தமிழக சினிமாவை உலக அளவுக்கு கொண்டு சென்ற பெருமையை கொண்ட சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தை பிடிக்காதவர்கள் யாராவது உண்டா? இவர் சென்ற வந்தால் ஒரு சாதாரண கோயிலும் பேமஸ் ஆகி விடுகிறது, இவர் ஒரு கிராமத்தில் காலடி எடுத்து வைத்தாலும் அந்த ஊர் பிரபலமாகிறது. அவரை சிகப்பு கம்பளம் போட்டு வரவேற்க உலகில் பல இடங்கள் இருக்கலாம், ஆனால் அவர் மிகவும் விரும்பி செல்லும் இடம் ஒன்று இருக்கிறது! அந்த இடம் உண்மையிலேயே ஒரு அற்புத இடம் தான்! அது என்ன இடம் தெரியுமா?

உலக அளவில் தமிழ் சினிமாவை பிரபலமடைய வைத்த சூப்பர்ஸ்டார்
'சூப்பர்ஸ்டாரு யாருன்னு கேட்டா சின்ன குழந்தையும் சொல்லும்' எனும் அளவுக்கு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் உலக பேமஸ். முதன்முதலில் உலக அளவில் அதிக வசூலை வாரி குவித்த படம் அவுருடையது தான், ஜப்பான் முதல் அமெரிக்கா வரை, உலகின் மூலை முடுக்குகளிலும் கூட அவருக்கு ரசிகர் பட்டாளம் உண்டு. 1970 களில் அவர் நடிக்க வந்திருந்தாலும் கூட இன்று வரும் இளம் தலைமுறை நடிகர்களும் போட்டி போடும் அந்த திறமையும், ஸ்டைலையும், நடிப்பும் திரையில் நின்று பேசுகிறது.
அவருக்கு பிடித்த இடம் எது தெரியுமா
அவருக்கு அமெரிக்காவில் வீடு இருக்கலாம், லண்டனுக்கு அவர் சுற்றுலா செல்லலாம், ஐக்கிய அரபின் கோல்டன் விசா வைத்துள்ள பெருமையுடன் உலகைச் சுற்றலாம். ஆனால், அவருக்கு பிடித்த இடம் உலகின் எல்லா நாடுகளையும் விட, அனைத்து சுற்றுலாத் தலங்களையும் விட அழகானது, அமைதியானது. எப்பொழுதெல்லாம் அவருக்கு நேரம் கிடைக்கிறதோ அவர் விரும்பி செல்லும் இடமும் அது தான். அந்த இடம் எந்த இடம் தெரியுமா - அது தான் இமயமலை!

இமயமலையே அவருக்கு மிகவும் பிடித்த இடம்
இந்த யாத்திரை ஸ்தலம் இயற்கை, உயரமான மலைகள் மற்றும் ஆன்மீக சக்தி உள்ள இடங்களை விரும்புபவர்களுக்கானது - மலையேறுபவர் அல்லது மலையேறுபவராக இருக்க வேண்டிய அவசியமில்லை. ஆங்காங்கே சாலையில் படுத்து உறங்கிக் கொண்டு, சாதாரண கடைகளில் உணவருந்திவிட்டு, எளியவனாக இமயமலை பயணத்தை மேற்கொள்வார் நம் தலைவர். இந்த உயரமான மலைகளை இளம் வயதினர் கூட ஏற சிரமப்படுவர், ஆனால் இவருக்கு மட்டும் எப்படி அலுப்பே வரவில்லை என்று தான் புரியவில்லை. இந்த ஆனந்த யாத்திரையில் உயரமான இமயமலையின் நேர்த்தியான அழகையும் ஆன்மீக சக்தியையும் நேரடியாக அனுபவிப்பதே அவருக்கு மகிழ்ச்சி தரும் என்று அவரே கூறியுள்ளார்.
ஆன்மீக சுற்றுலாவை வழங்கும் இமயமலை
இந்திய இமயமலை, அவற்றின் கம்பீரமான சிகரங்கள், அழகிய நிலப்பரப்புகள் மற்றும் அமைதியான சூழ்நிலையுடன், நீண்ட காலமாக ஆன்மீக தேடுபவர்களுக்கும் யாத்ரீகர்களுக்கும் புகலிடமாக இருந்து வருகிறது. உயர்ந்து நிற்கும் மலைகளுக்கு மத்தியில் அமைந்திருக்கும் இந்த ஆன்மீக இடங்கள் இயற்கையோடு ஆழமான தொடர்பை, உள் அமைதியையும், பழங்கால மரபுகள் மற்றும் நடைமுறைகளை ஆராய்வதற்கான வாய்ப்பையும் வழங்குகிறது.

அனைவரும் கட்டாயம் செல்ல வேண்டிய இடம் இது
மிக நீண்ட காலமாக, ஆன்மீகத்தை தேடும் நபர்கள் புனிதமான இந்திய இமயமலைக்கு ஈர்க்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் தான் நம் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். இமயமலையின் பிரமிக்கவைக்ககூடிய சிகரங்களும் அமைதியான சூழலும் வாழ்க்கையை மாற்றும் பயணங்களுக்கு வாய்ப்பளிக்கின்றன. உலகின் மிக உயரமான மலைகளான இவை சிலவற்றுடன் கூடுதலாக எண்ணற்ற பழமையான கோவில்கள், மடங்கள் மற்றும் அழகிய இயற்கை அழகும் இப்பகுதியில் உள்ளது. நீங்கள் இயற்கையுடன் இணைந்திருக்கலாம், உள் அமைதியைக் கண்டறியலாம் மற்றும் இந்திய இமயமலையில் ஆன்மீக நடைப்பயணங்களில் தேடுபவர்களும் முனிவர்களும் பல ஆண்டுகளாகப் பின்பற்றிய பாதைகளில் பயணம் செய்யலாம்.
2023 இல் இமயமலைக்கு சென்ற தலைவர்
2023 ஆம் வருடம் ஆகஸ்ட் 10ம் தேதி ஜெயிலர் ரிலீஸ் ஆன நிலையில், அதற்கு ஒரு நாள் முன்னதாக 9ம் தேதி ரஜினிகாந்த் இமயமலைக்கு புறப்பட்டார். அவரது பயணம் ஒரு வார கால ஆன்மீக பயணமாக திட்டமிடப்பட்டது. ரஜினி முதலில் சுவாமி தயானந்த சரஸ்வதி ஆசிரமத்திற்கு சென்று குருக்களிடம் ஆசி பெற்றதாக தெரிகிறது. அங்கு ஆன்மிக உரைகளை கேட்ட ரஜினியும் சிறப்புரையாற்றினார். இதையடுத்து, பத்ரிநாத் கோயிலுக்குச் சென்ற அவருக்கு அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது. வியாச குகைக்குச் சென்ற பிறகு, அவர் மஹாவ்தார் பாபாஜி குகையை அடைய கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நடைபயணம் மேற்கொண்டார், அங்கு அவர் தியானம் செய்தார்.
இப்படி எந்த துணையும் இல்லாமல், தானாகவே இமயமலையில் ஒரு சன்னியாசியை போல சுற்றித் திரிவது நம் தலைவருக்கு மிகவும் பிடிக்குமாம் மக்களே!



Click it and Unblock the Notifications





