Search
  • Follow NativePlanet
Share
» »வெறும் ரூ.1050 இருந்தால் போதும் – நீங்கள் சேலத்திலிருந்து கொச்சிக்கு விமானத்தில் பறக்கலாம்!

வெறும் ரூ.1050 இருந்தால் போதும் – நீங்கள் சேலத்திலிருந்து கொச்சிக்கு விமானத்தில் பறக்கலாம்!

ஏழை எளிய மக்களும் கூட விமானத்தில் பயணிக்க வேண்டும் என்பதற்காக இந்தியாவின் பல்வேறு இடங்களில் உள்ள விமான ஆபரேட்டர்களும் மலிவு விலை விமான சேவைகளை இயக்கி வருகின்றனர். அதில் ஒரு சில சேவைகள் நமது தமிழ்நாட்டிலே இயக்கப்படுகிறது. வெறும் ரூ.1050 இருந்தால் போதும் - நீங்கள் சேலத்திலிருந்து கொச்சிக்கு விமானத்தில் பறக்கலாம் என்று உங்களுக்கு தெரியுமா? இந்த சேவைகளை புக் செய்வது எப்படி? எந்த இணையத்தளத்தில் புக் செய்வது என்று இங்கே பார்ப்போம்!

சேலம் to கொச்சி மலிவு விலையில் பறக்கலாம்

நகரைச் சுற்றி முக்கிய ஆட்டோமொபைல் உற்பத்தி அலகுகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய தொழில்கள் இருப்பதால், தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை, 'இந்தியாவின் டெட்ராய்ட்' என்றும் அழைக்கப்படுகிறது. சென்னையில் இருந்தும் தமிழகத்தின் பல்வேறு முக்கிய நகரங்களில் இருந்தும் மலிவு விலையில் விமான சேவைகள் வழங்கப்படுகின்றன. அதே போல சேலத்தில் இருந்தும் கொச்சிக்கு ரூ.1050 டிக்கெட் கட்டணத்தில் விமான சேவைகள் வழங்கப்படுகின்றன.

salemtokochiflightticketrate

சேலத்தில் விமான நிலையம்

தமிழ்நாட்டை பொறுத்தவரை சென்னை, கோவை,மதுரை, திருச்சி, தூத்துக்குடி ஆகிய விமான நிலையங்களில் விமானங்கள் இயக்கப்படுகிறது. இதில் தூத்துக்குடியை தவிர சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய விமான நிலையங்கள் சர்வதேச விமானங்கள் வந்து செல்கின்றன. மேற்கு மாவட்டங்கள் தொழில் வளர்ச்சியில் முன்னணியில் உள்ள நிலையில் கோவைக்கு அடுத்தபடியாக சேலத்தில் விமான நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

பரபரப்பாக இயங்கும் சேலம் விமான நிலையம்

அதன்படியே சேலம் காமலாபுரம் விமான நிலையம் அமைக்கப்பட்டது. தொடர்ந்து உதான் திட்டத்தின் கீழ் சென்னை- சேலம் இடையே கடந்த 2018 மார்ச் மாதம் முதல் விமானம் இயக்கப்பட்டது. இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதன் காரணமாகவே பெரும்பாலான நேரத்தில் இந்த ரூட்டில் விமானம் 85% வரை நிரம்பி வந்தது.

ஏழை எளிய மக்களின் விமான சேவைக்காக UDAN

UDAN முழு அர்த்தம் 'உதே தேஷ் கா ஆம் நகரிக். ஒரு பிராந்திய இணைப்புத் திட்டமான இது நாட்டின் கிராமப்புறங்களை குறைந்த கட்டணத்தில் விமானம் மூலம் இணைக்கிறது. UDAN 4.0 குறைந்த கட்டண விமானங்களுக்கு 78 புதிய வழித்தடங்களைக் கொண்டுள்ளது. பிராந்திய இணைப்புத் திட்டம் 200 முதல் 800 கிலோமீட்டர் வரையிலான பாதைகளுக்குப் பொருந்தும். இந்த திட்டத்தின் கீழ் நிறைய விமான நிலையங்களும் விமான சேவைகளும் செயல்பட்டு வருகின்றன. நாட்டின் மூலை முடுக்கையும் கூட விமானம் மூல இணைப்பதே இதன் நோக்கமாகும்.

salemtokochiflightticketrateisjustrs

இந்தியாவின் பல்வேறு இடங்களில் UDAN சேவை

இந்த குறைந்த கட்டணத் திட்டம் பெரும்பாலும் வடகிழக்கில் உள்ள வழித்தடங்களுக்கு பொருந்தும், பெங்களூரு-சேலம் மற்றும் கொச்சி-சேலம் போன்ற கூடுதல் வழிகளில் இதே போன்ற கட்டணங்கள் வழங்கப்படுகின்றன. டிக்கெட் முன்பதிவு செய்யும் போது, அடிப்படைக் கட்டணத்தில் கூடுதல் வசதிக் கட்டணம் விதிக்கப்படும்.

பெங்களூரு to சேலம் வெறும் ரூ.1050 மட்டுமே

சேலத்தில் இருந்து கொச்சிக்கு நீங்கள் வெறும் ரூ.1050 செலுத்தி விமானத்தில் பயணிக்கலாம்.

Goibibo - ரூ.1050

Make my trip - ரூ..1050

Ixigo - ரூ.1470

Yatra - ரூ.1470

நீங்கள் மேற்கண்ட இணையத்தளங்களில் உங்கள் பயண விவரங்களை கொடுத்து டிக்கெட் புக் செய்து கொள்ளலாம்!

More News

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+