Search
  • Follow NativePlanet
Share
» »இனி புதுச்சேரியின் 21 சுற்றுலாத் தலங்களை வெறும் ரூ.150 இல் சுற்றிப் பார்க்கலாம் தெரியுமா?

இனி புதுச்சேரியின் 21 சுற்றுலாத் தலங்களை வெறும் ரூ.150 இல் சுற்றிப் பார்க்கலாம் தெரியுமா?

பிரஞ்சு கலாச்சாரம், பழங்கால கட்டிடக்கலை, வண்ணமயமான கடற்கரைகள், வித விதமான கஃபேக்கள், பப்கள், ஷாப்பிங் என சுதந்திரமான சுற்றுலாவை பயணிகளுக்கு வழங்குகிறது நம் புதுச்சேரி. நாளுக்கு நாள் புதுச்சேரி செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் வெறும் ரூ.150 செலுத்தி புதுவையின் 21 சுற்றுலாத் தலங்களை சுற்றிப் பார்க்கும் சிட்டி டூர் பேக்கேஜை புதுச்சேரி சாலை போக்குவரத்து கழகம் (PRTC) அறிமுகப்படுத்தியுள்ளது!

அனைத்து சுற்றுலாப் பயணிகளையும் ஈர்க்கும் புதுச்சேரி

வண்ணமயமான பல கடற்கரைகள், அமைதியான ஆசிரமம், கண்ணை கவரும் பிரெஞ்சு கட்டிடங்கள், சொக்க வைக்கும் கஃபேக்கள் மற்றும் பப்கள், எல்லா வயதினருக்கும் ஏற்ற ஷாப்பிங், அரிக்கன்மேடு ASI சுற்றுலாத் தலம், எல்லா தரப்பினரையும் தன வசம் ஈர்க்கும் ஆரோவில், புதுவையைச் சுற்றியுள்ள அழகான கோவில்கள் மற்றும் தேவாலயங்கள் என புதுச்சேரி எல்லா தரப்பினருக்கும் ஏற்ற சுற்றுலாத் தலமாக உள்ளது. குறிப்பாக வார இறுதிகளிலும், நீண்ட விடுமுறை நாட்களிலும் புதுவை மக்கள் கூட வீட்டை விட்டு வெளிவர யோசிக்கின்றனர். காரணம் அந்த அளவுக்கு புதுவையை நோக்கி படையெடுக்கும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டதாம்!

prtc bus packages

வார இறுதிகளில் நிரம்பி வழியும் புதுச்சேரி

உலகம் முழுவதிலுமிருந்து சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் துடிப்பான இடமாக புதுச்சேரி திகழ்கிறது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்தியா அதன் ஆன்மீக செல்வம், கலாச்சார பாரம்பரியம் மற்றும் பன்முகத்தன்மைக்கு எப்போதும் அறியப்படுகிறது. நீங்கள் எந்த வயதைச் சார்ந்த சுற்றுலாப் பயணியாக இருந்தாலும் சரி, எல்லாருக்குமே ஏற்ற சுற்றுலாத் தலங்கள் புதுச்சேரியில் இருக்கின்றன.

தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிட்டி டூர்

புதுச்சேரியில் உள்ள சுற்றுலா தலங்களை சுற்றுலாப் பயணிகள் கண்டு மகிழ ஏதுவாக புதுச்சேரி சுற்றுலா வளர்ச்சி கழகமான (PTDC) மூலம் கடந்த ஆண்டுகளில் புதுவை சிட்டி டூர் இயக்கப்பட்டு வந்தது. ஆனால் கொரோனாவுக்கு பிறகு அவை அப்படியே கிடப்பில் போடப்பட்டதால் புதுவை சிட்டி டூர் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

புதிய வடிவத்தில் பட்ஜெட்டில் புதுவையை சுற்றிப் பார்க்க நீங்கள் ரெடியா?

ஆனால் இப்போது PRTC மூலம் புதிய வண்ணம் தீட்டப்பட்ட அலங்கரிக்கப்பட்ட பேருந்துகள் புதுவை சிட்டி டூருக்கு தற்போது ரெடியாக இருக்கின்றன. இந்த சுற்றுலா பேக்கேஜின் மூலம் நீங்கள் புதுவையின் 21 சுற்றுலாத் தலங்களை சுலபமாக சுற்றிப் பார்க்கலாம். இட்ன்ஹா சுற்றுலா பேக்கேஜின் பெயர் 'ஹாப் ஆன், ஹாப் ஆப்' (Hop on, Hop off) என்பதாகும். இந்த டூர் பேக்கேஜ் வெளியூரில் இருந்து புதுவைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் உதவிகரமானதாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

எந்தெந்த இடங்களைச் சுற்றிப் பார்க்கலாம்

புதுச்சேரி பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும் இந்த பேருந்துகள் உங்களுக்கு 21 சுற்றுலாத் தலங்களுக்கு அழைத்து செல்கின்றன!

1. புதுவை பொட்டானிக்கல் கார்டன்

2. தூய இருதய ஆண்டவர் பசிலிக்கா

3. பாண்டி மெரீனா பீச்

4. பாரதி பூங்கா

5. அரவிந்தர் ஆசிரமம்

6. அரவிந்தோ சொசைட்டி காகித தயாரிப்பு நிறுவனம்

7. மணக்குள விநாயகர் கோயில்

8. முருங்கப்பாக்கம் கைவினை கிராமம்

9. அரிக்கன்மேடு

10. சின்ன வீராம்பட்டினம் ஈடன் கடற்கரை

11. சுண்ணாம்பாறு படகு குழாம்

12. சிங்கிரி லட்சுமி நரசிம்மர் கோயில்

13. திருக்காஞ்சி கங்கைவராக நதீஸ்வரர் கோயில்

14. வில்லியனூர் திருக்காமீசுவரர் கோயில்

15. வில்லியனூர் மாதா கோயில்

16. ஊசுடு பறவைகள் சரணாலயம்

17. பாண்லே பால் பண்ணை

18. ஆரோவில் மாத்ரி மந்திர்

19. ஆரோவில் கடற்கரை

20. காமராஜர் மணிமண்டபம்

21. லாஸ்பேட்டை அப்துல் கலாம் கோளரங்கம்

இதற்கான டிக்கெட்டுகள் புதுவை பேருந்து நிலையத்தில் உள்ள PRTC கவுண்டர்களில் இருந்து நீங்கள் பெற்றுக் கொள்ளலாம். அல்லது 0413-2200674 என்கிற எண்களை தொடர்புக் கொள்ளலாம்!

More News

    Read more about: pondicherry travel guide
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+