கி.மீ தொலைவில் ராஞ்சி - புருலியா சாலையில் இவ்விடம் அமைந்திருக்கிறது.

Biswarup Ganguly

ஜோன்ஹா அருவி :

ஜோன்ஹா அருவி :



ராஞ்சி நகருக்கு பக்கத்தில் அமைந்திருக்கும் மற்றுமொரு பேரழகு நிரம்பிய அருவி தான் இந்த ஜோன்ஹா அருவி. ராஞ்சி பீடபூமியின் ஒரு முனையில் அமைந்திருப்பதால் 'தொங்கும் அருவி' என்ற புனைப்பெயரும் இதற்கு உண்டு. 722 படிகள் ஏறி இந்த அருவியை அடைந்தால் புத்த விஹாராத்தை உடைய சுற்றுலா விடுதியொன்றும், சிறு கோயிலும் இருக்கிறது.

wiki

 ஜோன்ஹாவுக்கு எப்படி செல்வது

ஜோன்ஹாவுக்கு எப்படி செல்வது

ராஞ்சி நகரில் இருந்து 40 கி.மீ தொலைவில் இந்த இடம் அமைந்திருக்கிறது. ஹூண்டுரு அருவியை போலவே இவ்வருவியும் ராஞ்சி - புருலியா சாலையில் அமைந்திருக்கிறது. ஜார்கண்ட் சர்வதேச விளையாட்டு வளாகம்

Skmishraindia

நீர்வீழ்ச்சி நகரம்

நீர்வீழ்ச்சி நகரம்

ஜார்கண்டின் தலைநகரான ராஞ்சி நீர்வீழ்ச்சி நகரம் என அழைக்கப்படுகிறது. சோடா நாக்பூர் பீடத்தில் உள்ள ராஞ்சி, கடல் மட்டத்தில் 2140அடி உயரத்தில் உள்ளது. இங்கு ஏராளமான நீர்வீழ்ச்சிகளும், குன்றுகளும், பாறை வடிவங்களும் உள்ளன. வருடம் முழுதும் மிதமான வானிலையே நிலவுகிறது.

TribhuwanKumar

நீர்வீழ்ச்சி சுற்றுலா

நீர்வீழ்ச்சி சுற்றுலா

1831-ல் கோல் புரட்சியில் உதயமாகி லோஹர்டங்கா என்றழைக்கப்பட்ட ராஞ்சி 1899ல் ராஞ்சி என மாற்றப்பட்டது. அருகிலுள்ள சுற்றுலாத் தலங்கள் நீர்வீழ்ச்சிகளின் நகரம் என்றழைக்கப்படும் ராஞ்சியில் தசாம் நீர்வீழ்ச்சி, கன்ச்னி நதி, சுபர்னரேகா நதியின் தசாம் நீர்வீழ்ச்சி என ஏரிகளும், நீர்வீழ்ச்சிகளும் உள்ளன.

Sreyabanerjee

 மற்ற இடங்கள்

மற்ற இடங்கள்


சுபர்னேகாவின் ஹுன்ட்ரு நீர்வீழ்ச்சி 320அடி உயரத்தில் இருந்து விழுகிறது. ஜோனா நீர்வீழ்ச்சி ராஞ்சியில் இருந்து 40கிமீ தொலைவில் உள்ளது. 500 படிகள் இறங்கி இந்த நீர்வீழ்ச்சியின் அழகைக் காணலாம். புத்தர் கோவிலுடன் கூடிய விருந்தினர் மாளிகை ஒன்றும் இங்குள்ளது. மேலும் நட்சத்திரா வான், கோண்டா, தாகூர் மலை ஆகிய இடங்களும் உண்டு.

தல தோணியோட ஊர பாத்ததுமாதிரியும் இருக்கும். நிறைய சுற்றுலா தளங்கள ரசிச்சது மாதிரியும் இருக்கும். டூ இன் ஒன் ஆஃபர்.. இப்பவே போங்க ராஞ்சிக்கு...

Biswarup Ganguly

More News

    Read more about: travel waterfalls india
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+