Search
  • Follow NativePlanet
Share
» »சைஹா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது

சைஹா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது

சைஹா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது

மிசோரத்தில் உள்ள எட்டு மாவட்டங்களில் ஒன்றான சைஹா மிசோரத்தின் தெற்கு முனையில் அமைந்துள்ளது. இதன் மாவட்ட தலைமையகத்தையும் சைஹா என்று தான் அழைப்பார்கள். மாரா தன்னாட்சி உரிமையுடைய மாவட்ட மன்றத்திற்கும் இதுவே மாவட்ட தலைமையமாக செயல்படுகிறது. மிசோரத்தில் உள்ள மூன்று மாவட்ட மன்றங்களில் மாரா தன்னாட்சி உரிமையுடைய மாவட்ட மன்றமும் ஒன்றாகும். சைஹா மாவட்டத்திற்கு வடக்கு மற்றும் வட மேற்கு பகுதியில் லுங்க்லெய் மாவட்டம் அமைந்துள்ளது. அதற்கு மேற்கே லவ்ங்க்டை மாவட்டமும் தெற்கு மற்றும் கிழக்கு பகுதியில் மியன்மாரின் சில பகுதிகளும் உள்ளன.

மிசோரத்தில் ஐசவ்ல் மற்றும் லுங்க்லெய்க்கு அடுத்து பெரிய நகரமாக விளங்குளிறது சைஹா. உள்ளூர் பாஷையான மாராவில் உள்ள வார்த்தையான 'சியஹா'வில் இருந்து தான் சைஹா அதன் பெயரை பெற்றது. இதனை இரண்டு பகுதியாக பிரிக்கலாம் - 'சை' என்றால் யானை என்று பொருளாகும், 'ஹா' என்றால் பல் என்று பொருளாகும். சைஹா என்றால் யானையின் பல் என்று அர்த்தமாகும். இந்த இடத்தில் யானையின் பற்கள் பல இருந்ததால் இதனை சைஹா என்று அழைக்க ஆரம்பித்து விட்டனர். இங்கே மாரா இனத்தை சேர்ந்த பழங்குடியினர் மற்றும் மியன்மாரை சேர்ந்த மக்களே அதிகமாக வசிக்கின்றனர். இங்குள்ள பாலா டிபோ ஏரி, சைகோ மற்றும் மவ்மா மலை போன்றவைகள் சைஹா சுற்றுலாவை முழுமை அடையச் செய்யும்.

சைஹாவை அடைவது எப்படி?

சைஹாவை அடைவது எப்படி?

மிசோரத்தின் தலைநகரான ஐசவ்லிலிருந்து 305 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது சைஹா. தேசிய நெடுஞ்சாலை 54 இந்த மாவட்ட தலைமையகத்திற்கு உயிர் நாடியாக விளங்குகிறது. ஐசவ்லில் இருந்து சைஹாவிற்கு பல மாநில பேருந்துகள் இயங்குவதால் இங்கே சாலை வழியாக சுலபமாக வந்தடையலாம்.

PC: Official Site

சைஹாவின் வானிலை

சைஹாவின் வானிலை

சைஹா இடைவெப்பக்காலநிலையை கொண்டுள்ளது. அதனால் இங்கே வருடம் முழுவதும் இனிமையான வானிலை நிலவும். கோடைக்காலம் இதமாகவும், பருவக்காலம் ஈரப்பதத்துடன் கன மழையுடன், குளிர் காலம் ரம்மியமாகவும் குறைவான குளிருடன் இருக்கும்.

ஐசவ்லிலிருந்து சைஹாவிற்கு பயணிக்க சுருக்கமான வழி சில்சார் மற்றும் லுங்க்லெய்-தென்சவ்ல் சாலைகளாகும். தேசிய நெடுஞ்சாலை 54B வழியாக ஐசவ்லை ஐந்தரை மணி நேரத்தில் பயணிக்கலாம். இந்த இரண்டு நகரங்களுக்கும் இடையே சீரான பேருந்து வசதிகள் உள்ளது. மேலும் பல தனியார் பேருந்துகளும் இயங்குகின்றன.

PC: Official Site

பயணம்

பயணம்

சைஹாவிற்கு மிக அருகில் இருக்கும் இரயில் நிலையம் தெற்கு அஸ்ஸாமில் உள்ள சில்சாரில் உள்ளது. சைஹாவில் இருந்து 479 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது சில்சார். சில்சார் இரயில் நிலையத்திலிருந்து லும்டிங் என்ற இடத்திற்கு குறுகிய இரயில் பாதை வழியாக செல்ல வேண்டும். அங்கிருந்து சுற்றுலாப் பயணிகள் குவஹடிக்கு இரயில் மூலம் செல்லலாம். சைஹாவிற்கு இரயில் மூலமாக செல்வது அவ்வளவு வசதியாக இருக்காது.

