வரலாற்று நினைவுச்சின்னங்கள் முதல் நவீன வசதிகள், கலாச்சாரம், உணவு, பாரம்பரியம் மாறாத மக்கள் என மத்தியப் பிரதேசம் முழு இந்தியாவின் கலவையையும் நீங்கள் காணலாம். ஆனால் எப்படி இங்கே செல்வது என யோசிக்கிறீர்களா? கவலையே வேண்டாம்! IRCTC உங்களுக்காகவே மத்தியப் பிரதேசத்திற்கு ஒரு அட்டகாசமான பேக்கேஜை அறிமுகப்படுத்தியுள்ளது. கூடுதல் சிறப்பம்சம் என்னவென்றால் இந்த பேக்கேஜூக்கான கட்டணம் ரூ.20,000 மட்டுமே! இந்த டூர் பேக்கேஜில் நீங்கள் என்னவெல்லாம் சுற்றிப் பார்க்கலாம், என்னென்ன உங்களுக்கு கிடைக்கும் என்று கீழே பாப்போம்!

இந்தியாவின் இதயமான மத்தியப் பிரதேசம்
இந்தியாவின் மையத்தில் அமைந்துள்ளதால் மத்தியப் பிரதேசம் என்ற பெயர் பெற்ற மாநிலமான மத்தியப் பிரதேசத்தில் சுற்றிப் பார்ப்பதற்கு ஏராளம் உள்ளன. தி ஹார்ட் ஆஃப் இன்க்ரெடிபிள் இந்தியா (The Heart of Incredible India) மற்றும் இந்தியாவின் இதயமாக மத்தியப் பிரதேசம் எக்கச்சக்கமான அழகிய சுற்றுலாத் தலங்களை வழங்குகிறது. கலாச்சார மற்றும் ஆன்மீக பாரம்பரியத்தின் அழகான கலவையின் தாயகமான இங்கு நீங்கள் எண்ணற்ற ஸ்தூபிகள், செதுக்கப்பட்ட கோவில்கள், வனவிலங்கு சரணாலயங்கள், அரண்மனைகள் மற்றும் நினைவுச்சின்னங்கள் ஆகியவற்றை கண்டு களிக்கலாம்.
நான்கு பகல் மற்றும் மூன்று இரவுகள் கொண்ட ரூ.20,000 பயணம்
மகேஷ்வர், ஓம்காரேஷ்வர், இந்தூர் மற்றும் உஜ்ஜைன் ஆகிய இடங்களை உள்ளடக்கிய மத்தியப் பிரதேச மகா தர்ஷன் டூர் பேக்கேஜில் நீங்கள் இந்தியாவின் கடந்த கால பாரம்பரியம் மற்றும் செழுமையை கண்டு ரசிக்கலாம். நான்கு பகல் மற்றும் மூன்று இரவுகள் கொண்ட இந்தப் பயணம் ஹைதராபாத்தில் இருந்து தொடங்குகிறது. சுற்றுப்பயணத்தின் முதல் நாளில், உஜ்ஜயினியின் உள்ளூர் கோயில்களான ஹர்சித்தி மாதா கோயில், கால பைரவர் கோயில், மங்கல்நாத் கோயில், சிந்தாமன் கணேஷ் கோயில் மற்றும் சண்டிபனி ஆசிரமம் போன்றவற்றைப் பார்வையிடலாம்.

ஏப்ரல் 2, 2023 இல் தொடங்கும் சுற்றுலா
இரண்டாவது நாளில், சுற்றுலா உங்களை மஹாகாலேஷ்வர் கோயிலுக்கு அழைத்துச் சென்று, ஓம்காரேஷ்வருக்குப் புறப்பட்டு, அங்கு நீங்கள் ஓம்காரேஷ்வர் கோயிலுக்குச் செல்வீர்கள். மூன்றாவது நாள் மகேஷ்வரில் தொடங்கும், நீங்கள் அஹில்யா தேவி கோட்டை மற்றும் நர்மதா காட் ஆகியவற்றைப் பார்வையிடுவீர்கள். இந்த சுற்றுலா ஏப்ரல் 2, 2023 அன்று தொடங்குகிறது.

டூர் பேக்கேஜில் அடங்கிய மற்ற விஷயங்கள்
டூர் பேக்கேஜில் ஹைதராபாத்தில் இருந்து இந்தூருக்கு விமான கட்டணம் மற்றும் பிற வழிகளும் அடங்கும். உஜ்ஜைன், ஓம்காரேஷ்வர் மற்றும் இந்தூரில் தலா ஒரு இரவு தங்கும் வசதியும் இதில் அடங்கும். இது தவிர, நான்கு காலை உணவுகள் மற்றும் மூன்று இரவு உணவுகள், குளிரூட்டப்பட்ட பேருந்து, பயணக் காப்பீடு மற்றும் சுற்றுலா எஸ்கார்ட் ஆகியவை அடங்கும். இருப்பினும், கூடுதல் கட்டணங்கள், கட்டணங்கள், நுழைவுச் சீட்டுகள் அல்லது தனிப்பட்ட செலவுகள் ஆகியவை தொகுப்பில் சேர்க்கப்படாது.

இணையத்தளத்தைப் பார்வையிடுங்கள்
இந்திய ரயில்வே கேட்டரிங் & டூரிஸம் கார்ப்பரேஷன் (IRCTC) பயணிகளை கவரும் வகையில் புதிய பயண பேக்கேஜ்களை அறிமுகப்படுத்தி வருகிறது. மேலும் அந்த திட்டங்களும் மலிவு விலையில் வருகின்றன. இவற்றின் மூலம், உங்கள் பயணத் திட்டங்களை நிறைவேற்றுவதோடு, இந்தியாவின் அழகிய சுற்றுலாத் தலங்களுக்கும் நீங்கள் செல்லலாம். பயணக் காப்பீடு, தங்குமிடம், உள் போக்குவரத்து, விமான டிக்கெட்டுகள், உணவு சுற்றிப் பார்க்கும் செலவு எதற்காகவும் நாம் மெனக்கிட வேண்டியதில்லை. ரூ.20000 செலுத்தினால் போதும். அசத்தலான டூர் பேக்கேஜ் உங்கள் கையில்! மேலும் தகவல்களுக்கு https://www.irctctourism.com/ என்ற இணையத்தளத்தைப் பார்வையிடவும்.



Click it and Unblock the Notifications




