Search
  • Follow NativePlanet
Share
» » ஷோஜா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது

ஷோஜா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது

ஷோஜா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது

ஷோஜா எனும் இந்த அழகிய சுற்றுலாத்தலம் நகரம் ஹிமாச்சல் பிரதேஷ் மாநிலத்தில் சேராஜ் பள்ளத்தாக்கு பகுதியில், ஜலோரி பாஸ் எனும் மலைப்பாதையிலிருந்து 5 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 2368 மீ உயரத்தில் ஷோஜா வீற்றிருக்கிறது. பனிபடர்ந்த இமயமலையை இப்பகுதியிலிருந்து நன்றாக பார்த்து ரசிக்கலாம்.

 ஷோஜா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
Nishant Chaudhary


சேரோல்சார் ஏரி, ரகுபுர் கோட்டை, நீர்வீழ்ச்சி தளம், ஜலோரி பாஸ் மற்றும் தீர்த்தன் பள்ளத்தாக்கு போன்றவை ஷோஜாவில் முக்கியமான சுற்றுலா அம்சங்களாகும். ஜலோரி பாஸ் அதன் உறுதியான உலோகப்பாதைக்காக பிரசித்தி பெற்றிருப்பதோடு ஷோஜாவை சிம்லா மற்றும் இதர நகரங்களுடன் இணைக்கிறது. ஜலோரி பாஸ் பாதையிலிருந்து 5 கி.மீ தூரத்தில் உள்ள செரோல்சார் ஏரி ஷோஜாவில் உள்ள முக்கியமான சுற்றுலா அம்சமாகும். முக்கிய ஆன்மீகத்தலமான பூதி நாகின் கோயில் இப்பகுதியில் அமைந்துள்ளது. 100 மகன்களை கொண்டுள்ள தெய்வமாக கருதப்படும் பூதி நாகின் இப்பிரதேசத்தை காக்கும் காவல் தெய்வமாக வணங்கப்படுகிறது. வாட்டர்ஃபால் பாயிண்ட் எனப்படும் நீர்வீழ்ச்சிப்பகுதி ஷோஜாவில் தவறவிடக்கூடாத ஒரு அம்சமாகும்.

 ஷோஜா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது

Nathan Pratyksh Khanna

இயற்கையின் மடியில் வீற்றிருக்கும் இந்த நீர்வீழ்ச்சி பகுதி அசரவைக்கும் இயற்கை எழிலுடன் காட்சியளிக்கிறது. ஷோஜாவிலிருந்து 1 கி.மீ தூரத்திலேயே உள்ள இந்த இடத்திற்கு காலை நடைப்பயிற்சி மேற்கொள்ள ஏராளமானோர் வருகின்றனர். இந்த நீர்வீழ்ச்சியின் நீர் குளுமையும் இனிப்பும் நிரம்பியதாக காணப்படுகிறது. ஷோஜா சுற்றுலாஸ்தலமானது விமான மார்க்கம், ரயில் மார்க்கம் மற்றும் சாலை மார்க்கம் போன்ற போக்குவரத்து வசதிகள் மூலம் எளிதில் சென்றடையும்படி அமைந்துள்ளது. குலு மணாலி விமான நிலையம் என்று அழைக்கப்படும் புந்தர் விமான நிலையம் ஷோஜாவுக்கு அருகில் 80 கி.மீ தூரத்தில் உள்ளது. இங்கிருந்து சிம்லா மற்றும் டெல்லிக்கு விமான சேவைகள் உள்ளன.

ஜோகீந்தர்நகர் ரயில் நிலையம் ஷோஜாவுக்கு அருகில் உள்ள ரயில் நிலையமாகும். இது164 கி.மீ தூரத்தில் உள்ளது. சாலை மார்க்கமாக பயணிக்க விரும்பும் பயணிகள் குல்லு நகரத்திலிருந்து பேருந்துகள் மூலமாக ஷோஜா சுற்றுலாத்தலத்தை அடையலாம். ஷோஜா பகுதியின் பருவநிலை வருடம் முழுக்க மிதமானதாகவே காணப்படுகிறது. இருப்பினும் கோடைக்காலம் சுற்றுலாப்பயணத்துக்கு ஏற்றதாக உள்ளது.

More News

    Read more about: himachal pradesh
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+