சைஹாவிற்கு அருகில் இருக்கும் விமான நிலையம் ஐசவ்லில் 305 கி.மீ. தொலைவில் உள்ளது. லெங்புய் விமான நிலையம் என்று அழைக்கப்படும் இந்த விமான நிலையம் இந்த மாநிலத்தில் உள்ள ஒரே விமான நிலையமாகும். இங்கிருந்து கொல்கத்தா மற்றும் குவஹடிக்கு தினசரி விமான சேவை உள்ளது. வடகிழக்கு பகுதியில் உள்ள இரண்டாவது பெரிய விமான நிலையமாக இது திகழ்கிறது. விமான நிலையத்திலிருந்து சைஹாவிற்கு நேரடி போக்குவரத்து வசதிகள் உள்ளன.

PC: Official Site

 லுங்க்லெய்

லுங்க்லெய்


மிசோரத்தில் உள்ள ஏழு மாவட்டங்களில் ஒன்றாக விளங்குகிறது லுங்க்லெய். இதனை லுங்க்லெஹ் என்றும் அழைப்பார்கள். அதற்கு பாறையால் செய்யப்பட்ட பாலம் என்று பொருள். ட்லவ்ங் ஆற்றின் கிளையாறாக உள்ள கசிஹ் என்ற ஆற்றிற்கு அருகில் பாலம் போலவே காட்சி அளிக்கும் பாறை ஒன்று உள்ளது. இந்த பாறையாலேயே லுங்க்லெய் இந்த பெயரை பெற்றது. லுங்க்லெய் நகரத்தில் வளமையான பல தாவர வகைகளையும் விலங்கின வகைகளையும் காணலாம். இயற்கை விரும்பிகளுக்கு சொர்கமாக விளங்குகிறது இந்நகரம். லுங்க்லெய்யிலிருந்து 50 கி.மீ. தொலைவில் உள்ள மோல்செங் என்ற கிராமத்தில் புத்தரின் செதுக்கிய ஓவியம் ஒன்றை காணலாம். இதில் அதிசயப்படுகிற விஷயம் என்னவென்றால் இந்த மாநிலத்திலேயே இந்த ஒரு இடத்தில் மட்டும் தான் பழங்காலத்தை சேர்ந்த இந்த புத்த ஓவியம் உள்ளது. இது ஒன்று மட்டும் இங்கே எப்படி வந்தது என்ற மர்மம் நீடிப்பதால் லுங்க்லெய் சுற்றுலாவை சுவாரசியமாக மாற்றியுள்ளது இது.

PC: Official Site

 லுங்க்லெய் ஈர்ப்புகள்

லுங்க்லெய் ஈர்ப்புகள்

லுங்க்லெய்யை சுற்றி பல கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலங்கள் அமைந்துள்ளன. கான்க்லங் வனவிலங்கு சரணாலயம், காம்சவி பூங்கா, சைகுடி ஹால் மற்றும் மிசோரத்தில் உள்ள துவம்லுயையா மோல் என்ற புற்தரையிலான கால்பந்து மைதானம் ஆகிவைகள் அவற்றில் சில. மேலும் நதியோரமாக உள்ள பல சுற்றுலாத் தலங்களுக்காகவும் லுங்க்லெய் சுற்றுலா புகழ் பெற்று விளங்குகிறது.

லுங்க்லெய்யை அடைவது எப்படி?

மிசோரத்தின் தலைநகரமான ஐசவ்லில் இருந்து 175 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது லுங்க்லெய்யின் மாவட்ட தலைமையகம். தலைநகரோடு மட்டுமல்லாமல் மிசோரத்தின் உள்ள மற்ற பகுதிகளோடும் லுங்க்லெய் இணைக்கப்பட்டுள்ளது.

லுங்க்லெய்யின் வானிலை

லுங்க்லெய் மாவட்டத்தில் வருடம் முழுவதும் இனிமையான வானிலையே நிலவும். அனைத்து காலங்களிலும் இதன் வானிலை எப்போதாவது தான் அதிகரிக்கும், அதுவும் தாங்கிக்கொள்ளும் அளவில் தான் இருக்கும். இதனால் வருடத்தில் அனைத்து காலங்களிலும் இங்கே சுற்றுலாப் பயணிகள் வருவதுண்டு.

PC: Official Site

More News

    Read more about: mizoram
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+