வாழ்கையில் என்றென்றைக்கும் மறக்கவே முடியாத திரில்லான பயணம் போக வேண்டும் என்ற ஆசை நம் எல்லோருக்குமே உண்டு. வெறுமனே சுற்றுலா சென்று இடங்களை சுற்றிப்பார்ப்பதை விடவும், உடலுக்கும் மனதுக்கும் சவாலான சூழ்நிலைகளை கொண்டிருக்கும் இடங்களுக்கு செல்வது நம்மை பற்றி நமக்கே தெரியாத விஷயங்களை வெளிக்கொண்டுவர பேருதவியாக இருக்கும்.
அப்படிப்பட்ட திரில்லான ஒரு பயணம் போக இந்தியாவில் இருக்கும் மிகச்சிறந்த இடங்களில் ஒன்று தான் ரோஹ்டங் கணவாய் எனப்படும் 'மரணப் பள்ளத்தாக்கு' ஆகும். இமய மலையில் அமைந்திருக்கும் இந்த இடம் பேரழகையும், பேராபத்தையும் ஒருங்கே கொண்டிருக்கிறது. அதிசுவாரஸ்யம் நிறைந்த இவ்விடத்திற்கு 'த்ரில்' ஒரு பயணம் மேற்கொள்வோம் வாருங்கள்.

ரோஹ்டங் கணவாய் :
ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள மணாலியில் இருந்து காஷ்மீர் மாநிலத்தில் இருக்கும் லேஹ் வரையிலான தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே அமைந்திருக்கிறது இந்த ரோஹ்டங் கணவாய். கடல்மட்டத்தில் இருந்து 13,050 அடி உயரத்தில் அமைந்திருக்கும் இந்த இடத்தில் வருடத்தின் பல மாதங்கள் உறைய வைக்கும் குளிர் நிலவுகிறது.
Saad Faruque

ரோஹ்டங் கணவாய் :
மணாலியில் இருந்து 51கி.மீ தொலைவில் அமைந்திருக்கும் இந்த கணவாய் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த இடமாகவும், குல்லு பள்ளத்தாக்கு மற்றும் லாகுல் - ஸ்பிதி ஆகிய மாவட்டங்களை சென்றடைவதற்கு முக்கிய பாதையாகவும் இருக்கிறது.
meamodus

ரோஹ்டங் கணவாய் :
கடல்மட்டத்தில் இருந்து மிக அதிக உயரத்தில் இருப்பதால் கணிக்க முடியாத பனிப்புயல்களால் இந்த இடம் அடிக்கடி தாக்கப்படுகிறது.
இதன் காரணமாக வருடத்தில் மே - நவம்பர் வரையிலான மாதங்கள் மட்டுமே பொதுமக்களின் பயன்பாட்டுக்காக இந்த ரோஹ்டங் கணவாய் சாலை திறக்கப்படுகிறது.
B Balaji

ரோஹ்டங் கணவாய் :
பழங்காலத்தில் திபெத், சீனா போன்ற நாடுகளுக்கு செல்ல வாணிபர்கள் இந்த பாதையை பயன்படுத்தியிருக்கின்றனர். அந்த சமயங்களில் இங்குள்ள கடுமையான குளிரின் காரணமாக ஏராளமானவர்கள் உயிரிழந்திருக்கின்றனர்.
அதனாலேயே தான் இந்த இடத்திற்கு 'மரணப் பள்ளத்தாக்கு' என்ற பெயர் வந்திருக்கிறது.
Ankit Solanki

கனவுப்பயணம் :
இந்தியாவில் பயணவிரும்பிகள் அனைவரும் கட்டாயம் செல்ல வேண்டிய கனவுப்பயணம் என்று சொல்லப்படுவது 'மணாலி - லெஹ்' சாலைப்பயணம் தான்.
இந்த பயணத்தின் வழியில் தான் இந்த ரோஹ்டங் கணவாயும் அமைந்திருக்கிறது குறிப்பிடத்தக்கது .
Motographer

கனவுப்பயணம் :
ரோஹ்டங் கணவாயின் வழியாக பயணிக்கும் எவரும் அதன் பேரழகில் நிச்சயம் சொக்கிப் போய்விடுவார்கள் என்பது நிச்சயம்.
அதிலும் குறிப்பாக பனி விலகி பசுமை நிறைந்திருக்கும் கொடைகாலகட்டத்தில் இங்கே வந்தால் ஏதோ சொர்கத்துக்கு வந்துவிட்டது போல தோன்றும்.
Vikramdeep Sidhu

கனவுப்பயணம் :
வெறுமனே இயற்கை காட்சிகளை ரசிப்பது என்பதை தாண்டி அற்புதமான பொழுதுபோக்கு அம்சங்களும் ரோஹ்டங் கணவாயின் அருகே இருக்கின்றன.
இங்கே இமயமலையில் மட்டுமே இருக்கும் யாக் என்ற எருதின் மேல் அமர்ந்து சவாரி செய்யலாம், பாராகிளைடிங், பனிச்சறுக்கு போன்ற சாகச விளையாட்டுகளிலும் ஈடுபடலாம்.
B Balaji

கனவுப்பயணம் :
ரோஹ்டங் கணவாயில் உள்ள மலைப்பகுதியில் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபடும் ஒரு சுற்றுலாப்பயணி.
B Balaji

கவனம் தேவை :
இங்கே அதிகமான ராணுவ வண்டிகளின் போக்குவரத்து மற்றும் சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகமாக இருப்பதால் சில சமயங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்ப்படுகிறது.
Axel Drainville

கவனம் தேவை :
அது போன்ற நெரிசல் மிகுந்த நேரங்களிலும், கடுமையான பனிப்பொழிவு இருக்கும் சமயங்களிலும் கரணம் தப்பினால் மரணம் என்ற நிலையில் இருக்கும் இந்த ரோஹ்டங் கணவாய் சாலையில் மிக கவனமாக வாகனத்தை ஓட்டுவது அவசியமாகும்.
Axel Drainville

எப்படி அடைவது ? :
இந்த ரோஹ்டங் கணவாயைமணாலி வந்து அங்கிருந்து தனியார் வாடகை கார்கள் மூலமாகவோ, இருசக்கர வாகனங்கள் மூலமாகவோ சென்றடையலாம்.
sandeepachetan.com travel photography

எப்படி அடைவது ? :
ரிஸ்க் எடுப்பதும், வித்தியாசமான இடங்களுக்கு செல்வதும் உங்களுக்கும் மிகவும் பிடிக்குமென்றால் சீக்கிரம் நண்பர்களுடன் ரோஹ்டங் கனவாய்க்கு சென்று வாழ்கையை கொண்டாடி மகிழுங்கள்.
Sajin K

புகைப்படங்கள் :
இந்த ரோஹ்டங் கணவாயின் சில பேரழகு மிக்க புகைப்படங்களின் தொகுப்பை காண்போம் வாருங்கள்.
Axel Drainville

புகைப்படங்கள் :
பசுமைப்போர்வை !!
Diana

புகைப்படங்கள் :
பசுமைப்போர்வை !!
marksquared

புகைப்படங்கள் :
ரோஹ்டங் கணவாயை பற்றிய மேலும் பல பயனுள்ள தகவல்களை தமிழ் பயண வழிகாட்டியில் தெரிந்துகொள்ளுங்கள்.
Richard Weil



Click it and Unblock the Notifications





