Search
  • Follow NativePlanet
Share
» »சுற்றுலா கட்டணத்தை ரூ. 734 ஆக குறைத்த தாய்லாந்து – நீங்கள் எப்போது செல்லப் போகிறீர்கள்!

சுற்றுலா கட்டணத்தை ரூ. 734 ஆக குறைத்த தாய்லாந்து – நீங்கள் எப்போது செல்லப் போகிறீர்கள்!

இந்தியாவில் உள்ள சுற்றுலாப் பயணிகள் எவரும் வாழ்வில் ஒருமுறையேனும் தாய்லாந்திற்கு சென்று வந்துவிட வேண்டும் என்று நினைப்பார்கள். அழகிய இயற்கை சார்ந்த இடங்கள், புலி மற்றும் யானைகள் முகாம், கண்களை பறிக்கும் அழகிய தீவுகள், துடிப்பான பார்ட்டிகள் என மலிவு விலையில் அனைத்து அனுபவத்தையும் பெற்றிட உலகெங்கிலும் இருந்து சுற்றுலாப் பயணிகள் தாய்லாந்திற்கு வருகை தருகின்றனர். இந்நிலையில் தாய்லாந்து சர்வதேச பார்வையாளர்களுக்கான சுற்றுலா கட்டணத்தை ரூ. 734 ஆக குறைத்துள்ளது. அதனைப் பற்றிய கூடுதல் விவரங்கள் இதோ!

சுற்றுலா கட்டணம் வெறும் ரூ. 734

சுற்றுலா கட்டணம் வெறும் ரூ. 734

அதிக பார்வையாளர்களை ஈர்ப்பதற்கும் சுற்றுலாவில் வருவாயைக் கொண்டுவருவதற்கும் தாய்லாந்து தொடர்ந்து தனது புது புதுபயணத் திட்டங்களை உருவாக்கி வருகிறது. சமீபத்திய அறிக்கைகளின்படி, ஜூன் மாதம் முதல், சுற்றுலாப் பயணிகளுக்கு 300 THB அதாவது இந்திய ரூபாயில் 734 என்ற சுற்றுலாக் கட்டணத்தை அறிமுகப்படுத்த நாடு தயாராகி வருகிறது.

சுற்றுலாவில் முன்னணி வகிக்கும் தாய்லாந்து

சுற்றுலாவில் முன்னணி வகிக்கும் தாய்லாந்து

தாய்லாந்தின் பொருளாதாரத்தின் மிக முக்கியமான துறைகளில் சுற்றுலா - குறிப்பாக ஆசியாவின் பிற நாடுகளில் இருந்து. இந்தக் கட்டணம் நாட்டிற்குள் சுற்றுலாத் தலங்களை மேம்படுத்துவதற்கும், அதிக கூட்டத்தை ஈர்க்கவும் உதவுவது மட்டுமல்லாமல், தேவைப்படும் பயணிகளுக்கும் உதவும். தொற்றுநோய்க்கு முன்னர் தாய்லாந்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுற்றுலா 12 சதவீதத்தைக் கொண்டிருந்தது.

சிலரிடம் இந்த கட்டணமும் வசூலிக்கப்படாது

சிலரிடம் இந்த கட்டணமும் வசூலிக்கப்படாது

தாய்லாந்து சுற்றுலாத்துறை அமைச்சர் பிபாட் ரட்சகிட்பிரகர்ன், "வேலை அனுமதி மற்றும் எல்லைப் பாஸ் உள்ள வெளிநாட்டினரிடம் இருந்து கட்டணம் வசூலிக்கப்படாது" என்று கூறினார். தாய்லாந்து இந்த ஆண்டு 25 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை எதிர்பார்க்கிறது என்றும் அவர் கூறினார். இதன் பொருள் சுற்றுலாக் கட்டணத்துடன் ஏராளமான வருவாயை உருவாக்க முடியும், இது அதிக பார்வையாளர்களை ஈர்க்கும் தேசிய நிதி திட்டங்களுக்கு மேலும் உதவும்.

பல முயற்சிகளை எடுத்து வரும் தாய்லாந்து

பல முயற்சிகளை எடுத்து வரும் தாய்லாந்து

தாய்லாந்து நாட்டில் சுற்றுலாவை மேம்படுத்தவும் அதிக பார்வையாளர்களை ஈர்க்கவும் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்த சுற்றுலாக் கட்டணம் மேலும் சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தாய்லாந்தில் உள்ள தனித்துவமான சுற்றுலாத் தலங்கள்

தாய்லாந்தில் உள்ள தனித்துவமான சுற்றுலாத் தலங்கள்

1. ஒருபோதும் தூங்காத நகரம் என்றழைக்கப்படும் தாய்லாந்தின் தலைநகரான பாங்காக்.

2. தாய்லாந்தின் மிகப்பெரிய அழகிய தீவான ஃபூகெட் தீவு

3. தாய்லாந்தின் தென்கிழக்கு பகுதியில் உள்ள சும்போன் தீவுக் குழுவில் அழகிய தீவான கோ தாவோ

4. நாம் பல்வேறு பாடல்களிலும் திரைப்படங்களிலும் கண்டு ரசித்த பி பி தீவுகள்

5. தாய்லாந்தின் பார்ட்டி ஹப் என்று பிரபலமாக அறியப்படும் பட்டாயா

6. தாய்லாந்தில் உள்ள கோயில்கள், மடங்கள், அரண்மனைகள் போன்ற தொல்பொருள் தளங்களைக் கொண்ட அழகிய நகரான அயுத்தயா

7. தாய்லாந்தின் பழமையான மாகாணங்களில் ஒன்றான கிராபி தீவு

8. தாய்லாந்தின் பழமையான மற்றும் அதிகம் பார்வையிடப்பட்ட தேசிய பூங்காவான காவோ யாய் தேசிய பூங்கா

9. மே ஹாங் சோனுக்கும் சியாங் மாய்க்கும் இடையில் அமைந்துள்ள அழகிய சிறிய நகரமான பை

10. தாய்லாந்தின் கலாச்சாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் வரலாற்று இடிபாடு நகரமான லோப்புரி

இவை மட்டுமில்லாமல் கோ பங்கன், கோ சாமுய், சியாங் ராய், ஹோ ஹின், காஞ்சனபுரி, சூரத் பானி, கோ லைப், ட்ராங், சுகோதை, கோ லாண்டா, ரயிலி, நாங் கோ போன்றவையும் தாய்லாந்தின் அழகிய சுற்றுலாத் தலங்களாகும்! நீங்கள் எப்போது தாய்லாந்து ட்ரிப் பிளான் பண்ணப் போகிறீர்கள்!

More News

    Read more about: thailand
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+